Wednesday, June 5, 2013

பத்திரிகைகள் செய்திகள் உருவாக்கும் பணியில் ஈடுபடக்கூடாது!-தலைமை தேர்தல் கமிஷனர்!

4 Jun 2013
 
     புதுடெல்லி:”பத்திரிகைகள் உலக நிகழ்வுகளை மட்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமே தவிர செய்திகளை உருவாக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறினார்.
 
     தினமணி பத்திரிகையின் டெல்லி பதிப்பின் 3-வது ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தனது உரையில் கூறியது:பத்திரிகைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, செய்திகளை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது; மற்றொன்று செய்திகளை உருவாக்குவது. அந்த வகையில், ஒரு நாளிதழுக்கு இலக்கணம் செய்திகளை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.
 
 
 
 
 
 
 
     பொறுப்புணர்வுள்ள பத்திரிகைகள், செய்திகளை உருவாக்கும் வகையில் செயல்படாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார் வி.எஸ்.சம்பத்.

இஷ்ரத் கொலை வழக்கு: ஐ.பி அதிகாரியிடம் சி.பி.ஐ விசாரணை!

4 Jun 2013
 
     புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் குஜராத்தின் மோடி போலீசாரால் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரி(ஐ.பி)யிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.
 
     இஷ்ரத் ஜஹான் உள்ளிட நான்கு பேர் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு 1979ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியிடம் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி ஆஜரான அவரிடம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு சதித் திட்டம் தீட்டி இருப்பதாக குஜராத் குற்றப் பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தீர்களா? எனகேட்கப்பட்டது. அப்போது அவர், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு மோடியை கொலைச்செய்ய லஷ்கர்-இ-தய்யிபா அமைப்பு திட்டமிட்டது தொடர்பாக குஜராத் மாநில காவல்துறைக்கு தகவல் கொடுத்தது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
 
     போலி என்கவுண்டர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,’தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து தகவல் தருவது எனது கடமை. இதன் அடிப்படையில் குஜராத் போலீஸ் நடத்திய போலி என்கவுண்டருக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று கூறியுள்ளார். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட வேளையில் குஜராத் மாநிலத்துக்காக தகவல் அளிக்கும் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலித் முஜாஹித் :விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்- குடும்பத்தினர் முடிவு!

        4 Jun 2013
 
      ஜாவன்பூர்:போலீஸ் கஸ்டடியில் மரணித்த காலித் முஜாஹிதின் கைதுத் தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இம்மாதம் 6-ஆம் தேதிக்குள் விசாரணை கமிஷனின் அறிக்கையை வெளியிடாவிட்டால் உ.பி மாநில சட்டப்பேரவைக்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக காலித் முஜாஹிதின் மாமனார் ஸஹீர் ஆலம் ஃபலாஹி தெரிவித்துள்ளார்.
 
    2007-ஆம் ஆண்டு உ.பி மாநிலத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட அப்பாவி இளைஞர் காலித் முஜாஹித், ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தி விட்டு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்படும்போது மர்மமான முறையில் மரணமடைந்தார். மே 18-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.இவரது மரணம் போலீஸ் நடத்திய படுகொலை என்று பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.முன்னர் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியின் போது காலித் முஜாஹித் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஆர்.டி.நிமேஷ் தலைமையிலான கமிஷன் நியமிக்கப்பட்டது.
 
     ஆனால், கமிஷன் அறிக்கையை அளித்த பிறகும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு இதுவரை வெளியிடவில்லை. விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடுவோம் என்று அரசு கூறியபோதும், அதில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஃபலாஹி கூறுகிறார்.”எங்களுடைய போராட்டம் காலித் முஜாஹிதிற்கு மட்டும் அல்ல. பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து நிரபராதிகளான முஸ்லிம்களுக்காகவுமே எங்களுடைய போராட்டம். முஜாஹிதின் மரணம் குறித்து விசாரணை நடத்தசி.பி.ஐயிடம் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்”.-இவ்வாறு ஃபலாஹி கூறியுள்ளார்.
 
    அதேவேளையில் காலித் முஜாஹிதின் மரணம் குறித்து உ.பி உள்துறைச் செயலாளரும், கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரலும் அடங்கிய உயர்மட்டக்குழு விசாரணையை துவக்கியுள்ளது

இஷ்ரத் போலி என்கவுண்டர்:போலீஸ்-ஐ.பி கூட்டுச் சதி!-முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி வாக்குமூலம்!

                               2 Jun 2013 1361450106_1361438752_Ishrat_Jahan_encounter-g-l-
 
      புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், போலீஸ்-ஐ.பி கூட்டுச் சதி என்று இவ்வழக்கில் கைதான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
      2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் குஜராத்தில் வைத்து மோடியின் போலீசாரால் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தைச் சார்ந்த, மோடியை கொல்ல வந்தவர்கள் என்று போலி நாடகமாடி அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிரிஷ் சிங்கால். இவர் 2004-ஆம் ஆண்டு போலி என்கவுண்டர் சம்பவம் நடைபெறும்போது அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் எஸ்.பி யாக பணியாற்றியவர். இவர் சி.பி.ஐயிடம் போலி என்கவுண்டர் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
     அவர் தனது வாக்குமூலத்தில்,”குஜராத் மாநிலத்திற்கு பொறுப்பு வகித்த ஐ.பி(இண்டலிஜன்ஸ் பீரோ)யின் இணை இயக்குநர் ரஜீந்தர் குமாரும், அன்றைய அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் டி.ஜி.பி டி.ஜி.வன்சாராவும் இணை போலீஸ் கமிஷனர் பி.பி.பாண்டேவும் இணைந்து இச்சதித்திட்டத்தை வகுத்தனர்.” என்று தெரிவித்துள்ளார். முதல்வர் மோடியை கொலைச் செய்ய வந்த லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர்கள் என்ற தகவலை ஜோடித்து போலீசுக்கு வழங்கியவர் ரஜீந்தர் குமார் என்ற தகவலை கிரிஷ் சிங்கால் சி.பி.ஐயிடம் தெரிவித்திருந்தார்.
 
ரஜீந்தர குமார் தற்போது புதுடெல்லி ஐ.பி தலைமையகத்தில் பணியாற்றுகிறார்.அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பி.பி.பாண்டே தற்போது தலைமறைவாக உள்ளார். பாண்டேவுக்கு எதிராக சி.பி.ஐ நீதிமன்றம் ஜாமீன் இல்லா வாரண்டை பிறப்பித்திருந்தது.குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமறைவாக இருக்க குஜராத் அரசு அனுமதிப்பதாககடந்த மாதம் அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனிடையே தனது பெயரை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்) சி.பி.ஐ சேர்த்ததை ரத்துச் செய்யக்கோரி பி.பி.பாண்டே உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்ஏற்பட்டதை தொடர்ந்து குஜராத் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் கிரீஷ் சிங்காலுக்கு கடந்த 27-ஆம் தேதி ஜாமீன் வழங்கியிருந்தது.          

இஷ்ரத் ஜஹான் வழக்கு:சி.பி.ஐயின் மிருதுவான அணுகுமுறையால் 5 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீன்!

                       1 Jun 2013 CBI_AFP1
 
     புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் கைதுச் செய்யப்பட்ட 6 போலீஸ் அதிகாரிகளில் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கைதுச் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ காட்டிய மிருதுவான அணுகுமுறையே முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்க காரணமானது. இவ்வழக்கில் தொடர்புடைய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளை கைதுச் செய்வதற்கான முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறும் சி.பி.ஐ, குற்றப்பத்திரிகையை 90 நாட்கள் கழிந்த பிறகும் தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கிறது.
 
     கடந்த பெப்ருவரி மாதம் முதல் 6 போலீஸ் அதிகாரிகளை, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் சி.பி.ஐ கைதுச் செய்திருந்தது. இதில் 5 பேரைக் கைதுச் செய்து 90 தினங்கள் கழிந்துவிட்டன. இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு போலீஸ் அதிகாரியான அமீனை, சி.பி.ஐ கடந்த ஏப்ரல் மாதம் கைதுச் செய்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்ஸாரா மற்றும் அமீன் ஆகியோர் சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகளான தருண் பரோட், ஜெ.ஜி.பர்மர் ஆகியோர் 2003-ஆம் ஆண்டு ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பதால் இவர்கள் ஜாமீனில் வெளியே வரமுடியாது.
 
     சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை 90 தினங்களுக்குள் தாக்கல் செய்யாததை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கண்டித்தது. இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகளை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலைச் செய்த வழக்கில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கும், முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவுக்கும் எதிராக ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? என்பதை புலனாய்வு செய்து வருவதால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள பி.பி.பாண்டே என்ற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியை கைதுச் செய்யவும், சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் கைதுச் செய்யப்பட்டு மஹராஷ்ட்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்ஸாராவை கஸ்டடியில் பெறவும் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டதாகவும், ஜாமீன் அனுமதிக்க கூடாது என்றும் சி.பி.ஐ வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிட்டபோதும், நீதிபதி அதனை அங்கீகரிக்கவில்லை.
 
     இதனிடையே இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற போலியான தகவலை அளித்த ஐ.பி அதிகாரிக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. 2002-ஆம் ஆண்டிற்கும், 2004-ம் ஆண்டிற்கும் இடையே குஜராத் மோடியின் போலீஸ் நான்கு போலி என்கவுண்டர்களில் எட்டு பேரைக் கொலைச் செய்தது.
     சம்பவம் நடக்கும்போது க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக இருந்த பி.பி.பாண்டே, ஐ.பி அதிகாரி ராஜேந்திர குமாருடன் இணைந்து இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.குஜராத் மாநிலத்தில் ஸாதிக் ஜமால் என்ற மெக்கானிக்கை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கின் பின்னணியிலும் இதே ஐ.பி அதிகாரி இருப்பதாக ஸாதிக்கின் சகோதரர் ஸபீர் ஜமால் புகார் அளித்துள்ளார்.மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வேளையில் ஸாதிக் ஜமாலை கொலைச் செய்ததாக போலீஸ் பொய் கூறியது.
 
      நான்கு போலி என்கவுண்டர்களுக்கும் தலைமை தாங்கியவர் அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக இருந்த, தற்போது சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஐ.ஜி  வன்ஸாரா ஆவார்.

கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓயாது!-கேர​ள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த மக்களின் எழுச்சி!


திருவனந்தபுரம்: நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது.


யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை வகித்திருந்தார். இப்பயணம் நேற்று(மே 30-ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளம், பல மணிநேரங்கள் கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது. சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதி காலவரையற்று சிறைகளில் அடைக்கும் அரசு-அதிகார வர்க்க கூட்டணிக்கு எதிரான பிரம்மாண்ட எதிர்ப்பாக பேரணியும், மாநாடும் அமைந்தது.


மாலை 3.30 மணியளவில் பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய மக்கள் எழுச்சிப் பேரணி புத்தரிக் கண்டம் மைதானத்தில் நிறைவுற்றது. யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான பிரகடனத்துடன் கேரள தலைநகரில் திரண்ட மக்கள் வெள்ளம், புதிய வரலாற்றைப் பதிவுச் செய்தது. மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட கண்டன மாநாடு துவங்கியது. மஃரிப் தொழுகைக்காக 6.45 மணிக்கு இடைவேளை விட்ட வேளையிலும் கூட மக்கள் கூட்டங்கூட்டமாக மாநாட்டு அரங்கிற்குள் வந்து கொண்டிருந்தனர்.


பிஞ்சுக்குழந்தைகள் முதல் வயோதிகர் வரை தாங்களும் இப்போராட்டத்தில் பங்காளர்கள் என்ற முறையில் கலந்து கொண்டது மாநாட்டுக்கும், பேரணிக்கும் மெருகூட்டியது. பெண்களும், இளைஞர்களும், மார்க்க அறிஞர்களும் பெரும் திரளாக ஆவேசத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கண்டன மாநாட்டை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் முன்னாள் தேசிய செயலாளரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான இ.அபூபக்கர் துவக்கி வைத்தார்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை தாங்கினார். பேராசிரியர் எஸ்.ஏ.ஆ.கிலானி (டெல்லி பல்கலைக்கழகம்), ஒ.எம்.அப்துல் ஸலாம் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தேசிய பொதுச் செயலாளர்), எ.ஸயீத் (எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர்), பேராசிரியர் ஜக்மோகன் சிங் (சுதந்திரப்போராட்ட தியாகி பகத் சிங்கின் சகோதரி மகன்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.


கறுப்புச் சட்டங்களில் கைதுச் செய்யப்பட்டு அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேரள தலைநகரில் நடந்த மாநாடும், பேரணியும் ஆறுதலை தரும்.


Friday, May 31, 2013

ஆட்சியாளர்களிடம் கேள்விகள் எழுப்பாமல் இருக்கவே கறுப்புச் சட்டங்கள் – எஸ்.ஏ.ஆர் கிலானி!

                        31 May 2013 SAR GEELANI
 
     திருவனந்தபுரம்:ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் குறித்து மக்கள் கேள்விகள் எழுப்பாமலிருக்கவே யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்களை ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது என்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், மனித உரிமை ஆர்வலருமான எஸ்.ஏ.ஆர் கிலானி கூறினார்.
 
     கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட மாநாட்டில் கலந்துகொண்டு எஸ்.ஏ.ஆர்.கிலானி உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியது:மக்களை பீதியில் ஆழ்த்தி, வாயை அடைப்பதற்கு கறுப்புச் சட்டங்களை அதிகார வர்க்கம் மேற்கொள்கிறது. ஆனால், ஒரு குடிமகனை கொல்ல முடிந்தாலும், அவனது மன உறுதியை குலைப்பதற்கு யாராலும் முடியாது.யு.ஏ.பி.ஏ சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களும், தலித்துகளும், பழங்குடி மக்களும் ஆவர்.
 
     நீதி மறுக்கப்படும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் போராடவேண்டியது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை தொடர்பான கடமையாகும். அடக்குமுறையாளர்கள் எப்பொழுதுமே ஆட்சியாளர்கள்தாம். ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். தொடர் போராட்டங்களின் மூலமே உரிமைகளை பெற முடியும். நமது முன்னோர் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக மட்டுமே போராடவேண்டி இருந்தது. ஆனால், இன்று நாட்டை ஆக்கிரமிக்கும் நூற்றுக்கணக்கான கிழக்கு இந்திய கம்பெனிகளுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு எஸ்.ஏ.ஆர்.கிலானி கூறினார்.

கறுப்புச்சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓயாது!-கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சி!

Conference against UAPA law PFI
 
      திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை வகித்திருந்தார். இப்பயணம் நேற்று (மே 30-ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளம், பல மணிநேரங்கள் கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது. சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதி காலவரையற்று சிறைகளில் அடைக்கும் அரசு-அதிகார வர்க்க கூட்டணிக்கு எதிரான பிரம்மாண்ட எதிர்ப்பாக பேரணியும், மாநாடும் அமைந்தது. மாலை 3.30 மணியளவில் பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய மக்கள் எழுச்சிப் பேரணி புத்தரிக் கண்டம் மைதானத்தில் நிறைவுற்றது.
 
     யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தை வாபஸ்பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான பிரகடனத்துடன் கேரள தலைநகரில் திரண்ட மக்கள் வெள்ளம், புதிய வரலாற்றைப் பதிவுச் செய்தது. மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட கண்டன மாநாடு துவங்கியது. மஃரிப் தொழுகைக்காக 6.45 மணிக்கு இடைவேளை விட்ட வேளையிலும் கூட மக்கள் கூட்டங்கூட்டமாக மாநாட்டு அரங்கிற்குள் வந்துகொண்டிருந்தனர். பிஞ்சுக்குழந்தைகள் முதல் வயோதிகர் வரை தாங்களும் இப்போராட்டத்தில் பங்காளர்கள் என்ற முறையில் கலந்துகொண்டது மாநாட்டுக்கும், பேரணிக்கும் மெருகூட்டியது. பெண்களும், இளைஞர்களும், மார்க்க அறிஞர்களும் பெரும் திரளாக ஆவேசத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 
     கண்டன மாநாட்டை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் முன்னாள் தேசிய செயலாளரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான இ.அபூபக்கர் துவக்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை தாங்கினார். பேராசிரியர் எஸ்.ஏ.ஆ.கிலானி (டெல்லி பல்கலைக்கழகம்), ஒ.எம்.அப்துல் ஸலாம்(பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தேசிய பொதுச் செயலாளர்), எ.ஸயீத்(எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர்), பேராசிரியர் ஜக்மோகன் சிங்(சுதந்திரப்போராட்ட தியாகி பகத் சிங்கின் சகோதரி மகன்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். கறுப்புச் சட்டங்களில் கைதுச் செய்யப்பட்டு அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேரள தலைநகரில் நடந்த மாநாடும், பேரணியும் ஆறுதலை தரும்.

Thursday, May 30, 2013

சுதந்திரம் மறுக்கப்படும் முஸ்லிம்கள்


பாராபங்கி! (Barabanki) - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம்.
புதிய கொலைக் களம் : போலீஸ் வேன்!

ஃபைஸாபாத் மாவட்ட பாராபங்கி நீதிமன்ற விசாரணையை முடித்துக்கொண்டு லக்னோ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில்,  ராம் சனெஹி கட் எனும் ஊரைக் கடக்கும்போது போலீஸ் வேனுக்குள் திட்டமிட்டபடி ஒரு படுகொலை நடைபெற்றது.

நாள்: 18.5.2013 சனிக்கிழமை
கொலையுண்டவரின் பெயர்: காலித் முஜாஹித்
கூட்டுக் கொலையாளிகளாகப் பட்டியலிடப் பட்டுள்ளவர்கள்: சப் இன்ஸ்பெக்டர் ராம் அவத்ராம், கான்ஸ்டபிள்கள் சந்திரசேகர், ஆனந்த் ப்ரகாஷ், ஜிதேந்திரா, மனோஜ் குமார், ராம்ஜி யாதவ், தீபக் குமார், ஜெயப்ரகாஷ் மற்றும் லாலாராம்.

***
ஒரு சிறிய Flashback!
நவம்பர் 23, 2007 அன்று லக்னோ, வாரணாசி மற்றும் ஃபைஸாபாத் நீதிமன்றங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. 14 உயிரிழப்புகள்; காயமடைந்தோர் பலர். குண்டு வெடிப்பு நடத்திய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உ.பி. காவல்துறைக்கு வக்கில்லாமல் போனது; அல்லது உண்மைக் குற்றவாளிகள் காவலர்களுக்கு உத்தரவிட்டதன்படி டிசம்பர் 12, 2007இல் ஆஸம்கர் எனுமிடத்திற்கு டாட்டா சுமோ வாகனத்தில் வந்த சிறப்பு அதிரடிப்படையினர் (STF), யூனானி மருத்துவரான முஹம்மது தாரிக் காசிமி என்பவரைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர்.

நான்கு நாள்கள் கழித்து, டிசம்பர் 16, 2007 அன்று பள்ளி ஆசிரியரான, மேற்கூறிய மவ்லவீ காலித் முஜாஹித் என்பவரை ஜோன்பூர் எனும் இடத்தில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிறப்பு அதிரடிப்படையினர் தூக்கிச் சென்றனர்.

ஏறத்தாழ பத்து நாள் வரைக்கும் அவ்விருவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் 14.12.2007 அன்று முஹம்மது தாரிக் காசிமியின் குடும்பத்தினர், நகரக் காவல் நிலையத்தில் 'ஆள் கடத்தல்' புகார் ஒன்றைப் பதிவு செய்தனர். மட்டுமின்றி, 19.12.2007 அன்று நீதிமன்றத்தில் 'ஆள் கொணரும்' (ஹேபியஸ் கார்பஸ்) வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, NLP (National Loktantrik Party) கட்சியின் சவுத்ரி சந்தபால் சிங் என்பவர், உ.பி. காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார். அதில் முஹம்மது தாரிக் காசிமியையும் மவ்லவீ காலித் முஜாஹிதையும் திருப்பி ஒப்படைப்பதற்கான கெடுவாக 22.12.2007ஐ நிர்ணயித்திருந்தார்.

டிஸம்பர் 22, 2007 அன்று ஒரு பத்திரிகையாளர்களின் சந்திப்பை லக்னவின் ADGP பிரிஜ்லால் ஏற்பாடு செய்து, கடந்த 23.11.2007இல் நீதிமன்றங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் 'முக்கியக் குற்றவாளிகள்' என்பதாகத் தாரிக்கையும் காலித் முஜாஹிதையும் அன்று(22.12.2007) 'பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன்' பாராபங்கி ரயில்வே ஸ்டேஷனில் வைத்துக் கைது செய்ததாக சரடு விட்டார். (FIR 1891/2007; FIR 547/2007).
'கெட்டிக்காரன் புளுகு எட்டே நாட்களில் உடையும்'; 'நுணலும் தன் வாயால் கெடும்' எனும் சொலவடைகளுக்கு ஒப்ப, "உ.பி. நீதிமன்றங்கள் மூன்றில் நடந்த குண்டு வெடிப்புகள் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளை ஒத்திருக்கின்றன" என்று பிரிஜ்லால் கூடுதலாக உளறி வைத்தார். (மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவாதான் என்று ஸ்வாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்). வழக்கம்போல் காவிச் சார்பு ஊடகங்கள் இல்லாத 'இஸ்லாமியத் தீவிரவாதம்' பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்தன.

இரு கைதிகளின் குடும்பத்தினரும் மனித உரிமை ஆர்வலர் குழுக்களும் இணைந்து காவல்துறையின் கபட நாடகத்துக்கு எதிராகக் களங்கள் கண்டனர். உ.பி. காவல்துறைக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்தன. இறுதியாக, மேற்காணும் வழக்கில் காவல்துறையினரின் முறைகேடுகளையும் கைது நடவடிக்கைகளையும் குறித்து விசாரிப்பதற்கு அப்போது ஆட்சியிலிருந்த மாயாவதி அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி R.D. நிமேஷ் என்பவரின் தலைமையில் கடந்த மார்ச் 2008இல் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தரும்படி உத்தரவிட்டது.

R.D. நிமேஷ் கமிஷனின் பதவிக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

ஆறுமாதக் கெடு கொடுத்து அமைக்கப்பட்ட R.D. நிமேஷ் கமிஷன், நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் 31, 2012இல் தனது அறிக்கையை உ.பி. அரசிடம் சமர்ப்பித்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆட்சியை இழந்து, சமாஜ் வாடியின் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி இருந்தார். ஆறு மாதங்களாகியும் கமிஷனின் அறிக்கையை உ.பி. அரசு வெளியிடாமல் கண்ணாமூச்சு விளையாடியது.

லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த 12.10.2012 கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ராஜேந்தர் சச்சார், "நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்ப்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது?" என்று வினா எழுப்பினார்.
மேலும், இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும்; உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அண்மைக் காலமாக முஸ்லிம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது இவ்வரசின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார், விசாரணைக் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னும் அதை வெளியாக்குவதில் காட்டும் தாமதம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நொறுக்கிவிடும் என்றும் கூறினார்.

கெட்டிக்கார இணைய ஊடகங்கள் சில, உ.பி. காவல்துறையின் தில்லுமுல்லுக் கைதுகளைக் கண்டிக்கும் R.D. நிமேஷ் கமிஷனுடைய அறிக்கை பகுதிகளை வெளியிட்டன. அவற்றுள், சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறை கருப்பாடுகள் தண்டிக்கப்பட வேண்டும் எனும் பரிந்துரை தலையாயது. சட்ட விரோதமாக இரு அப்பாவிகளைக் கைது செய்வதற்கு சதி செய்ததாகவும் உடந்தையாக இருந்ததாகவும் 42 காவல்துறை அதிகாரிகள் மீது R.D. நிமேஷ் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டியிருந்தது.
According to sources, the Commission described the picking up of Tariq and Khalid as an “unlawful activity” and recommended punishment to officials involved in “detaining and torturing” them. The Commission, which heard over 100 witnesses, is reported to have concluded that the two were not arrested on December 22 from Barabanki as claimed by the STF but had been picked up several days earlier — Tariq, a Unani practitioner, from the Shankarpur checkpost near Sarai Meer in Azamgarh “by some people in a Tata Sumo” on December 12 and Khalid, a teacher, in the same manner from Mariyahu in Jaunpur on December 16. Both were taken to different locations and tortured, the Commission is reported to have said, censuring the Azamgarh and Jaunpur police for not taking cognisance of complaints and FIRs on the “forcible capture of Qasmi and Mujahid by people in Tata Sumo.” The Commission is said to have recommended appointment of non-police gazetted officers as witnesses of recoveries as a safeguard against falsification of records; disposal of terror cases within two years and action against officials for delays beyond this period; investigation of cases by gazetted officers different from those making the arrests and videorecording of interrogation. 
Source: http://www.thehindu.com/news/national/other-states/khalid-death-turns-focus-on-nimesh-panel-report/article4730505.ece


R.D. நிமேஷ் கமிஷனுடைய அறிக்கை உ.பி. சட்டமன்றத்தின் முன்வைக்கப்பட்டால் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி மேலும் பலர் மாட்டிக் கொள்வார்கள். எனவே, நிரபராதிகளுக்கு எதிராகப் புனையப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாகக் கடந்த 24.4.2013 அன்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் உ.பி.யின் உள்துறைச் செயலர் சர்வேஷ் சந்திர மிஸ்ரா அறிவிப்புச் செய்தார்.

ஆனால், நிரபராதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறமுடியாது என பாராபங்கியின் நீதிபதிகள் கடந்த 10.5.2013 அன்று மறுத்துவிட்டனர். பெரும்பாலான நீதிபதிகள் வித்ய பாரதியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட முன்னாள் மாணவர்களல்லவா? ஒரு மாநில அரசின் முடிவின்படி முதல் நிரபராதியாக ஒரு முஸ்லிம் விடுதலையாகிவிட முடியுமா? நீதித்துறை விடுவித்தாலும் காவல்துறை விட்டுவிடுமா?

"இது, காலங் காலமாக சிறுபான்மையினருக்கு எதிராகக் காவல்துறைக்குள் ஊட்டப்பட்ட வெறுப்பு" என்கிறார் உ.பி.யின் முன்னாள் ஐ.ஜியான எஸ்.ஆர் தாராபூரி, ஐ.ப்பீ.எஸ்.


There is a communal bias in the police department. I have seen that majority of the officers have a communal bias towards the minorities. This practice has been going on for a while now and no attempt has been made to stop this. Moreover there is no action against those police personnel who book innocent people in wrong cases. What has happened in Hyderabad? So many people were let off by the court. The police who booked the cases for reasons best known to them continue to remain unpunished.
Source: http://news.rediff.com/interview/2010/jun/15/interview-darapuri-majority-of-police-force-is-biased.htm


கடந்த 20.5.2013 அன்று பத்திரிகையாளர்களுக்கு தாராபூரி அளித்த பேட்டியில் "காலிதை பொய் வழக்கில் சிக்க வைத்தவர் உ.பி.யின் முன்னாள் DGP விக்ரம் சிங்" என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

"நேற்று முன்தினம் போலீஸ் வேனில் கொல்லப்பட்ட காலித் முஜாஹித் ஓர் அப்பாவி; கைது செய்யப்பட்டபோது அவரிடம் ஆயுதம் ஏதும் இருக்கவில்லை. அன்றைய DGP விக்ரம் சிங், ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டு, கிடைக்காத காரணத்தால் காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவரையும், இந்த வழக்கில் அநியாயமாக சிக்கவைத்தார்.

காலித் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், சட்டத்துக்கு புறம்பான முறையில் புலனாய்வுத் துறையினரின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், அவர்தம் குடும்பங்களுக்குக்கூட தெரியாத வகையில் 'கடத்தப்பட்டு' ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் போது, தேவைப்படும் வழக்குகளில் அவர்கள் சிக்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு ரகசிய காவலில் வைக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள், பன்றிக்கறி சாப்பிடவும் மூத்திரம் குடிக்கவும் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.


Many Muslim youth who have been missing from their districts and even their families do not know about them because the investigative agencies have abducted them and kept them at a secret place so that implicate them in bomb blast some time in future. These youth are forced to eat pig meat and drink urine. It is at the connivance of police officials that these innocent are put behind bars showing that they had an unlicensed pistol. When Khalid Mujahid and Tariq Qasmi were arrested nothing was found on them but Vikram Singh told them that if they paid him Five lac rupees they would-be set free and someone else would be implicated instead.


முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் காவலில் சாகடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. பல நேரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரியவராமலேயே புதைக்கப்படுகின்றன" என்கிறார் தாராபூரி.

***
போலீஸ் வேனுக்குள் வைத்து 18.5.2013இல் கொலை செய்யப்பட்ட மவ்லவீ காலித் முஜாஹித், "அன்று மதியம் 3.30 மணிவரை நீதிமன்றத்தில் இருக்கும்போது எவ்வித அயர்ச்சியுமின்றி திடகாத்திரமாகவே இருந்தார்" என அவருடைய வழக்கறிஞர் முஹம்மது ஷுஐப் தெரிவித்துள்ளார்.

ஆனால், "வெப்பம் தாளாமல் இறந்துவிட்டார்" என முதலில் கூறிய ஃபைஸாபாத்தின் DIG தர்மேந்த்ர சிங் யாதவ், "மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மாரடைப்பால் மரணித்தார்" என பல்டி அடித்துள்ளார்.

