Wednesday, January 4, 2012

ஆட்டின் வயிற்றில் மனிதத் தலையுடன் ஆட்டுக் குட்டி (படம் இணைப்பு)

இந்தியாவின் தாராபுரத்தில் ஆடு வயிற்றில் மனிதத் தலையுடன் குட்டி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாத பாளையத்தை சேர்ந்தவர் காதர்அலி (50). அலங்கியம் சாலையில் பொன்னு நிலையம் அருகே ஆடு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று தன்னிடம் இருந்த சினை ஆட்டை அறுத்தபோது, அதன் வயிற்றில் மனித குழந்தையை போல குட்டி ஆடு இருந்துள்ளது.


சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆடு வாங்கினேன். வாங்கும்போதே ஆடு சினையாக இருந்தது. குட்டி போட்ட பிறகு அறுத்து விடலாம் என்று வீட்டிலேயே கட்டி வைத்து வளர்த்து வந்தேன். கடந்த 2 நாட்களாக ஆடு குட்டி போட முடியாமல் வேதனையோடு தவித்தது. இறந்த ஆடுகளை அறுத்து விற்பனை செய்யமாட்டோம். நேற்று மதியம் அந்த ஆடு இறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. கறிக்காக ஆட்டை அறுத்த போது, அதன் வயிற்றில் மனித குழந்தையை போல உருவம் கொண்ட ஆட்டுக் குட்டி இறந்த நிலையில் இருந்தது. அதைப் பார்த்த எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வாறு காதர்அலி கூறினார்.
thanks to yarmuslim

Tuesday, January 3, 2012

1000 பேருக்கு எய்ட்ஸ் பரப்பிய 51 வயது அமெரிக்க ஆசாமி


அமெரிக்காவை சேர்ந்த 51 வயது ஆசாமி, ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் பரபரப்பியது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் டீன்ஸ்மித். வயது 51. சந்தேகப்படும்படி இவருடைய நடவடிக்கைகள் இருந்ததால், மிச்சிகன் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, இதுவரை ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரப்பி இருக்கிறேன் என்று டேவிட் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மிச்சிகன் போலீசார் கூறியதாவது:
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட டேவிட், பல ஆண்டுகளாக ஆண்கள், பெண்கள் என 3,000க்கும் அதிகமானவர்களுடன் பாதுகாப்பற்ற உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், எப்போது எச்ஐவி பரிசோதனை செய்தார். எப்போது நோயை உறுதி செய்தார் என்ற விவரங்கள் இல்லை. 
எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிந்து, அதை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனே மற்றவர்களுடன் பாதுகாப்பற்ற உறவு வைத்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. எனினும், ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மிச்சிகன் போலீசார் தெரிவித்ததாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
thanks to thedipaar.com

முஸ்லிம் வெறியன் மோடியை புகழ்ந்த கஷ்மீர் எம்.பி. சிக்கலில் மாட்டினார்


ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை உயிரோடு கொலை செய்து, முஸ்லிம் பெண்களின் மானத்தை சீரழித்து, வயிற்றில் இருந்த சிசுவை கூட தீயில் பொசுக்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கோரத் தாண்டவத்திற்கு தலைமையேற்ற நரேந்திர மோடியின் வளர்ச்சி என்ற மாயையில் மயங்கி அவரது அணுகுமுறையை புகழ்ந்து கஷ்மீரின் பி.டி.பி கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி ஆற்றிய உரையின் பகுதி உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் மெஹ்பூபா மோடியை புகழ்ந்து பேசியதன் ஆதாரம் இந்த இணையதளத்தில் உள்ளது.

மோடியை புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து மெஹ்பூபா முஃப்தி மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது உரை உள்துறை அமைச்சகத்தின் இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிசினஸ் விஷயம் தொடர்பாக நரேந்திர மோடியுடன் சந்திப்பை நடத்தியது குறித்து முஸ்லிம் இளைஞர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக மெஹ்பூபா தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அந்த இளைஞர், தனது கோரிக்கைக்கு மோடியிடமிருந்து விரைவான பதில் கிடைத்ததாக தெரிவித்தார் என மெஹ்பூபா கூறியிருந்தார். இத்தகைய நடவடிக்கைகள் சிறுபான்மை மக்களிடம் கூடுதல் நெருங்குவதற்கு உதவும் என மெஹ்பூபா கூறியதுதான் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையே, பா.ஜ.கவை எதிர்க்கும் மெஹ்பூபா கூட மோடிக்கு புகழாரம் சூட்டியதை சுட்டிக்காட்டி சுஷ்மா சுவராஜ் களமிறங்கியுள்ளார். மோடியை புகழவில்லை என மறுப்பு தெரிவித்த மெஹ்பூபாவிற்கு, உள்துறை அமைச்சகத்தின் இணையத்தில் அவரது உரை வெளியிடப்பட்டதை தொடர்ந்து உண்மை வெளியாகி உள்ளது. மெஹ்பூபாவிற்கு கஷ்மீர் அரசியலில் இச்சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
thanks to yarlmuslim

சீனாவில் அல்லாவின் இல்லத்தை இடிக்க முயற்சி - முஸ்லிம்கள் எதிர்த்து போராட்டம்


சீனாவின் வட மேற்குப் பகுதியில் மசூதி ஒன்றை இடிப்பதற்காக அனுப்பப்பட்டிருந்த கலவரக் கட்டுப்பாட்டுப் பொலிசாருடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம் கிராமவாசிகள் மோதியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

நிங்ஜியா என்ற என்ற பிரந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பிரச்சினை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் அந்நாட்டு மக்களின் மதரீதியான செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவது வழக்கம்.

