Wednesday, November 28, 2012

அப்பாவிகளின் வாழ்க்கையோடு விளையாட்டு : அலகாபாத் நீதிபதிகளின் தேவையற்ற கருத்துக்கள்!

    NOV25, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய முயற்சி எடுத்த உ.பி.அரசை குறை கூறிய நீதிபதிகள், இன்று இவர்களை நீங்கள் விடுதலை செய்வீர்கள்; நாளை இவர்களுக்கு "பத்ம பூஷன்" விருது கொடுப்பீர்கள், என கிண்டலடித்தனர்.

     கடந்த 2007ம்ஆண்டு, உ.பி.யின் லக்னவ், பைசாபாத் மற்றும் வாரணாசி பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர்.

     சிறையிலடைக்கப்பட்ட முஹம்மத் தாரிக் காசிமி, காலித் முஜாஹித், சஜ்ஜாதூர்ரஹ்மான் மற்றும் அக்தர் வாணி ஆகியோர் மீது, விசாரணைக்கமிஷன் அமைத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் அப்பாவிகள் என தெளிவான பிறகு, அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையில் இறங்க மாநில அரசுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதை நீதிபதிகள் விளக்கவேண்டும்.

     இந்த நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தை முழு மெஜாரிட்டியுடன் ஆளும் மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிபதிகள் தலையிட முடியுமா?
 
     அப்படியே வானளாவ அதிகாரம் படைத்தவர்களாக தங்களை நினைத்துக்கொண்டாலும் "வழக்குக்கு சம்மந்தமில்லாத வார்த்தைகளை பிரயோயப்பது" சரியா?

     வழக்கின் தன்மையை பார்க்க வேண்டிய நீதிபதிகள் - அதில் உள்ள உண்மைகளை பார்க்க மறுக்கும் நீதிபதிகளை யார் கேள்வி கேட்பது?
 
    உத்தரபிரதேச அரசு, அரசியல் சாசன சட்டம் 321 பிரிவில் "மாநில அரசுக்கு கைதிகள் விடுதலை குறித்து வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குட்பட்டு" செய்யும் சட்ட நடவடிக்கைகளை கேலி கிண்டல் செய்து "அப்பாவி சிறைவாசிகளின் வாழ்க்கையோடு விளையாடும்" இவர்களை கேள்வி கேட்க இங்கு ஆளில்லை என நினைக்கும்போது, உள்ளம் குமுறுகிறது.

0 comments:

Post a Comment