Friday, May 3, 2013

இஷ்ரத் ஜஹான்: கூடுதல் டி.ஜி.பிக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

                      1 May 2013 israth jahan
அஹ்மதாபாத்:மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட 4 அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டர் வழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கூடுதல் டிஜிபிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க உத்தரவிடக் கோரும் மனு மீதான தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
 
கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டரில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் குஜராத் போலீஸால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் குஜராத் மாநில கூடுதல் டி.ஜி.பி பி.பி.பாண்டே மீது குற்றச்சாட்டு உள்ளது.
 
இவ்வழக்கில் பாண்டேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என சிபிஐ தாக்கல் செய்த மனுவை கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் அஹ்மதாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கீதா கோபி, கூடுதல் டிஜிபி பி.பி.பாண்டேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பது தொடர்பான தீர்ப்பை வரும் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
 
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு நிரபராதிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படும் வேளையில் 1980ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பாட்சைச் சார்ந்த பி.பி.பாண்டே அஹ்மதாபாத்தின் துணை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார். பாண்டே சி.பி.ஐயை ஏமாற்றி நடப்பதாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கைச் சட்டப்படி கைதுச் செய்ய நீதிமன்றத்தின் உதவி தேவை என்றும் சி.பி.ஐ ரிவிஷன்(மேலாய்வு) மனுவில் சுட்டிக்காட்டியிருந்தது.
 
ஏப்ரல் 22-ஆம் தேதி மற்றும் 24-ஆம் தேதிகளில் இரண்டு சம்மன்ஸ் அனுப்பப்பட்டபோதும் பாண்டேயிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பாண்டேயின் அஹ்மதாபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ அதிகாரிகளிடம் அவர் எங்கிருக்கிறார்? என்பதை கூட அவரது மகன் கூற மறுத்துவிட்டார். இச்சூழலில் கைதுவாரண்ட் அவசியம் என்று சி.பி.ஐ வழக்கறிஞர் எல்.டி.திவாரி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment