Wednesday, November 21, 2012

இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : வெள்ளிக்கிழமைகளை தேர்வு செய்யும் த.மு.மு.க.!

  NOV20, பாலஸ்தீனத்தின் மீது ரவுடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து தமுமுக சார்பில் எதிர்வரும் 23.11.2012 (வெள்ளி) அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

    இஸ்ரேலை கண்டித்து நாடு முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் போராடி வருகின்றன.

    பாப்புலர் ஃப்ரண்ட் உள்ளிட்ட சில அமைப்புக்கள், நேற்று (19/11) டெல்லியிலும் இன்று (20/11) சென்னை உள்ளிட்ட சில மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

    ஏனைய பல இஸ்லாமிய அமைப்புக்களும் போராடி வருவதையும் யாரும் மறுப்பதற்கில்லை.

    தற்போது, தமுமுக இஸ்ரேலை கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இது சற்று தாமதமான அறிவிப்பு, என்றாலும் "வெள்ளிக்கிழமை"யன்று போராட்டத்தை அறிவித்திருப்பது, அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களை கலந்துக்கொள்ள வைக்கும் சாமார்த்திய செயலாகும்.

    நாயகத்தை இழிவுபடுத்தி படமெடுத்ததை கண்டித்து, தமுமுக "அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்" நடத்தியதும் (14/09) வெள்ளிக்கிழமை தான்.

     அந்தப்பிரச்சினையிலும் "பாப்புலர் ஃப்ரண்ட்" உள்ளிட்ட சில அமைப்புக்கள் தமுமுகவிற்கு முன்னதாகவே, அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டத்தை நடத்தி முடித்திருந்தது.

    முஸ்லிம்கள் பாதிப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராடுவதற்கு வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுப்பது மிகவும் புத்திசாலித்தனமான செயல் தான், என்றாலும் துடிப்புமிக்க இயக்கங்கள் - தொண்டர் பலம் மிக்க இயக்கங்கள், எந்த நாளிலும்-எந்த நேரத்திலும் போராடத்தயாராக இருக்கவேண்டும், என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். thanks maruppu

1 comment:

  1. we need unity we have done a massive protest in mountroad the world has seen us.likewise we need a protest

    ReplyDelete