Showing posts with label alaigal. Show all posts
Showing posts with label alaigal. Show all posts

Thursday, April 14, 2011

பேனாவைக் களவெடுத்த செக் நாட்டின் அதிபர்


டென்மார்க் 11.04.2011 செவ்வாய் இரவு
சிலி நாட்டுக்கு விஜயம் செய்த செக் நாட்டின் அதிபர் வக்லேவ் கிளவுஸ் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அத்தருணம் அவர் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனாவை கச்சிதமாக திருடி பாக்கட்டில் மறைத்துக் கொண்டார். இந்தக் காட்சியை அங்கிருந்த படப்பிடிப்பாளர் பதிவு செய்துள்ளார். செக் நாட்டின் தொலைக்காட்சி அதிபரின் திருட்டுப் புத்தியை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் இது யூரூப்பில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சிலி நாட்டின் பிரதமர் செபஸ்டியான் பினிரா அதிபரை மக்களுக்கு அறிமுகம் செய்தபோதே இந்தத்திருட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்த ஒளிப்படத்தை இதுவரை அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துவிட்டார்கள். தற்போது 63 வயதை அடைந்துவிட்ட செக் அதிபர் கிளவுஸ் 1993 – 97 ல் அந்த நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். இதற்கு பதிலுரைத்த அதிபர் தான் தங்கத்தை திருடவில்லை என்று கூறியுள்ளார்.
எத்தனை பெரிய மனிதருக்கு இத்தனை சிறிய அறிவிருக்கும் – இத்துணை
சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு..
ஒளிப்படத்தைக் காண இங்கே அழுத்துக.

Sunday, April 10, 2011

வயது 27 நிறை 11 கிலோ இளம் பெண் பரிதாப மரணம்

11 கிலோ நிறை விழும்வரை எப்படி உயிர் தரித்தார்…
வெறும் 11 கிலோ எடை மட்டும் கொண்ட 27 வயது பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். அவுஸ்திரேலியாவின் அடிலேட் நகரத்தில் பெற்றோருடன் இப்பெண்மணி வாழ்ந்து வந்துள்ளார். இப்பெண்மணியின் இறந்த உடலத்தை ஏற்றும்போது இரண்டு வயது குழந்தையின் நிறையே இருந்தாக அம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் பெண்மணியின் அவலமான மரணத்திற்குக் பெற்றோரே காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கூறுகிறார்கள். இவ்வளவு மோசமான நிலையை அப்பெண்மணி எவ்வாறு அடைந்தார் என்பதை ஆராய வைத்தியப் பிரிவு பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது. பாரிய படுக்கைக் காயம் உடலில் இருப்பதால் இப்பெண்மணி நீண்ட காலம் படுக்கையிலேயே கிடந்துள்ளதாக போலீஸ் கூறுகிறது. இவருக்கு கடுமையான இதய நோய் இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள். பூரண விபரங்களுக்காக ஊடக உலகம் காத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் பெண்களின் சராசரி நிறை 67.7 கிலோவாகும்.