Tuesday, March 29, 2011

63,000 கள்ள கிரடிட் காட்டோடு இலங்கையர் கைது!

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் கடன் அட்டை மோசடியில் சுமார் 56 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இக் கும்பலானது பாரிய வலை அமைப்பு ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்க முனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வேலைபார்க்கும் இலங்கையர்களை அணுகி, பெரும் பணத்தைக் கொடுத்து அங்குள்ள கடனட்டை இயந்திரத்தில் தமது இலத்திரனியல் உபகரணங்களைப் பொருத்தியுள்ளனர். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் கடன் அட்டை இலக்கங்களை அவர்கள் பெற்றுகொண்டுள்ளனர்.

மறைத்துவைக்கப்படும் சிறிய கமராக்கள் மூலமாக வாடிக்கையாளர் கடன் அட்டையின் இரகசியக் குறியீட்டு எண்களையும் இவர்கள் பெற்று, பின்னர் அதேபோல போலியான கடன் அட்டைகளை இவர்கள் தயாரித்து, அதனைக் கொண்டு காசைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் 25.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர்கள் சம்பாதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பும் இடங்களில் வேலைசெய்யும் சில இலங்கையருக்கு அவர்கள் பெருந்தொகைப்பணத்தைக் கொடுத்துள்ளதாகவும், பிடிபட்ட கும்பலிடம் சுமார் 63,000 கள்ளக் கடனட்டைகள் இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளர்.

இப் பிரச்சனை ஒருபக்கம் இருக்க, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இக் கடனட்டை மோசடிக்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் இதனை அவுஸ்திரேலிய பொலிசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இக் குற்றச்செயல்களில் இலங்கையர் ஈடுபட்டுள்ளதால், அவுஸ்திரேலிய அரசு தமிழர்களுக்கு புகலிடம்கொடுக்கக்கூடாது என்றும் இலங்கை தூதரம் மேலும் தெரிவித்துள்ளதாக மனிதன் இணையம் அறிகிறது. உலகில் எந்தக் குற்றச் செயல்களில் இலங்கைத் தமிழர்கள் அகப்பட்டாலும், அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை தூதரகம் தெரிவித்துவருகிறது. 29 Mar 2011

0 comments:

Post a Comment