நீதிமன்றத்தின் விசாரணை முடிந்து போலீஸ் வேனுக்குள் சென்றபோது வெள்ளை பைஜாமா-குர்தா அணிந்திருந்த காலித் முஜாஹித், காவல்துறையினரால் பிணமாகக் காட்டப்படும்போது ட்டீ ஷர்ட் அணிவிக்கப்பட்டிருந்தார். பாராபங்கி மருத்துவமனைக்கு காலிதைக் கொண்டு சென்றபோது கண்ணால் கண்ட சாட்சிகள், காலிதின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வழிந்திருப்பதையும் முகத்தில் புதிய காயங்களையும் பார்த்திருக்கின்றனர். [படம்].

மவ்லவீ காலித் முஜாஹிதின் மாமா ஸஹீர் ஆலம் ஃபலாஹீ என்பவர் கடந்த 19.5.2013 அன்று ஒரு முதல் தகவல் அறிக்கையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். அதில், தம் மருமகன் காலிதைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக உயரதிகாரிகள் உட்பட 42 காவல்துறையினரைப் பட்டியலிட்டுள்ளார். இத்தனைக்குப் பின்னரே CBI விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

காவிகள் நடத்தும் குண்டுவெடிப்புகளைப் பற்றிய செய்திகள் காட்சி ஊடகங்களில் காலையில் வெளியானால் எவ்வித விசாரணையும் நடைபெறாத அன்று மாலையே "முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு" என்று கூசாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள்;
ஏமாளி முஸ்லிம்களைத் தூக்கிக் கொண்டுபோய் யாருக்கும் தெரியாத இடத்தில் அடைத்து வைத்துக்கொண்டு "ஐந்து லட்சம் ரூபாய் தா; இல்லையென்றால் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியே நீதான்" எனக் காசு பறிக்கும் விக்ரம் சிங் போன்ற பகல் கொள்ளைக் காரன்கள்;
இலஞ்சம் கொடுப்பதற்கு மறுக்க, மறுக்க இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்தேறிய பல்வேறு குற்றங்களில் அப்பாவி முஸ்லிம்களைச் கோத்துவிடும் காவல்துறையினருக்குத் துணையாக 'பங்கு' ஏதும் தேறாதபோது சிறைச்சாலைக்குள்ளேயே வைத்துக் கொன்றுபோடும் ஜெயிலர்கள்
விசாரணை என்ற பெயரால் அப்பாவிகளைக் கைது செய்து போலீஸ் வேனுக்குள்ளேயே வைத்துக் கொலை செய்யும் ராம் அவத்ராம், சந்திரசேகர், ஆனந்த் ப்ரகாஷ், ஜிதேந்திரா, மனோஜ் குமார், ராம்ஜி யாதவ், தீபக் குமார், ஜெயப்ரகாஷ் மற்றும் லாலாராம் போன்ற 'காவலர்கள்' என்ற பெயருக்கே இலாயக்கற்ற போலீஸ் பொறுக்கிகள்;
காட்டுத் தனமாகத் தாக்கப்பட்டதில் முகத்தில் வெளிப்படையாகத் தெரியும் காயங்களைக்கூட குறிப்பிடாமல் பிரேதப் பரிசோதனை தயாரிக்கும் சோரம்போன அரசு மருத்துவர்கள்;
இத்தனை தகவல்களையும் உளவுத்துறை மூலம் தெரிந்துகொண்டு, "காலிதின் மரணம் இயற்கையானது போலத்தான் தெரிகிறது" என்று அறிக்கை விடும் மோசடி அரசியல்வாதிகள்;
நூறு சாட்சிகளுக்குமேல் விசாரித்து, "குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் நிரபராதிகள்" என நிமேஷ் கமிஷனின் அறிக்கை வந்த பின்னர் பொய்வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் நிரபராதிகளை விடுதலை செய்யுமாறும் அறிவித்த உ.பி. மாநில அரசின் கோரிக்கையை மறுதலித்து, அப்பாவி முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய மறுக்கும் நீதி(!)பதிகள்!

இவர்களுக்கு மத்தியில்தான் முஸ்லிம்கள் வாழவேண்டியுள்ளது - "நாங்கள் அப்பாவிகள்" என்று சொல்வதற்குக்கூட சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களாக.
[இச்செய்தி பதிவாகும் வேளையில் உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வழங்கிய நிவாரணத் தொகையான ஆறு இலட்சம் ரூபாயை முகத்தில் அடித்தார் போன்று திருப்பி வீசியுள்ளனர் காலித் முஜாஹித் குடும்பத்தினர். இதற்குப் பகரமாக, காலிதை அநியாயமாக அடித்துக் கொலை செய்த கொலையாளிகளுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.]

Wednesday, May 29, 2013

இந்தியாவில், சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய உளவு விமான தளம்! என்னங்க இது புதிய கதை?

    
 

    அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர், அநேக இந்தியர்களுக்கு ஒரு உல்லாசப் பயண ஸ்தலம் மட்டுமே. ஆனால், போர்ட் பிளேர் என்ற பெயர் தற்போது படு தீவிரமாக பென்டகனில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பது, அநேக இந்தியர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
 
     பென்டகன் எதற்காக போர்ட் பிளேர் பற்றி யோசிக்க வேண்டும்? அமெரிக்காவின் உளவு விமான ஆபரேஷன்களுக்கான ஆபரேஷன் தளம் ஒன்றை போர்ட் பிளேரில் அமைக்க விரும்புகிறார்கள் அவர்கள். அதாவது, தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. அமைத்துள்ள உளவு விமான தளம் போல ஒன்றை அந்தமான் தீவுகளில் அமைக்கும் முடிவில் உள்ளார்கள் அவர்கள். இது தொடர்பாக மத்திய அரசிடம் ஒரு தடவை பேசப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள், ராணுவ வட்டாரங்களில்.
 
     நேற்று நாம் வெளியிட்ட கிரைம் தொடர்பான கட்டுரையின் ஆங்கில லிங்கில் அதிக எண்ணிக்கையான வாசகர்கள் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர். எமது நன்றிகள்.  இந்தக் கட்டுரை ராணுவம் தொடர்பான கட்டுரை.  இதற்கு வாசகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
 
     இந்தியா தற்போது சீனாவுடன் ஒருவித ராணுவ ரீதியான முறுகல் நிலையில் உள்ளதால், அந்தமானில் உளவு விமான தளம் அமைப்பதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி தரும் என நினைக்கிறது அமெரிக்கா.
 
     பென்டகன் அதிகம் பிரஸ்தாபிக்காமல் வைத்திருந்த இந்த திட்டம், எதிர்பாராத விதமாக ராணுவ வட்டாரங்களில் தெரிய வந்து விட்டது. ஆனால், இந்தியாவில் யாரும் இது பற்றி பேசுவதாக தெரியவில்லை.
 
     சரி. கதை எப்படி வெளியே தெரிய வந்தது? அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டி, பென்டகனுக்கு உத்தரவு ஒன்றை கொடுத்திருந்தது. ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவம் விரைவில் வெளியேறவுள்ள நிலையில், தென்னாசிய பகுதியில் உளவு விமானத் தளங்களுக்கு சரியான இடங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது.
 
     பென்டகன், இந்தப் பொறுப்பை அமெரிக்க ராணுவத்துக்கான கள ஆய்வுகளை செய்யும் ரான்ட் கார்ப்பரேஷனிடம் (RAND Corporation) கொடுத்திருந்தது. இவர்கள் முழுமையான ஆய்வு செய்து அறிக்கை கொடுத்து விட்டனர். அந்த அறிக்கை பென்டகனால் அப்ரூவல் கொடுக்கப்பட்டு, அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டியிடம் போயிருக்கிறது.

    இந்த அறிக்கை லீக் ஆனதில், விஷயம் ராணுவ வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
 
     ரான்ட் கார்ப்பரேஷன் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள, உளவு விமான தளத்துக்கான ஐடியல் ஸ்பாட் – போர்ட் பிளேர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர்!
 
     பென்டகன், 3 நாடுகளை ‘அமெரிக்கா ராணுவ ரீதியாக ஒரு கண் வைத்திருக்க வேண்டிய நாடுகள்’ என்ற பிரிவில் வைத்திருக்கிறது. ஈரான், வட கொரியா, சீனா ஆகியவையே இந்த 3 நாடுகள். இவற்றில் சீனா மீது ஒரு கண் வைத்திருக்க ஐடியல் இடம், போர்ட் பிளேரில் உளவு விமானத்தளம் அமைப்பது.
 
    இந்தியாவுக்கும் சீனா மீது ராணுவ ரீதியான உரசல் இருப்பதால், இந்தியா தலையாட்டி விடும் என்பது, பென்டகனின் வியூ பாயின்ட் (ஒருவேளை இதற்காகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீபகால உரசலை ஏற்படுத்தினார்களோ… ஆண்டவனுக்குதான் வெளிச்சம்! ஆனால், சி.ஐ.ஏ. முன்பு ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே செயற்கையான உரசல் ஒன்றை ஏற்படுத்தி வெற்றி கண்டது என்பதை மறக்காதீர்கள்) மற்றொரு விஷயமும் இங்கு உள்ளது.
 
     சி.ஐ.ஏ.வுக்கு பாகிஸ்தானில் ஒரு ரகசிய உளவு விமான தளம் இருந்தது. பாகிஸ்தான் அரசின் அனுமதியுடன் அந்த தளம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த தளத்தின் ஆபரேஷன் ரகசியமாகவே இருந்தது.
 
     சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தானில் ஷாம்சி என்ற இடத்திலுள்ள விமானப்படை தளத்தில் இருந்துதான் ஆரம்பத்தில் சி.ஐ.ஏ.வின் உளவு விமானங்கள் புறப்பட்டுச் சென்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. ஷாம்சி என்பது ஒரு சிறிய ஊர். பாலுசிஸ்தானின் குவேட்டா நகரிலிருந்து 350 கி.மீ. தென்மேற்கில் இருக்கிறது.
 
     பக்கா கிராமப்புற ஊரில் இருந்து இயங்கிய இந்த விமானத் தளம் பற்றிய தகவல்கள் வெளியாகாதபடி பார்த்துக் கொண்டார்கள். விறுவிறுப்பு.காம் thanks