புதுடெல்லி:லிபியாவுக்கெதிராக பன்னாட்டு படையினர் நடத்தும் விமானத் தாக்குதல் அத்துமீறல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் பெரும் அழிவிற்கும், லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கும் காரணமான நேட்டோவின் நடவடிக்கை லிபியாவிலும் தொடர்கிறது என பொலிட்பீரோ வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
லிபியாவின் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அந்நாட்டின் இறையாண்மையின் மீது அத்துமீறல் நடத்தப்பட்டுள்ளது.
லிபியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் காணப்படும் எண்ணெய் வளத்தின்மீதான தங்களது ஆவலை பாதுகாக்கத்தான் மேற்கத்தியநாடுகள் முயல்வதாக சி.பி.எம் குற்றஞ்சாட்டியுள்ளது
by sinthikavum blogger
0 comments:
Post a Comment