Tuesday, November 01, 2011
நாட்டில் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை சக்திபடுத்துவதற்காக தேசிய அளவில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை கொண்டு போராடும் ஒரு நவீன சமூக இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனித உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், பல பிரச்சனைகளை கையிலெடுத்து போராடி வருகின்ற நீண்ட வரலாறு பாப்புலர் ஃப்ரண்டிர்கு உண்டு. இந்த இலட்சிய பாதையில் தேசிய அளவில் சமூக நீதியை நிலை நாட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வருகின்ற 2011 நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் சமூக நீதி மாநாடு ஒன்றை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த உள்ளது. சமூக நீதியின் செய்தியை மக்களுக்கு அறிவிப்பதாக இம்மாநாடு அமையும். அத்துடன் நீதி மறுக்கப்பட்ட நமது சக குடிமக்களுக்கு ஆதரவை பெறும் சூழலையும் உருவாக்கும். ஒரே இலட்சியத்திற்காக போராடும் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் சங்கமமாகவும் இம்மாநாடு அமையும்.
பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாடு (2007 பெங்களூர்) மற்றும் தேசிய அரசியல் மாநாடு 2009 கோழிக்கோடு) ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தன. தேசிய தலைநகரில் நடத்தப்படவுள்ள இந்த சமூக நீதி மாநாடு அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் மக்களை பெருமளவில் கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. சமூக நீதியை பெறுவதற்கான போராட்டத்தில் நமது பங்களிப்பை செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. நீதிமிக்க தேசத்தை அமைப்பதற்கான முயற்சியில் பாப்புலர் ஃப்ரண்டுடன் கைகோர்த்து நிற்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாருங்கள்! நமது தேசத்தை நீதியால் கட்டமைப்போம்!
THANKS TO ISLAMIYA SINTHANAI (FACEBOOK)
இது வெற்றி பெற இறைவனிடம் பிராத்திகிறேன்.
ReplyDeleteinsha allah
ReplyDelete