Friday, May 3, 2013

நரேந்திரமோடிக்கு விசா தடையை நீட்டிக்கவேண்டும்:சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்!

                               2 May 2013 Modi1
 
வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை தொடரவேண்டும் என்று அமெரிக்க பாராளுமன்றம் அமைத்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.
 
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாறு காணாத அளவுக்கு மிகக்கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலையை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்தினர்.இந்த கொடூர இனப்படுகொலைக்கு அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.கவின் முதல்வரான நரேந்திரமோடி தலைமை தாங்கினார்.இதனைத்தொடர்ந்து அமெரிக்க அரசு மோடிக்கு விசா வழங்க தடை விதித்தது.
 
இந்நிலையில் பா.ஜ.க கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக பரப்புரைச் செய்யப்பட்டு பிரதமர் கனவில் மூழ்கியிருக்கும் மோடி, தனது இமேஜை சரிச்செய்ய பல்வேறு தகிடுத் தித்தங்களை செய்து வருகிறார்.அமெரிக்காவைச் சார்ந்த எம்.பிக்கள் சிலரை பணம் செலவழித்து குஜராத்திற்கு வரவைத்தார்.அவர்களும் தங்கள் நன்றி விசுவாசத்தை காட்டும் விதமாக அறிக்கை வெளியிட்டனர்.
 
இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றம் அமைத்துள்ள சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் என்ற குழு வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் மோடியைத் தொடர்புபடுத்துவதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் உள்ளன.எனவே அவருக்கு விசா வழங்குவது பொருத்தமாக இருக்காது. அவருக்கு விசா வழங்குவதற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க வேண்டும்.
 
குஜராத் முதல்வர் மோடி, அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்பார் என்ற அச்சம் காரணமாக, நாங்கள் 2012 நவம்பர் மாதத்தில் அப்போது வெளியுறுவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு ஒரு கடிதத்தை எழுதினோம். இதேபோல், மதச் சுதந்திர மீறல் அடிப்படையில் வெளிநாட்டைச் சேர்ந்த எந்தெந்த நபர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்று வெளியுறவு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment