19 May 2013
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூர கூட்டுப்படுகொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனையை எதிர்த்து மரணத்தண்டனை வழங்க கோரி மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியை வாபஸ் பெற குஜராத் அரசு முடிவுச் செய்திருப்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்களை ஆராயும். நீதிபதிகளான பி.சதாசிவம், எம்.ஒய்.இக்பால், ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இது தொடர்பான மனு அளிக்கப்படும் என்று எஸ்.ஐ.டியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்கக்கோரி மேல்முறையீடுச் செய்ய மோடி அரசு முன்னர் தீர்மானித்திருந்தது.
வலதுசாரி ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்களின் அழுத்தத்தை தொடர்ந்து மோடி அரசு இத்தீர்மானத்தை வாபஸ் பெற்றது.
0 comments:
Post a Comment