Thursday, March 17, 2011

2011 சட்டசபைத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறப் போவது என்ன?

http://thatstamil.oneindia.in/news/2011/03/16/who-is-the-hero-dmk-election-manifesto-aid0090.htmlசென்னை: கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி தேடிக் கொடுத்த இலவச டிவி உள்ளிட்ட இலவச அறிவிப்புகளைப் போல இந்த தேர்தல் அறிக்கையிலும் அசத்தலான இலவச அறிவிப்புகள் இடம் பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.


ரஜினி படம் ரேஞ்சுக்கு மாறி விட்டது திமுகவின் தேர்தல் அறிக்கை. வழக்கமாக ரஜினி படம் வெளியாவதற்கு முன்பு ஏகப்பட்ட செய்திகள் வருவது வழக்கம். படத்தில் இது இருக்கிறது, அது இருக்கிறது, இந்த சிறப்பம்சம் உள்ளது என்று கூறுவது போல, திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கப் போகின்றன என்பதுதான் இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

காரணம், கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த இலவச டிவி உள்ளிட்ட இலவச அறிவிப்புகள் மக்களிடையே படு வேகமாக ரீச் ஆகி, திமுகவுக்கு ரிச்சான முடிவுகளை பெற்றுக் கொடுத்ததே.

அந்த வகையில் தற்போதைய சட்டசபைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இருக்கலாம், அது இருக்கலாம் என்ற யூகங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

வழக்கம் போல திமுகவின் 'ஞானிகளில்' ஒருவரான பேராசிரியர் மு.நாதன் (மு.நாகநாதனை இப்படித்தான் இப்போது கூறுகிறார்கள்) தலைமையிலான குழு தேர்தல் அறிக்கையை உருவாக்கி வருகிறது. இதை மார்ச் 19ம் தேதி கருணாநிதி வெளியிடுகிறார்.

இலவச செல்போன், 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை, ஒரு ரூபாய் அரிசியை முழுமையாக இலவசமாக்குவது போன்ற பல்வேறு திட்டங்கள் இடம் பெறலாம் என்று தகவல்கள் வருகின்றன.

கடந்த தேர்தலில் திமுகவின் ஹீரோ இலவச டிவி என்பது போல, இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெறப் போகும் சூப்பர் ஹீரோ யார் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது.

0 comments:

Post a Comment