Wednesday, March 23, 2011

ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி


போபால் விஷ வாயு கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு கழக நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சனை, இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1984 ஆம் ஆண்டில் போபாலில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் அமெரிக்காவுக்கு தப்பி சென்றுவிட்டார். 

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே சமயம் ஆண்டர்சன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வந்து, அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில் ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்க கோரி, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி வினோத் யாதவ்,ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மூலம் முன்வைக்க சிபிஐ-க்கு அனுமதி அளித்தார். 

போபால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை கணக்கில் கொண்டும், நீதியின் நலன் அடிப்படையிலும், ஆண்டர்சனை நாடு கடத்துவது சரியானது என்று கருதுகிறோம். 

எனவே, அவரை இந்தியாவுக்கு கொண்டு வர எந்த தடையும் இல்லை. இதில், சிபிஐ-யின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
thank u to webdunia

0 comments:

Post a Comment