Monday, May 2, 2011

உஸாமா பின் லேடன் மரணம்-அமெரிக்கா தகவல்

 2 May 2011
Osama
வாஷிங்டன்:அல்காயிதா போராளி இயக்கத்தின் தலைவர் உஸாமா பின் லேடன் மரணித்துவிட்டதாகவும், அவருடைய உடல் அமெரிக்கா வசம் உள்ளதாக அமெரிக்கா அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுக்குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விரைவில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
உஸாமா பின் லேடன் அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்.செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரியாக கருதப்பட்டார் அவர்.அவரை பிடிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கா லட்சத்திற்குமேற்பட்ட ராணுவ வீரர்களுடன் ஆப்கானை ஆக்கிரமித்து அப்பாவிகளை கொலைச்செய்துவருகிறது.இந்நிலையில் உஸாமா பின் லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பாகிஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையின்போது சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது

புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை


ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.

கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும்.

இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது. ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து.


கை விரல்களால் முட்டைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார்.

பரந்துபட்ட உலகில் சாதிக்க துடிப்பவர்கள் ஏராளம். அதில் சாதித்தவர்களும் நிறையவே உண்டு.
30 sec
4 egg
Guinness World Record
தனது கை விரல்களால் முட்டைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார். 30 sec 4 முட்டைகளை உடைத்து கின்னஸ் (Guinness World Record) சாதனை படைத்துள்ளார்.

Sunday, May 1, 2011

தாக்குதலை மீண்டும் வலுப்படுத்துவோம் தாலிபான் எச்சரிக்கை


taliban
காபூல்:ஆப்கானிஸ்தானில் முக்கிய இடங்களில் மீண்டும் தாக்குதலை வலுப்படுத்தப்போவதாக தாலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.’பத்ர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் அலுவலகங்கள், ராணுவ மையங்கள்,விமானப்படை மையங்கள், ஆயுத கிடங்குகள், மக்கள் திரளும் இடங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும்.
இத்தாக்குதல் மூத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஆக்கிரமிப்பு படையினருக்காக பணியாற்றுபவர்கள், வெளிநாட்டு கம்பெனிகளின் தலைவர்கள் ஆகியோரை குறிவைத்து நடத்தப்படும் என தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதிகமான சேதங்கள் ஏற்படுவதை தடுக்க மக்கள் எதிரிகளின் மையங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தாலிபான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 ஆனால், தாலிபானின் தாக்குதல்கள் ஒருவாரமே தொடரும் எனவும், இத்தாக்குதல் வெற்றிப்பெறாது என நேட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தாலிபானின் புதிய முன்னேற்றங்கள் குறித்து ஹிலாரி கிளிண்டனும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஹிலாரியின் இவ்வறிவிப்பு அமெரிக்கா முன்னர் அறிவித்ததை விட அதிக காலம் அந்நிய படையினர் ஆப்கானில் தங்குவதற்கான தந்திரமாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.ஆப்கானில் தற்போது ஒன்றரை லட்சம் அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் உள்ளனர்.ஆனால்,முந்தைய வருடங்களை விட தற்போது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன

34,343 பள்ளிகள் ஆர்.எஸ்.எஸி​னால் இந்தியாவில் நடத்தப்படு​கிறது


Ekal_Vidyalaya_Logo
ஏகல் வித்யாலயா என்ற அமைப்பு ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 34343 பள்ளிக்கூடங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகின்றது. இது இந்து பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி. தொடர்புடையது.
ஏகல் வித்யாலயா என்பது இந்துச் சிறுவர் சிறுமியருக்கு இந்துமதக் கலாச்சார மரபுகளைக் கற்பிப்பதற்காக, குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஒரேயோர் ஆசிரியரைக் கொண்டு, குருகுல பாணியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்களாகும்.
1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 34000 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 10,00,000 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தியாவை ‘சீக்க்ஷித், ஸ்வஸ்த், மற்றும் சம்ரித்’ (அறிவுமிக்க, ஆரோக்கியமான, மற்றும் வளமான(!!!)) இந்தியாவாக உரூவாக்குவதே தமது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். ஒரு இலட்சம் கிராம்ங்களை 2015க்குல் சென்றடைய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.
சங் பரிவார அமைப்புக்கு 2006 ஆம் ஆண்டு  2 மில்லியன் டாலர் கொடுத்துள்ளது  ஏகல் வித்யாலயா.அமெரிக்க அதிபர பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் ஏகல் வித்யாலயா என்ற  சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய சோனால் ஷா எனும் இந்திய அமெரிக்கப் பெண்மணி இடம் பெற்றிருக்கிறார் என சர்ச்சை கிளம்பியது.

வெளிநாட்டு நிதி:
யு.எஸில் இவ்வமைப்பு வேகமான முறையில் நிதி சேகரிக்கிறது.ஜூலை 2009 ஆம் ஆண்டு சிகாகோவில் 160000 டாலர்  நிதி சேகரித்தது.செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு சான் டிக்கொவில்  கலாச்சார  நிகழ்ச்சி மூலம் 14000 டாலர்  கொடுத்துள்ளது.மே 2010ல், 600 பேர் கலந்துக் கொண்ட சிகாகோ நிகழ்ச்சியில் 82525 டாலர் சேகரித்தது.அதே மாதத்தில் மத்திய அட்லாண்டிக் பகுதியில்,500,000 டாலர் ஐந்து கருணை இல்லம் மூலம்   நிதி சேகரித்தது.85 பள்ளிகளை 2004 மற்றும் மார்ச் 2006 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவில் உள்ள அமைப்பு தத்து எடுத்துள்ளதுதேசிய இந்து மாணவர் அமைப்பு (UK) வெளிநாட்டு நிதி திரட்டலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது

எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸி மீது துப்பாக்கிச்சூடு-கவலைக்கிடம்


Akbar_Owaisi_(6)
ஹைதராபாத்:ஆந்திரபிரதேச மாநிலத்தில் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்பருத்தீன் உவைஸி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.இதில் கவலைக்கிடமான அக்பருத்தீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனது சட்டமன்றத்தொகுதியில் சந்திரயானா குட்டாவில் ஒரு நிகழ்ச்சியி பங்கேற்றுவிட்டு காரில் திரும்புவேளையில் 4 மர்ம நபர்கள் அக்பருத்தீன் உவைஸியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.உவைஸியுடன் சென்ற இன்னொரு எம்.எல்.ஏவான அஹ்மத் பலாலாவுக்கும் துப்பாக்கிச்சூட்டில் காயமேற்பட்டது.
 மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ பதவியை வகிக்கும் அக்பருத்தீன் உவைஸிக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.வாகனத்தை பெரும்பாலும் அக்பருத்தீன் உவைஸிதான் ஓட்டுவார்.ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்தான் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிராக அக்பருத்தீன் உவைஸி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.எம்.எல்.ஏ பலாலாவின் மெய்க்காப்பாளர் திரும்பிச்சுட்டதில் தாக்குதல் நடத்திய மர்ம நபர் ஒருவருக்கு காயமேற்பட்டதாக கூறப்படுகிறது.
 இச்சம்பவத்தைத்தொடர்ந்து ஆந்திரமாநில முதல்வர் உயர்மட்டக்கூட்டத்தை கூட்டி விவாதித்தார்.உள்துறை அமைச்சர் பி.ஸபீதா இந்திர ரெட்டி, டி.ஜி.பி.கெ.அரவிந்த ராவ், கூடுதல் டி.ஜி.பி(உளவுத்துறை) எம்.மஹேந்தர் ரெட்டி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
 முதல்வர், உள்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உவைஸியை சந்தித்தனர்.உவைஸி அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.உவைஸியின் உடலிலிருந்து தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.
 நகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வியடைந்ததாக குற்றஞ்சாட்டி மாநகர போலீஸ் கமிஷனர் எ.கெ.கானை எம்.ஐ.எம் உறுப்பினர்கள் கெரோ செய்தனர்.அக்பருத்தீன் உவைஸி எம்.ஐ.எம். தலைவர் சுல்தான் ஸாலாஹுத்தீன் உவைஸியின் மகனாவார்.தற்போது எம்.ஐ.எம் கட்சியின் சட்டமன்றத்தலைவராகவும் உள்ளார்

தமிழக செக்ஸ் போலீஸ் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்! கதறும் பெண் காவலர்கள்


ஒரு காலத்தில் லண்டனின் ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸுக்கு நிகராக பேசப்பட்ட தமிழ்நாடு பொலிஸ் தற்போது செக்ஸ் பொலிஸாக மாறிக் கொண்டிருக்கிறது...

போலீஸ்  நிலையங்களில் மேலதிகாரிகளாலும் சக ஆண் பொலிஸ்காரர்களினாலும் இழைக்கப்படும் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் துணிச்சலுடன் நீதிமன்றம் வரை வந்துவிட்டார் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் நகரப் பகுதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் பொலிஸான வள்ளி...

தமிழக காவல் துறையில் பெண்கள் எவ்வளவு கீழ்மைப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை பெண் காவலர் வள்ளி சொல்லும் அதிர்ச்சியான விடயங்கள் அப்படியே உங்களுக்காக,


முன்னாடி எல்லாம் பொலிஸ் ஆடையை அணிந்ததும் எவ்வளவு பெருமையாக இருந்தது.. ஆனால் இப்போ ஏன்டா இந்த வேலைக்கு வந்தேன் என்று தினமும் மனதுக்குள் அழுகிறேன்...

அதிகாரிகளின் காம லீலைகளுக்கு நான் உடன்படாததால் வேலை நேரத்தைக் கூட்டியே முறித்து எடுத்து விடுவார்கள்.. போன முறை எனக்கு பீரியட்ஸ் ரைம்.. இருந்தும் ஆறு மணி நேரம் தொடர்ந்து என்னை நிற்க வைத்தார்கள்.. எவ்வளவு நரக வேதனை தெரியுமா..

அது போதாதென்று மறுநாள் காலை 2 நிமிடங்கள் லேட்டாக வந்ததற்கு மைதானத்தில் பத்து ரவுண்டு ஓட விட்டு தண்டனை கொடுத்தாங்க.. என்னோடு வேலை செய்யும் அக்கா ஒருவரின் கணவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்த அக்கா மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை ஒட்டிக் கொண்டு இருந்த நேரம் ஒரு நாள் அவங்களுக்கு காய்ச்சல் அதால லீவு கேட்டாங்க..

அப்பொழுது உடம்பு சூடா இருக்குதான்னு நான் செக் பன்னுகிறேன் என்று சொன்ன இன்ஸ்பெக்டர்.. அவங்க மேல கண்ட இடத்தில கையை வைத்து துணை இல்லாமல் இருந்தா உடம்பு சூடாத் தான் இருக்கும்.. நீ மட்டும் சரின்னு சொல்லு சூட்டைத் தணிச்சிரலாம் என்று ரொம்ப கொச்சையாகப் பேசினார். அந்த அக்கா லீவே வேண்டாம் என்று தப்பி ஓடி வந்து விட்டாங்க..

ஒரு ஊருக்கு புதுசாக இன்ஸ்பெக்டர் வருகிறார் என்றால் அவரோடு இரவு 2 பெண் பொலிஸ் ஆவது தங்க வேண்டும். ஒருவர் உடல் தேவைக்கு மற்றையவர் உணவுத் தேவைக்கு அதாவது சமைத்துப் பரிமாற... வரும் இன்ஸ்பெக்டர் 50 வயதுகளைக் கடந்தாலும் அவர்கள் அழைப்பது 25, 30 வயதுக்கு உட்பட்ட வாளிப்பான பெண் காவலர்களைத் தான்... இந்த உபசரிப்புக்கள் தமிழ்நாட்டின் பல பொலிஸ் நிலையங்களிலும் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படித்தான் ஒருநாள் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஒழுங்கு படுத்தும் பணிக்காக 4 பெண் பொலிஸ் காவலர்களை அழைத்துக் கொண்டு போனார் ஒரு இன்ஸ்பெக்டர். அங்கே திடீரென 2 பெண் பொலிஸ் காவலர்களையும் இன்ஸ்பெக்டரையும் காணவில்லை.. திருவிழா முடிந்ததும் மற்ற காவலர்களுடன் அவரது வீட்டுக்குப் போய் பார்த்த போது ஒரு பெண் காவலர் சமையல் செய்து கொண்டிருந்தார்.

லேசாகத் திறந்திருந்த இன்னொரு அறையில் இன்னொரு பெண் காவலர்களிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டிருந்தார் காம வெறி பிடித்த அந்த இன்ஸ்பெக்டர். இப்படியாக தமிழ்நாடு பொலிஸின் காம லீலைகள் உச்சத்தைத் தொடுகின்றன.. தமிழக பெண் காவலர்கள் மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தம் காவல் நிலையத்துக்கு வரும் பெண்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்...

இது மட்டுமல்ல லஞ்சம் ஊழலும் இங்கு தலை விரித்தாடுகிறது.. பொலிஸ் பதிவுக்கு செல்லும் இலங்கைத் தமிழர்களின் பணத்தைக் கறந்து அவர்களை ஓட்டாண்டியாக தெருவில் அலைய விடுகிறது இந்தக் கேவலம் கெட்ட காவல் துறை.. பெண்களை இப்படி கேவலமாக போகப்பொருளாக நினைத்து வல்லுறவு புரியும் காமப் பிசாசுகளை சம்பவம் நடந்த இடத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட வேண்டும்..

அவ்வளவு இறுக்கமாக சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.. இப்போது இவ்வளவு தகவல்களையும் வெளியில் கொண்டு வந்த வள்ளியின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது .. இன்னமும் கூட அவரால் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்படவில்லை.. தண்டிக்கப்படவில்லை..

குறைந்தது பொலிஸ் சேவையிலிருந்தாவது இடை நிறுத்தப்படவில்லை.. இப்படி இருக்கிறது தமிழகத்தின் நீதி நிர்வாகம்.. தமிழகத்தின் முதல்வர் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதியே உத்தியோகபூர்வமாக 3 பெண்களை வைத்திருக்கும் போது. பொலிஸின் காம வெறியாட்டத்தை எப்படிச் சமாளிப்பது...

தமிழீழத்திலும் ஒரு காவல் துறை இருந்தது.. உறுதியாகச் சொல்வேன் உலகிலேயே அவர்களுக்கு நிகர் எவருமில்லை.. அவர்களைக் கண்டால் காலில் விழுந்து கும்பிடலாம்..


அப்படி இருக்கும் அவர்களின் மனிதநேயப் பண்புகளும் செயற்பாடுகளும்.. அவர்களிடம் லஞ்சமோ ஊழலோ இப்படியான காம வெறியாட்டமோ கிடையாது..

ஒரு பெண் நள்ளிரவிலும் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் வீதிகளில் வலம் வர முடிந்தது.. தமிழீழ காவல் துறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மிகவும் கௌரவமாக மதிக்கப்பட்டார்கள்..

அப்படியான தமிழீழ காவல் துறையைப் பார்த்தாவது திருந்த வேணும் இந்த தரம் கெட்ட தமிழக காவல் துறை... தமிழக காவல் துறையின் தரம் கெட்ட காமப் பிசாசு அதிகாரிகள் களை எடுக்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றால் ஒழிய ஒரு நாளும் முடிவுக்கு வரப் போவதில்லை இவர்களின் காம வெறியாட்டம்..

வகுப்பில் துப்பாக்கி விற்பனை:3 -ம் வகுப்பு சிறுவன் மீது வழக்கு!


அமெரிக்காவில், நியூயார்க் நகர பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தன் சக மாணவனுக்கு, துப்பாக்கியை விற்பனை செய்துள்ள அதிர்ச்சியான தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் குயின்ஸ் நகரை சேர்ந்தவர் இக்னாஸி யோ கால்வன். இவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக 9 எம்.எம். பிஸ்டல் வகையை சேர்ந்த துப்பாக்கியை வைத்திருந்தார். இவரது மகன் (வயது 8), அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ‘மூன்றாம் வகுப்பு’ படித்துவருகிறான்.
சம்பவத்தன்று மாணவன் தந்தையின் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்து சென்று, சக மாணவனிடம் 3.50 டாலர் அளவிற்கு விற்பனை செய்துள்ளான். துப்பாக்கியை வாங்கிய மாவணவனின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் நகர போலீஸ் கமிஷனர் துப்பாக்கியை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினார். குயின்ஸ் நகர குடும்ப நீதிமன்றத்தில் மாணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் துப்பாக்கியை விற்பனை செய்த மாணவன் மற்றும் வாங்கிய மாணவன் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்கம் செய்துள்ளது

நேட்டோ படைகள் தாக்குதலில் கடாபி தப்பினார்-மகன் பலி


திரிபோலி: நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் லிபிய அதிபர் மும்மர் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதேசமயம், அவரது இளைய மகனும், 3 பேரப் பிள்ளைகளும் பலியாகி விட்டனர்.

லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ராகிம் இதுகுறித்துக் கூறுகையில், லிபியாவில் உள்ள மக்களுக்கு ஆதிக்கப்படையினரால் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என்பதை இந்த சம்பவம் நிரூபிப்பதாக உள்ளது. அப்பாவி மக்களை நேட்டோ படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

திரிபோலியில் உள்ள ஒரு வீட்டைக் குறி வைத்து நேட்டோ படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வீடு தரைமட்டமானது. அந்த வீட்டில் அதிபர் கடாபியின் 29 வயது மகன் சைப் அல் அராப் தங்கியிருந்தார். இவர் ஜெர்மனியில் படித்தவராவார். தாக்குதலில் அராப் பலியாகி விட்டார். அதேபோல கடாபியின் 3 பேரப் பிள்ளைகளும் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு நாங்கள் பழிவாங்குவோம் என்றார் இப்ராகிம்.

கடாபியின் அதிகம் அறியப்படாத மகன் அராப். இவர், தனது தந்தையின் அதிகார மையத்திற்குள் ஒருபோதும் இருந்ததில்லை. அரசியலிலும் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கியே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடந்த வீட்டுக்கு பத்திரிக்கையாளர்களை லிபிய அரசு அதிகாரிகள் அழைத்துச்சென்று காட்டினர். மூன்று ஏவுகணைகள் வீட்டைத் தாக்கி அழித்திருந்தன. வீட்டின் மேற்கூரை முழுமையாக காலியாகி விட்டது.

இந்த தாக்குதலின்போது அப்பகுதியில் கடாபி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்.