3 May 2013
அஹ்மதாபாத்:2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு நிரபராதிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி பி.பி.பாண்டேயை கைதுச் செய்ய சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.1980-ஆம் ஆண்டு பாட்சில் ஐ.பி.எஸ் அதிகாரியான பி.பி.பாண்டே தற்போது குஜராத் மாநில கூடுதல் டி.ஜி.பியாக உள்ளார்.பாண்டேவை கைதுச் செய்ய அனுமதிவேண்டும் என்ற சி.பி.ஐயின் கோரிக்கையை நீதிபதி கீதா கோபி ஏற்றுக்கொண்டார்.
முன்னர் பி.பி.பாண்டேவை கைதுச் செய்ய அனுமதி கோரி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடிச் செய்த கூடுதல் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ரத்துச் செய்தது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை கொல்லவந்த லஷ்கர்-இ-தய்யிபா அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை மோடியின் போலீஸ் சுட்டுக்கொலைச் செய்தது.இந்த மாபாதக சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த மனுவைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட விசாரணையில் போலி என்கவுண்டர் என்பது நிரூபணமானது.இவ்வழக்கை தற்போது விசாரித்து வரும்சி.பி.ஐ இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 போலீஸ் அதிகாரிகளை கைதுச் செய்துள்ளது.
0 comments:
Post a Comment