பிராங்க்ஃபர்ட்,மார்ச்.3:ஜெர்மனியில் பிராங்க்ஃபர்ட் விமானநிலையத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் சுட்டதில் 2 அமெரிக்க விமானப்படை ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க ராணுவத்தினர் பயணித்த பஸ்ஸின் மீது இத்தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் இருவருக்கு கடுமையான காயமேற்பட்டது. இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிராங்ஃபர்ட் விமானநிலையத்தின் 2-வது டெர்மினலில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய 21 வயதான கொஸாவாவைச் சார்ந்த நபரை கைது செய்ததாக போலீஸ் அறிவித்துள்ளது. இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிராங்க்ஃபர்ட் விமானநிலையத்திலிருந்து அருகிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்த ராணுவவீரர்கள் தாக்குதலுக்குள்ளாயினர். போலீஸார் கைது செய்துள்ள கொஸாவாவைச் சார்ந்த நபருக்கு தீவிரவாதத் தொடர்பு உண்டா? என்பதுக் குறித்து விசாரிக்கப்படும் என ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
செய்தி:மாத்யமம்

0 comments:
Post a Comment