Tuesday, May 14, 2013

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தீவிரவாதிக்கு மொடாஸா குண்டுவெடிப்பிலும் தொடர்பு?

10 May 2013
 
     புதுடெல்லி:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் சில தினங்களுக்கு முன்பாக கைதான ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு 2008 செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம் மொடாஸாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் தொடர்பிருப்பதாக புலனாய்வு ஏஜன்சிகள் சந்தேகிக்கின்றன.
 
     குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து கைதுச் செய்யப்பட்ட ஜெயந்த் கோஹ்லி என்ற உஸ்தாத், அவனது மகன் ரமேஷ் கோஹ்லி ஆகியோருக்கு மொடாஸா குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறதா? என்பதுக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.கூடுதல் குற்றவாளிகள் கைதாகலாம் என்ற நம்பிக்கையில் வதோதரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமான சோதனை நடைபெறுகிறது.
 
     அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புப்போலவே மொடாஸா குண்டுவெடிப்பும் நடத்தப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறுகின்றனர். இரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஒரேபோல உள்ளன.அதுமட்டுமல்ல டிஃபன் பாக்ஸில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அஜ்மீர் குண்டுவெடிப்புடன், மொடாஸா குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதற்கான ஆதாரம் இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
     மொடாஸாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சுக்கா பஜாரில் ரமலான் மாதம் தராவீஹ் தொழுகை நடக்கும் வேளையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ஜெயந்த் கோஹ்லி மற்றும் அவனது மகன் ரமேஷ் கோஹ்லி ஆகியோருக்கு 2002 குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கிலும் தொடர்புள்ளது.

0 comments:

Post a Comment