Monday, May 20, 2013

ஹிந்துத்துவா பாசிச தீவிரவாதக்குழுக்களுடன் தொடர்புடைய ஹிண்டராஃபின் வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி!

                      20 May 2013 waythamoorthy
 
     கோலாலம்பூர்:இந்தியாவில் உள்ள பாசிச ஹிந்துத்துவா தீவிரவாதக்குழுக்களின் மலேசியா ஏஜண்டாக செயல்படும் அமைப்பு ஹிண்ட்ராஃப். இதன் தலைவரான வேதமூர்த்தி ஒரு ஹிந்துத்துவா பாசிசவாதி ஆவார். இந்திய வம்சா வழி மக்களுக்காக போராடுவதாக கூறி தமது ஹிந்துத்துவா அஜண்டாக்களை மலேசியாவில் நடைமுறைப்படுத்துவதே இந்த அமைப்பின் திட்டமாகும். இந்த அமைப்பின் பெயரிலே அதன் வகுப்புவாத சிந்தனையை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும். hindraf -அதாவது Hindu rights action force ஹிந்துக்கள் உரிமைகளுக்கான நடவடிக்கை படை என்பது.
 
     2007-ம் ஆண்டில் இந்திய மக்களின் உரிமைகளை வலியுறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, ஹிண்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த வேதமூர்த்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் விடுதலையானவுடனேயே நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த வேதமூர்த்தி, அண்மையில் மீண்டும் மலேசியாவுக்குச் சென்ற பின்னர், கடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான ஆளுங்கட்சிக்கே ஆதரவளித்தார்.
 
     2007-ஆம் ஆண்டு மலேசியாவில் போராட்டம் நடந்தபோது சென்னை வந்த வேதமூர்த்தி, ஹிந்துத்துவா தீவிரவாத குழுவான இந்துமுன்னணியின் ராமகோபாலனை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு நஜீப் ரஸ்ஸாக் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பின்னர், தமது அமைச்சரவையை அறிவித்துள்ளார். அதில், ஹிந்துத்துவா தீவிரவாதக் குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ள வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
     இந்நிலையில்,தான் அமைச்சரவையில் சேர்ந்தாலும், ஹிண்ட்ராஃப் அமைப்பு ஒரு அரசியல் கட்சியாக மாறாது எனவும் வேதமூர்த்தி உறுதியாகக் கூறுகிறார். அரசியல் ஆதாயத்திற்காக ஹிந்துத்துவா தீவிரவாதக்குழுக்களின் ஆதரவைப் பெற்ற வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலம் நஜீப் ரஸ்ஸாக்கின் அரசு ஒரு வரலாற்று ரீதியான தவறைச் செய்துள்ளது. இந்தியாவில் சகோதரமுஸ்லிம்களை கலவரங்கள், இனப்படுகொலைகள் மூலம் கொன்று குவித்த பாசிச ஹிந்துத்துவா தீவிரவாதக்குழுக்களின் ஆதரவாளரான வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவியை வழங்கி தமது சமூகத்திற்கு ஒரு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார் நஜீப் ரஸ்ஸாக்.

0 comments:

Post a Comment