Sunday, March 13, 2011

வரும் தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு 144

144 என்றதும் தடை உத்தரவு என்று நினைத்தீர்களா ! அதுதான் இல்லை வரும் தேர்தலில் 144 இடங்களில் அ.தி.மு.க.நிர்கபோகிறது 
சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. 144 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், குடியரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் தே.மு.தி.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, குடியரசு கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. 144 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 9 ராசியான நமபர் என கருதப்படுகிறது. எனவே அதன் கூட்டுத் தொகை வருவது போன்று 144 தொகுதிகளில் அ.தி. மு.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்த தேதி பிப்ரவரி 24. இதன் கூட்டு தொகை 6 என வருகிறது. பொதுவாக 3, 6, 9 என்ற நம்பர்கள் ராசியானவை என நம்பப்படுகிறது. இதிலும் நம்பர் 9 மிகவும் ராசியானவையாக கருதப்படுகிறது. ஆகவே அ.தி.மு.க. 144 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என அக்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment