இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனசீர்பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 28-ம தேதியன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டு்க்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மேலும் அவர் தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டிருககலாம் என்ற சந்தேகமும் அந்நாட்டு தேசிய புலனாய்வு ஏஜஜென்சி கருதுகிறது. தக்ரிக்௸இ- தலிபான் என் அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய நிர்வாகக்குழுக்கூட்டம் , உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தலைமையில் நடநத்து. இதில் கலந்துகொண்டு பேசிய மாலிக் , பெனாசீர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக , அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக கொலை நடந்த அன்று சிக்கியுளள வீடியோ ஆதாரம் சிக்கயிருப்பதாகவும் தெரிவித்தார்.
thanks to thaalam.
0 comments:
Post a Comment