பட்டுக்கோட்டை தொகுதி வரலாறு"பதிவிலிருந்து கிடைத்த தகவல் மூலம் அதிராம்பட்டினம் தொகுதியை பிரித்து பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னணியில் நீண்டகால சதித்திட்டம் அல்லது நமது அரசியல் விழிப்புணர்வின்மை இருந்துள்ளது தெரியவருகிறது.
முந்தைய அதிராம்பட்டினம் தொகுதியில் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் முதலான ஊர்களும் இருந்துள்ளன. இவ்வூர்களிலுள்ள வாக்காளர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பது கவனிக்கத்தக்கது.
1967 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் முத்துப்பேட்டையை திருத்துறைப்பூண்டி தொகுதியுடனும்,புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களை பேராவூரணி தொகுதியுடனும் சேர்த்துவிட்டு அதிரை, மதுக்கூர் ஆகியவற்றை மட்டும் இணைத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் நிறைந்துள்ள தொகுதியில் எதிர் காலத்தில் முஸ்லிம்களே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற அரசியல் கட்சிகளின் நீண்டகால சூழ்ச்சி இதில் இருக்கக் கூடும்.
சட்டமன்ற தொகுதியாகும் பட்சத்தில் அதிரைக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நகராட்சியானால் முனிசிபல் வரிகள் அதிகம் செலுத்த வேண்டும் என்பதோடு அதிரையின் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அதிரை தொகுதியை பட்டுக்கோட்டைக்கு விட்டுக் கொடுத்ததில் நமது முன்னோர்கள் கோட்டை விட்டுள்ளனர்.
சாதிய அடிப்படையில் கள்ளர், கோணார், செட்டியார், தேவர், தலித்துகள் நிறைந்த அதிராம்பட்டினம். தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்படும் வரை பிராமனர் அல்லது தேவர் இனத்தவரே நமது சட்டமன்ற பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். அதிரை முஸ்லிம்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இவ்விரு சாதிகளும் சிறுபான்மை எண்ணிக்கையிலேயே இருந்துள்ளனர்.
மேலும், 1952-62 தேர்தல்களில் அதிரை வாக்காளர்களே வெற்றியாளர்களைத் தீர்மானித்துள்ளனர் என்பதை கீழ்க்காணும் புள்ளிவிபரத்திலிருந்து அறியலாம்.
YEAR WINNER RUNNER DIFF DIFF %
1952 21,461 15,072 6,389 30%
1957 26,785 16,995 9,790 37%
1962 31,503 26,104 5,399 17%
அதாவது, சுமார் 5000 முதல் 10,000 வாக்காளர்களின் கூடுதல் ஆதரவைப் பெற்றவரே 1952-62 வரையிலான தேர்தல்களில் வென்றுள்ளார். இது நமதூர் வாக்காளர்களில் 50% க்கும் குறைவு. அதிரை முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத எந்தக் கட்சி வேட்பாளரும் அதிராம்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க முடியாத நிலையே இருந்து வந்துள்ளது.
எனினும், காங்கிரஸ், திமுக பிறகு அதிமுக ஆகிய கட்சிகளின் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களையே இதுவரை தேர்த்தெடுத்துள்ளோம்! முந்தைய அதிரை தொகுதியில்தான் இந்நிலை என்றாலும், பட்டுக்கோட்டை தொகுதி உருவான பின்னரும்கூட, சட்டமன்ற உறுப்பினரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்துள்ளனர். இதை கீழ்காணும் புள்ளிவிபரத்திலிருந்து அறிய முடிகிறது.
YEAR WINNER RUNNER DIFF DIFF %
1967 35,198 28,056 7,142 20%
1971 44,565 26,229 18,336 41%
1977 25,993 25,082 911 4%
1980 52,900 42,302 10,598 20%
1984 50,493 35,376 15,117 30%
1989 41,224 26,543 14,681 36%
1991 67,764 39,028 28,736 42%
1996 69,880 36,259 33,621 48%
2001 55,474 48,524 6,950 13%
2006 58,776 43,442 15,334 26%
காங்கிரஸ் பெருந்தலைவர்களில் ஒருவரான காமராஜருக்கும் சீனியரான மர்ஹூம் அப்துல் அஜீஸ் காக்கா, மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்த மர்ஹூம் M.M.S.அபுல்ஹசன் போன்ற அரசியல் பின்புலம் கொண்ட பலர் இருந்தும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து கடந்த 60 ஆண்டுகளில் ஒரேயொரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கிடைக்காது இப்பகுதி மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற நிலையையே காட்டுகிறது.
ஆக்கம்: இப்னு நூர்
தொடர்புடைய சுட்டிகள்
2) http://adiraixpress.blogspot.com/2011/02/blog-post_20.html
0 comments:
Post a Comment