நெல்லை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா அவர்கள் தலைமை தாங்கினார் .இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான் கான், மாவட்ட பொது செயலாளர் அன்வர், மாவட்ட துணை தலைவர் சாகுல் உஸ்மானி மற்றும் கான் மாவட்ட செயாலாளர் ஹயாத் முஹம்மத், ஹபீப் ரஹ்மான் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .செயற்குழு கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அணைத்து பள்ளிகளிலும் 25%ஏழை மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யபடுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
2.சமீபத்தில் முக்கூடல் அருகில் தாமிரபரணி நதி கரையில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட ஆலைக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நிரந்தரம் ஆக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Add caption |
0 comments:
Post a Comment