Monday, March 7, 2011

புரட்ச்சி பயம்!! சீர்திருத்தங்களை கொண்டுவரும் சீன அரசு!

பெய்ஜிங்,மார்ச்.7:சீன அரசு தனது நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, அதிகாரக் குவியலை குறைத்து பரவலாக்கப்படும் என அறிவித்துள்ளது. தேசிய மக்கள் மன்றக் கூட்டத்தின் தொடக்க உரையில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ சனிக்கிழமை இதை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ கலந்து கொண்டார். பிரதமர் பேசும்போது கூறியது: "சீனாவில் வருமானத்தில் உள்ள பெரும் ஏற்றத்தாழ்வு குறித்து மக்களிடையே பெரும் வருத்தம் உள்ளது. நிர்வாகத்தில் நிறைய மாறுதல்கள் கொண்டு வரவேண்டியுள்ளது. அதிகாரங்கள் மத்திய அரசில் குவிந்துள்ளன. 

இவை பரவலாக்கப்பட வேண்டும். வரம்பற்ற அதிகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். ஊழலைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளும், நீதி, நியாயங்களும் காக்கப்பட வேண்டும்." என அவர் கூறினார்.

தேசிய மக்கள் மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் சீன சமூக மேம்பாட்டுக்காக சேவை புரிந்தவர்களின் குழுவும் கலந்து கொண்டது. ஆண்டுக்கு ஒரு முறை கூடும் மன்றம் இது.

மேற்காசிய நாடுகளில் மக்கள் புரட்சியின் மூலம் கவிழ்ந்து வரும் அரசுகளின் நிலைமை தங்களுக்கும் வந்துவிடக் கூடாது எனும் நோக்கோடு சீன அரசு இந்தவித அரசியல் உத்தியை மேற்கொள்கிறது எனக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment