புதுடில்லி: ஒரிசா மாநிலத்தை ஒடிசா என பெயர் மாற்றம் செய்வதற்கும், ஒரியா மொழி இனி ஒடிசா என ஆட்சி, மற்றும் அலுவலக மொழியாக மாற்ற பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரிசா மாநிலத்தை ஒடிசா என பெயர் மாற்றம் செய்யக்கோரி பார்லிமென்ட் அரசிலமைப்பு சட்டம் 113 பிரிவின் கீழ் மாசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அம்மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் எம்.பி.க்கள் பார்லிமென்ட் இரு சபைகளிலும் வலியுறுத்தி வந்தனர் . லோக்சபாவிலும் ஏற்கனவே இதற்கு ஒப்புதல் தரப்பட்டுவிட்டது. இந்நிலையில் ராஜ்யசபையில் 245 எம்.பி.க்கள் இதற்கு ஆதரவாக ஒட்டளித்தனர். இதன் மூலம் இரண்டில் ஒரு பங்கு மெஜாராட்டியுடன் இந்த மசோதாவிற்கு ஆதரவு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஒரிசா மாநிலம் இனி ஒடிசா என்றும், ஒரியா மொழி அம்மாநிலத்தின் அலுவலகத்தின் ஒடிசா எனவும் அழைக்கப்படும்
0 comments:
Post a Comment