NOV21, உத்தரகாண்டின் உத்தம்சிங் நகர் மாவட்டம் "பான்ஸ் கேடா கலான்" கிராமத்தில் மசூதி நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ., ஹர்பஜன் சிங்கின் "கைத்தடி"யான மகேந்தர் சிங்கின் கூலிப்படை தாக்குதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
மகேந்தர் சிங்குக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் ஏற்பட்ட தகராறில், ஷெஹ்சாத், சர்தாஜ் மற்றும் முஹம்மத் ரபீ ஆகிய 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
மேலும் 21 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை அபாயக்கட்டத்தில் உள்ளது. வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள பா.ஜ.க.வினர், அடியாட்களை வைத்து முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளனர்.
முன்னதாக, மசூதி நில ஆக்கிரமிப்பு சம்மந்தப்பட்ட வழக்குகளில் 3 முறை முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்புக்கள் வந்துள்ள நிலையிலும், ஆக்கிரமிப்பை அகற்றும் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியான போலீஸ் காவல் உள்ளிட்ட எந்த உதவிகளும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாத நிலையில், பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் மீது "கொலைவெறி தாக்குதல்" நடத்தப்பட்டுள்ளது.
வழக்கம்போல், இறந்தவர்கள் குடும்பத்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள அரசு, தாசில்தார் உள்ளிட்ட சில வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையில் சிலரை பணியிடமாற்றம் செய்துள்ள அரசு, தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்துள்ளது.
முஸ்லிம்கள், இறந்த சடலங்களை வைத்துக்கொண்டு "மஹாராணா பிரதாப் சௌக்" பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து 13 குண்டர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார், மாவட்ட ஆட்சித்தலைவர்.
நன்றி மறுப்பு
0 comments:
Post a Comment