Showing posts with label jaffnawin. Show all posts
Showing posts with label jaffnawin. Show all posts

Tuesday, May 3, 2011

ஐஸ் கிறீம் மந்திரவாதி (காணொளி இணைப்பு)



ஏராளமான கண்கட்டு வித்தைகளை நீங்கள் பார்த்து இருக்கக் கூடும். கேள்விப்பட்டு இருக்கக் கூடும். ஆனால் ஐஸ் கிறீமைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற கண்கட்டு வித்தை நிச்சயம் உங்களுக்கு மிகவும் புதுமையான விடயமாகத்தான் இருக்கும்.

துருக்கி நாட்டின் இஸ்தான்பூல் நகரத்தில் ஐஸ் கிறீம் கடை நடத்துகின்ற வியாபாரி ஒருவர் அற்புத சித்தி பெற்று இருக்கின்றார் போலும்? இவரிடம் ஐஸ் கிறீம் வாங்குகின்ற ஒவ்வொருவரையும் இக்கண்கட்டு வித்தையால் அசர வைக்கின்றார்.

Saturday, April 30, 2011

உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும்


உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவும் குறையும். அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு.

அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ரசிகர்கள், அதற்கு எதிரானவர்கள் என 2 குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர்.

மசாலா உணவு விரும்பிகளுக்கு 1.8 கிராமும், விரும்பாதவர்களுக்கு 0.3 கிராம் சிவப்பு மிளகாய் தூள் உணவுக்கு முன் தரப்பட்டது. 6 வாரங்களுக்கு பிறகு நடந்த சோதனையில் மிளகாய் தூள் குறைவாக சேர்த்தவர்களுக்கு பசி குறைந்ததும், அதிகம் சேர்த்தவர்களுக்கு பசி அதிகரித்ததும் தெரியவந்தது.

பொதுவாக உடல் சூட்டை மிளகாய் தூள் அதிகரித்து அதிக கலோரிகளை இழக்கச் செய்வதால் அதிகமான அளவு பசி ஏற்படும். இதை மிளகாயில் உள்ள "கேப்சைசின்" என்ற பொருள் செய்கிறது. மிளகாய் தூளின் அளவு குறைந்தால் பசி குறையும். அத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று லண்டன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Sunday, April 24, 2011

தின‌ம் மூ‌ன்று வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ப‌க்கவாத‌த்தை த‌வி‌ர்‌க்கலா‌ம்!


தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதற்கு முந்தைய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்கவாதத்தை தடுக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Monday, April 11, 2011

கதிர்வீச்சு பொருட்களை வடிகட்டஉருக்கு சுவர் கட்ட ஜப்பான் திட்டம்

ப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்பட்ட கதிர்வீச்சு செறிந்த நீரில் இருந்து, கதிர்வீச்சுப் பொருட்களை வடிகட்டும் விதமாக, கடலில் உருக்குச் சுவர் ஒன்றைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்னும் 10 ஆண்டுகளில் நான்கு அணு உலைகளையும் படிப்படியாக மூடுவதற்கான வரைவுத் திட்டம் ஒன்று ஜப்பான் அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. 

புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், 2ம் உலையில் கதிர்வீச்சு கலந்த நீர், சமீபத்தில் டன் கணக்கில் கடலில் விடப்பட்டது. கடலில் நடத்தப்பட்ட ஆய்வில், கடல்நீரில் 63 ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு கலந்துள்ளது தெரிந்துள்ளது. 

இது அனுமதிக்கப்பட்ட அளவு என்று கூறப்படுகிறது.இந்நிலையில், கதிர்வீச்சு நீர் கடலில் விடப்பட்ட இடத்தில், 12 மீ., அகலத்திற்கு ஸ்டீலால் ஆன சுவர் ஒன்றைக் கட்டுவதற்கு அணுமின் நிலைய பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இச்சுவர், கடல் நீரில், கலந்துள்ள கதிர்வீச்சுப் பொருட்களை வடிகட்டும் அமைப்பாகச் செயல்படும். அதேநேரம், நான்கு அணு உலைகளையும் கட்டிக் கொடுத்த, டோஷிபா நிறுவனம், இன்னும் 10 ஆண்டுகளில் நான்கு உலைகளையும் படிப்படியாக மூடுவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் ஜப்பான் அரசிடம் அளித்துள்ளது.

இந்த 10 ஆண்டு காலம் என்பது, அமெரிக்காவின் மூன்று அணுமின் நிலையம் மூடப்படுவதற்கு எடுக்கப்பட்ட காலகட்டத்தில், மூன்றில் ஒரு பங்குதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை 1 மற்றும் 4ம் உலைகளின் மீது பறக்கவிட்டு, படங்கள் எடுக்க "டெப்கோ' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது வானிலையைப் பொருத்து மாற்றத்திற்குள்ளாகலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இதற்கிடையில், ஜப்பானில் உணவின்றி வாடிவரும் மக்களுக்காக, ஆறு லட்சம் கேன்களில் மீன் வகை உணவுகளை அளிக்க மாலத் தீவு முன்வந்துள்ளது. மாலத் தீவில் இருந்து ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்த மீன் வகை உணவை ஏற்க ஜப்பான் சம்மதித்துள்ளது.

கடந்த மார்ச் 11ம் தேதி ஜப்பானில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில், மொத்தம் 82 சிறுவர் சிறுமியர் பெற்றோரை இழந்து வாடுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

3 வயதேயான மகனுக்கு பச்சைக் குத்திய தந்தைக்கு சிறைத் தண்டனை!

போதையில் தனது மூன்று வயது மகனின் தோள்பட்டை மீது பச்சை குத்திய 26 வயது தந்தைக்கு ஒருவருட கால நன்னடத்தை சிறையும், 300டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. 

யுஜென் ஆஷ்லி என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. தனது மகன் மெத்தியு வின் தோள் பட்டையிலேயே “டெடிஸ் போய்” எனக் குறிக்கும் வகையில் “டிடி” என்ற எழுத்துக்களை இவர் பச்சைக் குத்தியுள்ளார். 

அரசாங்க சமூக சேவைப் பிரிவினர் இந்த வீட்டுக்கு விஜயம் செய்த போது சிறுவனின் உடம்பில் பச்சை குத்தப்பட்டுள்ளதை அவதானித்து உரிய நடவடிக்கை எடுத்தனர். 



இதன் பலனாக தந்தை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் குடிபோதையில் செய்த தனது குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்.



18 வயதுக்குக் கீழ்பட்டவர்களின் உடம்பில் இவ்வாறு பச்சைக் குத்துவது சட்டப்படி குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்


வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

Wednesday, April 6, 2011

11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!


அலுவலகத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் உழைக்க வேண்டுமானால் இடையில் சிறிது ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து 11 மணிநேரம் வேலை செய்பவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கிலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்றில் இரண்டு மடங்கு அதிகமானதாகும்.

இதய நோய்க் கோளாறுகளுக்காக சிகிச்சைப் பெற வருபவர்களிடம் அவர்கள் மது அருந்துகின்றனரா, புகைப் பிடிக்கின்றனரா என்றெல்லாம் கேட்பது போல் அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தொழில் புரிகின்றனர் என்றும் கேட்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவொன்று நடத்தியுள்ள ஆய்வின் முடிவிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அரசாங்க ஊழியர்களாகப் பணிபுரியும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அவர்களின் மருத்துவ அறிக்கைகளைக் கொண்டு அவர்களின் இதயத் தொழிற்பாட்டின் நிலை பற்றி மதிப்பீடுகள் செய்யப்பட்டன. சாதாரணமாக ஒன்பது மணி முதல் ஐந்து மணி வரை தொழில் செய்பவர்களிலும் பார்க்க ஒரு நாளைக்கு 11 மணிநேரம் தொழில் புரிபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் 67 வீதம் அதிகமாகவே உள்ளது.

புகைத்தல் மற்றும் மது அருந்தல் காரணமாக இதயக்கோளாறை எதிர் கொண்டுள்ளவர்களுக்கு வேலை நேரத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மேலதிக ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம், என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் மிகா கிவிமகி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2.6 மில்லியன் பேர் உள்ளனர். பிரிட்டனில் ஆகக் கூடுதலான மரணங்களுக்குக் காரணமான நோயும் இதுவே.மாரடைப்பு உட்பட இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வருடாந்தம் 101000 பேர் பலியாகின்றனர்.