
அதன் தொடர்ச்சியாக, பத்திரிக்கையாளர்கள் கைது, பத்திரிகை அலுவலகங்கள் தாக்குதல் ஜனநாயக ரீதியா பேச்சு சுதந்திரம் பறிப்பு, தொழில் நிறுவனங்கள் மீதான சூறையாடுதல், மத ரீதியான உரிமைகள் மறுப்பு போன்ற பல்வேறு சர்வாதிக்கார அடக்கு முறைகளை சிறுபான்மை தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் மீது திட்டமிட்டு நடத்தி வருகிறது சிங்கள பேரினவாத அரசு.
இந்நிலையில் கொழும்பு நகரின் முன்னாள் துணை மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அஸத் ஸாலி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் நாட்டில் ஒரு வார இதழுக்கு கொடுத்த பேட்டியை காரணமாக காட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது சிங்கள பேரினவாத இயக்கங்களின் அக்கிரமங்களை எதிர்த்து குரல் எழுப்பி வரும் மிகச் சிலரில் அஸத் ஸாலி முக்கியமானவர்.
இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சி என்று ராஜபக்சே மார்தட்டி கொண்டாலும் தினமும் ஏதாவது ஒரு செய்தி ராஜபக்சேவின் சர்வாதிகார ஆட்சியை அம்பலத்து கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. ஹிட்லரை யாரும் நேரில் பார்க்க வில்லையே என்று வருந்த வேண்டாம். ஹிட்லரை பார்க்க வேண்டுமா இலங்கைக்கு போங்கள்.
*ஒன்றரை இலட்சம் உயிர்களை வேட்டையாடிய மனித மிருகம்* thanks, sinthikkavum.
0 comments:
Post a Comment