துபாய்: துபாயில் சக இந்தியரைக் கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் ஒரு இந்தியருக்கு மரண தண்டனையும், 11 இந்தியர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு குடிபோதையில் ஏற்பட்ட தகராறி்ல் சக இந்தியரைக் கொலை செய்ததற்காக பஞ்சாபைச் சேர்ந்த மேஜர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டடுள்ளது. மேலும், 11 இந்தியர்களுக்கும், 1 பாகிஸ்தானியருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நபர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
சுகிஜித் சிங், ராகேஷ் குமார், சுக்விந்தர் சிங், சுர்ஜித் சிங், மஞ்சித் சிங், ராஷ்பல் சிங், பல்விந்தர் சிங், அமர்ஜித் சிங், சுரிந்தர் சிங், பல்விந்தர் சிங், சரப்ஜித் சிங் மற்றும் பாகிஸ்தானியர் முஹமது ரபாத் ஆகியோர் தான் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.
இந்த வழக்கு துபாயில் உள்ள ஜெபெல் அலி காவல் நிலையத்தின் கீழ் இருந்தது. இவ்வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி நிறைவடைந்தது. தீர்ப்பு மட்டும் ஜனவரி மாதம் 3-ம் தேதி வழங்குவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு முதலில் பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச்
14-ம் தேதி அளிக்கப்பட்டது.
thatstamil

0 comments:
Post a Comment