20 May 2013
கெய்ரோ:ஏழு சக ஊழியர்களை ஆயுதக் குழு ஒன்று கடத்திச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் எல்லையை எகிப்திய போலீஸ் மூடியுள்ளது. எகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே சரக்குகளை பரிமாறிக்கொள்ளும் அல் அவ்ஜா பாதை மூடப்பட்டுள்ளது. சரக்குகளுடன் வந்த இரு நாட்டு ட்ரக்குகளும் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஸினாய் பகுதியில் அல் அர்ஷில் இருந்து கைதுச் செய்யப்பட்ட தங்களது சக உறுப்பினர்களை விடுதலைச் செய்யக்கோரி ஆயுதக் குழு ஒன்று ஏழு போலீஸ் காரர்களை கடத்திச் சென்றது. இந்நிலையில் காஸ்ஸாவுக்கான ரஃபா எல்லையை நேற்று முன் தினம் எகிப்திய போலீஸ் மூடியது. இந்நிலையில் இஸ்ரேலுக்கான எல்லையையும் எகிப்திய போலீஸ் மூடியதன் மூலம் அதிபர் முர்ஸி மூலம் சக ஊழியர்களின் விடுதலைக்கு அழுத்தம் கொடுப்பதே அவர்களது நோக்கமாகும்.
இந்நிலையில் ஆயுதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றும், க்ரிமினல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தங்களது கொள்கை அல்ல என்றும் அதிபரின் செய்தி தொடர்பாளர் உமர் அமீர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment