Wednesday, March 2, 2011

” நீ நிறுத்தறீயா!! நான் நிறுத்தறேன்!! ரவுடிகளின் சவால்!

பச்சையப்பன் கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

பிப்ரவரி 23-ம் தேதி எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள், ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன் திட்டத்தோடு (preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள் சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது. கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக் கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது, ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். உடனே மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். இதற்க்கு போலீஸ் இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது. ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன்? கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன்.

எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத் தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள் ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப் போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச் சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டு கொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப் போகின்றதா என்ன?

நன்றி:வினவு, நன்றி: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு), சென்னை

சட்டம் ஒரு இருட்டறை! சிரியுங்கள்!

ஒரு நண்பன் மற்றொரு நண்பனிடம் என்ன நண்பா! ரொம்ப அவசரமா கையில் டார்ச் லைட்டோடோ நடக்கிறாய் உன்னக்கு தெரியாத இன்னிக்கு கோர்ட்டிலே கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு. அது சரி அதுக்கு எதுக்கு கையில் டார்ச் லைட்டோட போற! அட சட்டம் ஒரு இருட்டறையாச்சே அது உனக்கு தெரியாதா?.

*பசிக்காக திருடுபவனுக்கு இருட்டறையில் சிறை! 176 லட்சம் கோடி திருடுபவனுக்கு ஏசி அறையில் சிறை! அதபோல் விபத்து என்று கமிஷன் சொல்லும் நபர்களுக்கு தூக்கு 5000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவர்களை பல்லாக்கில் தூக்கு! சட்டம் ஒரு இருட்டறை மட்டும்மல்ல சிரிப்பரையும் கூட (காவி அறையும் கூட). சிரியுங்கள்!!! சிந்தியுங்கள்!

Tuesday, March 1, 2011

நீதித்துறையா? காவித்துறையா?

ஆமதாபாத், மார்ச்.1 : குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று விட்டு, குஜராத் திரும்பிக் கொண்டிருந்த 59 கரசேவர்கள் தீயில் கருகி செத்தனர்.ரெயில் எரிப்பு சம்ப வத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர மத கலவரம் வெடித்தது. 4 மாதம் நீடித்த இந்த கலவரத்தில் சுமார் 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி என்று கூறப்பட்ட உமர்ஜியும் நிராபராதி என்று விடுதலை ஆனார். மீதமுள்ள 31 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 31 பேரில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அரசு வக்கீல் இந்த தீர்ப்பை வரவேற்றார். குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் சின்கா இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், கோத்ரா ரெயில் எரிப்பில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தண்டனை அளவுக்கு அதிமானது. நியாயமற்றது என்றார்.

சிந்திக்கவும்: பாபர் முசூதியை இடித்துவிட்டு கலவரம் நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்தவ அத்வானி, முதல் நரேந்திர மோடிவரை வெளியே. கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்டது 59 பேர் அதை விபத்து என்று கமிசன் ரிப்போர்ட் சொல்கிறது. கரசேவை காரர்கள் ரயிலின் உள்ளே இருந்து கேஸ் மற்றும் அடுப்புகளை வைத்து சமையல் செய்ததில் நடந்த விபத்தாக இருக்கலாம் என்று கமிசன் சொல்கிறது. இப்படி ஒரு சந்தேகமான நிலையில் உள்ள ஒரு வழக்கை விரைந்து நடத்தி 11 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு. . எந்த ஆதாரமும் இல்லாத அநீத தீர்ப்பு. அதேவளை பாபர் மசூதியை இடித்துவிட்டு இந்தியா முழுவதும் கலவரம் நடத்தி முஸ்லிம்களை பல ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த ஹிந்து தீவிரவாதிகள் எல்லாம் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்களது வழக்கை இன்னும் முடிக்கவில்லை. 59 பேரை எரித்து கொன்றார்கள் என்றே வைத்துகொள்வோம் அவர்களுக்கு தூக்கு சரி! அதை காரணமாக வைத்து கலவரம் நடத்தி 5௦௦௦ க்கும் அதிகமான முஸ்லிம் மக்களை இரத்த வேட்டை ஆடிய மோடி கும்பலுக்கு என்ன தீர்ப்பு? இன்னும் அந்த மோடி முதலமைச்சரா இருக்கானே? இது நீதியின் தீர்ப்பு இல்லை! இது ஹிந்துவா ஆதரவு தீர்ப்பு! இது நீதி துறை இல்லை! ஹிந்துதுவாவின் படித்துறை!! 

தொலைந்து போன வருடங்கள்!!


கல்லூரியை முடித்து விட்டு வேலையை தேடிக்கொண்டிருந்த நாட்கள். நண்பர்களுடன் ஒன்றாக இருந்து பத்திரிகைகளை புரட்டுவதும் இண்டர்வியூக்கு செல்வதுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன. வேலை இன்றி திரும்பும் நண்பனை வாஞ்சையுடன் வரவேற்பதும் வேலை கிடைத்தவை 'உன்னைய சங்கத்துல இருந்து நீக்கிட்டோம்' என்றும் கூறியும் நகர்ந்து கொண்டிருந்தன நாட்கள்.

என்ன தான் சிரித்து பேசிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் கழிந்து செல்லச் செல்ல வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் உணர்ந்தோம். சிலருக்கு வேலை உடனே கிடைத்தது. சிலருக்கு பல மாதங்கள் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்தது. எப்படியோ எல்லோருக்கும் வேலை கிடைத்தது, சம்பளமும் கிடைத்தது.

சில வருடங்கள் முன் நடைபெற்ற இந்த சம்பவங்கள் சில தினங்களுக்கு முன் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கிய போது மீண்டும் மனதில் வந்தன. குற்றம் சாட்டப்பட்ட 94 நபர்களில் 63 நபர்களை குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு இந்த நீதிமன்றம் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகள்!!
அன்று சில மாதங்கள் சும்மா இருப்பதையே வாழ்க்கையை தொலைத்து கொள்வதாக நினைத்தோமே... ஆனால் இவர்கள் தொலைத்ததோ ஒன்பது வருடங்கள். எவ்வித குற்றமும் செய்யாமல் ஒன்பது ஆண்டுகள் இந்த அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அரசியல்வாதிகளுக்கு சிறையில் கிடைக்கும் சொகுசுகளா இவர்களுக்கு வழங்கப்பட்டது? சித்திரவதைகளும் நிந்தனைகளும்தான் இவர்களை ஒன்பது ஆண்டுகள் வாட்டி வதைத்தன.

அதிலும் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் நெஞ்சம் இன்னும் கனத்தது. சில நாட்கள் வேலையும் சம்பளமும் இல்லாமல் இருந்தாலே என்ன நடக்கும் என்பதை நாமறிவோம்.

பெற்றோர்களின் சம்பாத்தியமும் ஆதரவும் இருந்ததால் அன்று நாங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் போதும் சாப்பாட்டிற்கு பிரச்சனையில்லை. ஆனால் இவர்களின் நிலை?? பலரும் தினக்கூலிகள். சம்பாத்தியம் இருந்தால் அன்று வீட்டில் அடுப்பெரியும். குடும்பத்தின் ஆண் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தால் அக்குடும்பத்தின் நிலை என்னவாக இருக்கும்?

மனக்கஷ்டம் ஒரு புறம் என்றால், மற்றொரும் புறம் பொருளாதார சிக்கல். உண்மையில் சிக்கித்தான் போனார்கள் இந்த குடும்பத்தின் பெண்மணிகள். சாப்பாட்டிற்கே வழி இல்லை எனும் பொழுது குழந்தைகளுக்கு எங்கிருந்து கல்வி வழங்குவது? குடும்பத்தின் சுமையை ஏற்ற இவர்கள் வீட்டு வேலைகளை செய்து சொற்பமாக சம்பாதித்து குடும்பத்தை நடத்தினர்.

மகன் அநியாயமாக சிறையில் இருக்கும் ஏக்கத்தில் உயிரை விட்டனர் சில தந்தைமார்கள். எல்லாம் கடந்து தற்போது ஒன்பது வருடங்களுக்க பிறகு நிரபராதி என்ற அறிவிப்பு!

இது ஏதோ குஜராத்தில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. தமிழக சிறைகளில் பதிமூன்று வருடங்களாக இருக்கும் அப்பாவிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 'நாங்கள்தான் குண்டு வைத்தோம்' என்று அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய போதும் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்யுக்தா எக்ஸ்பிரஸ் மற்றும் அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகள். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் அநியாயமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கண்ணீர் கதைகள் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இழந்த இவர்களின் ஒன்பது வருடங்களை இவர்களுக்கு திரும்ப கொடுக்கப்போவது யார்?

இந்த அப்பாவிகளைக் கைது செய்து சிறையிலடைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

இவர்கள் குடியிருக்க வாடகை வீடு வழங்கப்போவது யார்?

இவர்களுக்கு இனி வேலை கொடுக்கப் போவது யார்?

சொந்த தொழில் செய்தாலும் இவர்களுடன் வியாபார உறவுகளை வைத்துக்கொள்வது யார்?

தீவிரவாதி என இத்தனை வருடங்கள் அறியப்பட்ட இவர்களை ஏற்றுக்கொள்ள சமுதாயம் தயாராக இருக்கிறதா?

இவர்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள சமுதாயம் தயாராக உள்ளதா?

இன்னும் ஏராளமான கேள்விகள்.. விடை தெரியாத கேள்விகள்.

செய்தியை கேள்விப்பட்ட நாம் சிறிது அனுதாபத்தை கொட்டிவிட்டு நமது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை... கேள்வி குறியுடன் முடிக்க நான் விரும்பவில்லை.
சிந்தனைக்கு
ஏர்வை ரியாஸ்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு-11 பேருக்கு தூக்கு, 20 பேருக்கு ஆயுள்

அகமதாபாத்: கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு, உ.பி. மாநிலம் அயோத்தியிலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர சேவர்கள் குஜராத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது திடீரென அதில் இருந்த எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து குஜராத்தில் பெரும் மதக்கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

இந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 94 பேர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில், கடந்த 22ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, 31 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மெளலானா உமர்ஜி உள்ளிட்ட மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரமில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் 31 பேர் மீதான தண்டனை விவரத்தை நீதிபதி ஆர்.ஆர்.படேல் அறிவித்தார். அதன்படி 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சதித் திட்டம் தீட்டியது, அதை நிறைவேற்றியது, ரயிலை எரித்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

அதிரையிலிருந்து முஸ்லிம் எம்.எல்.ஏ சாத்தியமா?


பட்டுக்கோட்டை தொகுதி வரலாறு"பதிவிலிருந்து கிடைத்த தகவல் மூலம் அதிராம்பட்டினம் தொகுதியை பிரித்து பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னணியில் நீண்டகால சதித்திட்டம் அல்லது நமது அரசியல் விழிப்புணர்வின்மை இருந்துள்ளது தெரியவருகிறது.

முந்தைய அதிராம்பட்டினம் தொகுதியில் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் முதலான ஊர்களும் இருந்துள்ளன. இவ்வூர்களிலுள்ள வாக்காளர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பது கவனிக்கத்தக்கது.

1967 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் முத்துப்பேட்டையை திருத்துறைப்பூண்டி தொகுதியுடனும்,புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களை பேராவூரணி தொகுதியுடனும் சேர்த்துவிட்டு அதிரை, மதுக்கூர் ஆகியவற்றை மட்டும் இணைத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் நிறைந்துள்ள தொகுதியில் எதிர் காலத்தில் முஸ்லிம்களே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற அரசியல் கட்சிகளின் நீண்டகால சூழ்ச்சி இதில் இருக்கக் கூடும்.

சட்டமன்ற தொகுதியாகும் பட்சத்தில் அதிரைக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நகராட்சியானால் முனிசிபல் வரிகள் அதிகம் செலுத்த வேண்டும் என்பதோடு அதிரையின் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அதிரை தொகுதியை பட்டுக்கோட்டைக்கு விட்டுக் கொடுத்ததில் நமது முன்னோர்கள் கோட்டை விட்டுள்ளனர்.

சாதிய அடிப்படையில் கள்ளர், கோணார், செட்டியார், தேவர், தலித்துகள் நிறைந்த அதிராம்பட்டினம். தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்படும் வரை பிராமனர் அல்லது தேவர் இனத்தவரே நமது சட்டமன்ற பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். அதிரை முஸ்லிம்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இவ்விரு சாதிகளும் சிறுபான்மை எண்ணிக்கையிலேயே இருந்துள்ளனர்.

மேலும், 1952-62 தேர்தல்களில் அதிரை வாக்காளர்களே வெற்றியாளர்களைத் தீர்மானித்துள்ளனர் என்பதை கீழ்க்காணும் புள்ளிவிபரத்திலிருந்து அறியலாம்.

YEAR  WINNER   RUNNER   DIFF  DIFF %
1952     21,461       15,072     6,389  30%
1957     26,785       16,995     9,790  37%
1962     31,503       26,104     5,399  17%

அதாவது, சுமார் 5000 முதல் 10,000 வாக்காளர்களின் கூடுதல் ஆதரவைப் பெற்றவரே 1952-62 வரையிலான தேர்தல்களில் வென்றுள்ளார். இது நமதூர் வாக்காளர்களில் 50% க்கும் குறைவு. அதிரை முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத எந்தக் கட்சி வேட்பாளரும் அதிராம்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க முடியாத நிலையே இருந்து வந்துள்ளது.

எனினும், காங்கிரஸ், திமுக பிறகு அதிமுக ஆகிய கட்சிகளின் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களையே இதுவரை தேர்த்தெடுத்துள்ளோம்! முந்தைய அதிரை தொகுதியில்தான் இந்நிலை என்றாலும், பட்டுக்கோட்டை தொகுதி உருவான பின்னரும்கூட, சட்டமன்ற உறுப்பினரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்துள்ளனர். இதை கீழ்காணும் புள்ளிவிபரத்திலிருந்து அறிய முடிகிறது.

YEAR  WINNER   RUNNER   DIFF  DIFF %
1967     35,198       28,056     7,142  20%
1971     44,565       26,229   18,336  41%
1977     25,993       25,082        911  4%
1980     52,900       42,302   10,598  20%
1984     50,493       35,376   15,117  30%
1989     41,224       26,543   14,681  36%
1991     67,764       39,028   28,736  42%
1996     69,880       36,259   33,621  48%
2001     55,474       48,524     6,950  13%
2006     58,776       43,442   15,334  26%

காங்கிரஸ் பெருந்தலைவர்களில் ஒருவரான காமராஜருக்கும் சீனியரான  மர்ஹூம் அப்துல் அஜீஸ் காக்கா, மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக  இருந்த மர்ஹூம் M.M.S.அபுல்ஹசன் போன்ற அரசியல் பின்புலம் கொண்ட  பலர் இருந்தும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து கடந்த 60 ஆண்டுகளில் ஒரேயொரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கிடைக்காது இப்பகுதி மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற நிலையையே காட்டுகிறது.

ஆக்கம்: இப்னு நூர்

தொடர்புடைய சுட்டிகள்

2) http://adiraixpress.blogspot.com/2011/02/blog-post_20.html

பிரியாணி, மது, பணத்துக்காக ஓட்டுரிமையை இழக்காதீர்: நரேஷ் குப்தா


திருப்பூர்: பிரியாணி, மது, பணம் போன்றவை கிடைக்கிறதே என்று மக்கள் தங்கள் ஓட்டுரிமையை இழந்து விடக்கூடாது என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருப்பூரில் கண்ணியமான தேர்தல் -2011 என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு அந்த இயக்கத்தின் மாநில துணை தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.

இதில் கலந்து கொண்டு நரேஷ் குப்தா பேசியதாவது,

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால் அதற்கு பதிலாக நகல் அட்டை பெற முடியும். கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி இறுது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்து பெயர் சேர்க்க முடியும்.

காந்தி நடந்த பாதையில் தான் தினமும் நடப்பதாக ஒரு படத்தில் கதாநாயகன் நகைச்சுவையாக சொல்வார். அவ்வாறு காந்தியத்தை பின்பற்றாமல் அவரது கொள்கைகளை பின்பற்றற வேண்டும். காந்தியிடம் உண்மை, அகிம்சை என்ற இரு சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருந்தன.

கடந்த 1920-ம் ஆண்டில் 'யங் இந்தியா' பத்திரிகையில் தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போது, முதலில் அவரது நேர்மையை மட்டுமே பார்க்க வேண்டும் என காந்தி குறிப்பிட்டிருந்தார்.

வேட்பாளரின் கட்சி, கொள்கை, வாக்குறுதி, நோக்கம் முக்கியமன்று, அவர் நேர்மையானவரா என்று தான் மக்கள் பார்க்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் முந்தைய சொத்து விவரம், பதவியில் இருக்கும் போது சொத்து விவரங்கள் பத்திரிகைகளில் வருகின்றன.

தேர்தல் விதிமுறைகளில் பேனர், போஸ்டர் குறித்த புகார்களை தெரிவிக்கும் மக்கள், பிரியாணி, மது மற்றும் பணம் தருவது குறித்த புகார்களை தெரிவிக்க முன்வருவது இல்லை. பிரியாணி, மது, பணம் போன்றவை கிடைக்கிறதே என்று மக்கள் தங்கள் ஓட்டுரிமையை இழந்து விடக்கூடாது.

இப்படி ஒரு கொள்கையை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் மக்களை திரட்டி சத்யாகிரகத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.
thank u  thatstamil

பெற்றோர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!! முக்கிய அறிவிப்பு


கடந்த சில வருடங்களாகவே, கல்வி கற்க கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் முஸ்லிம் பெண்கள் காதல் வயப்படுவதும் அல்லது குடும்பத்தை துறந்து காதலனுடன் ஓடிப்போவதும் அதிகரித்து வருகிறதாவே தெரிகிறது. அபரிதமான செல்போன் புழக்கமும் கட்டுப்பாடில்லாத போக்கும், இஸ்லாத்தின் வாழ்வியல் நெறி சரியாக போதிக்கப்படாததாலும் இந்நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
 சகோதரிகளே! ஆசைவார்தைக்கு மயங்கிவிடாதீர்கள்,

சகோதரிகளே!நீங்கள் எக்காரணத்தை கொண்டும் அந்நிய ஆணோடு பேசுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும், அவர்கள் ஆரம்பத்தில் மிகவும் அன்பு காட்டுவதை போல் நடிப்பார்கள்,சிரித்து பேசுவார்கள் , கண்ணே! மணியே!நீதான் என் உயிர், நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறுவார்கள்,நம்பி விடாதீர்கள்.ஏமாந்துவிடாதீர்கள்,மோசம் போய் விடாதீர்கள். சகோதரிகளே,  பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும்.. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் 


குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.
  
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண்குழந்தைகளையும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்லவேண்டும், நம் கண்ணுக்கு தெரிந்தே நம் சகோதரிகள் நரக படுகுழியில் விழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது,  கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பது நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.இது ஒரு சில இடங்களில் மட்டும் தான் எதார்த்தமாக நடக்கும், அதிகபட்சம் பாசிஸ வகுப்புவாத சக்திகளால் திட்டமிட்டே நடந்தேறுகிறது, நம் முஸ்லிம் பெண்களை நாம் பாதுகாக்கவேண்டும், இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது,இதற்க்கெல்லாம் காரணம் நம் சகோதரிகளுக்கு நாம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வாழ கற்றுதரவில்லை, அந்த குடும்பங்களில் இஸ்லாமிய பேணுதல் இல்லை.
இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.

நம் பிள்ளை தவறு செய்யாது என்று ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள்,இப்படி நினைத்து நினைத்து தான் நாம் ஏமாந்துவிட்டோம்,நாம் எவ்வளவு அன்பு செலுத்தினாலும் ஒரு பக்கம் நாம் கண்காணித்து கொண்டே இருக்கவேண்டும்..தோழிகளே! உங்களுடைய நண்பிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம், நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ. அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள், உங்களுடைய நட்பை பாதுகாக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அவள் செய்யும் மாபாதக செயலை ஆதரித்து மவுனம் காக்காதீர்கள்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஷ்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆண்: 24:37)
”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.

7.தெரியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.நீங்கள் அந்நிய ஆடவர்களிடம் பேசக்கூடிய நிலைமை வந்தாலும் அச்சமயத்தில் முகத்தில் கடுமையை சிரிப்பு ஒரு துளி அளவு கூட இல்லாமல் கடுமையை காட்டுவது சிறந்தது, ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. . பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்காதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

10. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

11. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

12. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

13. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.


14. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு  பயன் படுத்தப்படுகின்றார்கள். 

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

தோழிகளே! உங்களுடைய நண்பிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம், நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ. அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள்,

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய் தகப்பனும் வேண்டாம்,அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி, கண்ணே மணியே , என் உயிரே. நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்க படுகிறாள்,இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

பெற்றோர்களே, கணவன்மார்களே,தாய்மார்களே!  சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள், இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும், பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும், தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும், முழுமையான இஸ்லாம் சிறுவயதிலிருந்தே போதிக்கபடவேண்டும்

ஒமானில் 3-வது நாளாக தொடரும் போராட்டம் - 6 பேர் பலி

மஸ்கட்,பிப்.28:தொழில் நகரமான ஸோஹாரில் அரசுக்கெதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நொறுக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன.போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசும், கலவரத் தடுப்பு படையும் நடத்திய துப்பாகிச்சூட்டில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு நாளாக அமைதியான முறையில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது எனவும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கெதிராக பலம் பிரயோகிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சி உறுதிச் செய்துள்ளது.

முகமூடி அணிந்த இளைஞர்கள்தாம் தாக்குதல் நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர். போலீஸ் மற்றும் மஜிலிஸுஸ்ஷூராவின் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

ஸோஹாரில் கவர்னரின் அலுவலகம், நகராட்சியின் தொழில்நுட்ப அலுவலகம், போலீஸ் ஸ்டேசன், லேபர் அலுவலகம், ஒரு ஆயில் டேங்கர், பெட்ரோல் ஸ்டேஷன் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

மஸ்கட்-துபாய் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.ஒமானின் இரண்டாவது பெரிய நகரமான ஸலாலாவிலும் போராட்டம் பரவியுள்ளது.

ஒமானில் வரம்பு மீறிய ஊழலும், மோசமான பொருளாதார சூழலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஜனநாயகம் வேண்டும்! ஷூரா கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும்!நீண்டகாலமாக ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் வெளியேற வேண்டும்! வேலை வேண்டும்! போன்ற கோரிக்கைகள் போராட்டத்தின்போது எடுத்துரைக்கப்பட்டன.

ஒமானில் அரசியல் கட்சிகள் செயல்படுவது தடைச் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் மேலும் பரவாமலிருக்க அந்நாட்டு மன்னர் காபூஸ் 6 அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.


யார் இந்த தேச பக்தர்கள்?


பிப் 28: காந்திஜியை கொன்றவர்கள். பாப்பரி பள்ளியை இடித்தவர்கள். இடிப்பதற்கு பாபாஜி அம்பேத்கர் தினமான டிசம்பர் 6 தேர்ந்தெடுத்தவர்கள். சுதந்திரப்போரட்ட வீரர்களை காட்டி கொடுத்தவர்கள் (வாஜ்பாய்). மீரட், குஜராத், மும்பை, கோயபுத்தூர், பகல்பூர், டெல்லி, ஹைதராபாத், கலவரங்களை நடத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்றவர்கள்.
கிருத்துவ மத குருமார்களை கொன்றவர்கள், கன்னியாஸ்திரிகளை கற்பழித்தவர்கள், கிருத்துவ தேவாலயங்களை எரித்தவர்கள், கர்ப்பிணி பெண்களை கொன்றவர்கள். ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை குழைக்க நினைப்பவர்கள். ஹிந்து பக்தர்களை ரயிலிலில் வைத்து கொளுத்தியவர்கள். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக இருந்தவர்கள்.
காஷ்மீரையும் இந்தியாவிலிருந்து பிரிக்க துடிப்பவர்கள். கார்கே என்ற போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள். மலோகன், மக்காப்பள்ளி, டெல்லி சம்ஜோத எக்ஸ்ப்ரெஸ் போன்ற குண்டு வெடிப்புகளை ஐ.எஸ்.ஐ யுடன் சார்ந்து நடத்தியவர்கள். இன்னும் நம் நாட்டிற்காக நிறைய சேவை செய்ய காத்துக்கொண்டு இருப்பவர்கள். நாட்டில் மீனவர்கள் பிரச்சனை முதல் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க தங்களை காப்பாற்ற அன்னை சோனியா காந்தி அம்மையாரையே சுற்றி சுற்றி வருகிறார்கள். இந்திய முன்னேறும் வல்லரசாகும் என்ற டாக்டர் அப்துல் கலாமின் கனவை நினைவாக்க துடிக்கும் நம் நாட்டின் தேச பக்தர்கள் (துரோகிகள். இவர்கள் யார் என்று நான் சொல்லத்தேவை இல்லை நீங்களே புரிந்திருப்பீர்கள்.

அன்புடன்: முரசு