Friday, May 24, 2013

திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சார மாநில துவக்க விழா!

    திண்டுக்கல்: சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் கடந்த மாதம் இந்நிகழ்ச்சி துவங்கியது.


     அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில துவக்க விழா 19-05-2013 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத் துறை நடத்திய பள்ளி செல்வோம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா 19-05-2013 அன்று மாலை மணி அளவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டிப்பள்ளி அருகில் திப்பு திடலில் வைத்து பேரணி தொடங்கியது. கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டியதையும் வலியுறுத்திய மாணவ, மாணவிகள், கையில் பதாகைகளையும், முழக்கங்களையும் கொண்ட பேரணி திண்டுக்கல் நகர வீதிகளில் வீறு நடை போட்டது. இப்பேரணி ஹஜ்ரத் அமீருன்னிஷா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. அதன் பின்பு பள்ளி செல்வோம் பிரச்சார துவக்க விழா தொடங்கியது.


     இவ்விழாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் திண்டுக்கல் மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமாகிய A. கைசர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் A. நைனார் முஹம்மது வரவேற்புரை ஆற்றினார். ஹஜ்ரத் அமீருன்னிஷா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப் பள்ளி வக்பு ஆய்வாளர் M.இப்ராஹீம், தொழிலதிபர் K.A.H. ஷாஜஹான், சமூக ஆர்வலர், புரவலர் N.M.B. காஜா மைதீன், P.C.N.M. ஓரியண்டல் பள்ளி அப்துல் கரீம், சுப்ஹானி ஹாஜியார் பேகம்பூர் பள்ளி ஜமாஅத் கௌரவ உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை மாநில செயற்குழு உறுப்பினர் சபியுல்லாஹ், ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர் A.S. இஸ்மாயில் சிறப்புரையாற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர் K. முஹம்மது அப்துல் காதர், தொழிலதிபர் M. முஹம்மது நஸ்ருதீன், மேட்டுப்பட்டி பங்குத்தந்தை V. செல்வராஜ், தொழிலதிபர் Lion. M. அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநிலத்தில் பன்னிரெண்டாவது வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் அபினேஷ், திண்டுக்கல் ஹஜ்ரத் அமீருன்னிஷா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவிகள் ஆகியோருக்கு கேடயம், விருது மற்றும் மணமுடிப்பு வழங்கப்பட்டது.

     இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் நகர தலைவர் M. கலீல் ரஹ்மான் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்(புத்தக பை, நோட்டுகள்) விழா மேடையில் வழங்கப்பட்டன.

     கல்வி சர்வே, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூடங்களில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, பள்ளிக்கூட கிட் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் நடத்தி வருகிறது.


0 comments:

Post a Comment