அங்கு மசூதியோ தேவாலயமோ கட்டப்பட வேண்டுமென்றால், அந்தக் கட்டிடத்துக்கு அதிகாரிகள் தெளிவான முன் அனுமதி வழங்கிருக்க வேண்டும்.  ஹெக்ஸி என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு மசூதி சட்டவிரோதக் கட்டிடம் என்றும், ஆதலால் அதிகாரிகள் அதனை இடித்ததாகவும் நிங்ஜியா பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

முரண்பட்ட தகவல்கள் 
சீனாவின் ஹுய் முஸ்லிம் சிறுபான்மையின்மைக் குழுவைச் சேர்ந்த கிராமவாசிகள் நூற்றுக்கணக்காருடன் கலவரக் கட்டுப்பாட்டுப் பொலிசார் சுமார் ஆயிரம் பேர் மோதியிருந்ததாக ஹொங்காங்கிலிருந்து இயங்கும் மனித உரிமை கண்காணிப்புக் குழு கூறுகிறது.

இந்த மோதலில் ஐம்பது பேர் வரை காயமடைந்ததாகவும், இதனையொட்டி நூற்றுக்கும் அதிகமானோர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் கிராமவாசிகளை மேற்கோள்காட்டி அக்குழு தெரிவிக்கிறது.பலர் கைதுசெய்யப்பட்டிருப்பதை சீன அதிகாரிகள் உறுதிசெய்தாலும், சிறிய எண்ணிக்கையிலானோருக்குத்தான் காயம்பட்டிருப்பதாக அவர்கள் சொல்கின்றனர்.

இந்த மோதலில் பொலிசார் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.ஆனால் இந்த மோதலில் எவரும் உயிரிழக்கவில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
thanks t0 yarlmuslim

Sunday, January 1, 2012

அமெரிக்காவை மிரட்ட ஈரான் ஏவுகணை சோதனை. பதிலடி கொடுக்க அமெரிக்கா திட்டம்.


ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெர்சியன் வளைகுடாவில் உள்ள ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாக அமெரிக்கா எண்ணை கப்பல்களை செல்லவிடமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

தற்போது அமெரிக்காவை மிரட்டுவதற்காக ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுக பகுதியில் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தியது. குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், நிலத்தில் இருந்து கடலுக்குள் பாய்து சென்று தாக்கும் ஏவுகணைகள், விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் என அனைத்து ரக ஏவுகணைகளையும் சோதனை செய்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ஈரான் கப்பற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் முகமது மவுசவி தெரிவித்துள்ளார். ஆனால் இதை அமெரிக்கா பொறுமையுடன் நிதானமாக கவனித்து வருகிறது.

அதே நேரத்தில் ஈரானின் இந்த மிரட்டலை சகித்து கொள்ள முடியாது என தெரிவித் துள்ளது. இதற்கிடையே இந்த பதட்டமான சூழ்நிலையில் ஈரானின் எதிர் நாடான சவுதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து 84 புதிய போர் விமானங்களை வாங்குகிறது. அதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

as
thanks to thedipaar.com

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தாக்குதலில் இவ்வருடம் 180 பலஸ்தீனர் படுகொலை


கடந்த புதன்கிழமை (28.12.2011) பலஸ்தீன் விடுதலை அமைப்பான பீ.எல்.ஓ. வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் 21 சிறுவர்கள் உட்பட 180 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு, சுமார் 3300 பேர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வருடத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் நிலத்தில், குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 26837 சட்டவிரோத குடியேற்ற வதிவிடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன என்றும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2011 ஆண்டில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை 15525 தூனம் (1 தூனம் = 1000 சதுர கி.மீ.) பலஸ்தீன் நிலப்பரப்பை அபகரித்துள்ளதோடு, அதிலிருந்த 18764 மரங்களை அழித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் நிலத்தில் சட்டவிரோதக் குடியேற்றங்களை அதிகளவில் நிறுவிவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் கட்டளையின் பேரில் 495 பலஸ்தீன் வீடுகள் இவ்வாண்டில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதற்கிடையில், இவ்வாண்டு முழுவதும் இஸ்ரேலின் சட்டவிரோத யூதக் குடியேற்றவாசிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கணக்கிலடங்காதென்றும், புனித கிறிஸ்து பிறந்த நத்தார் பண்டிகை சமயத்தில்கூட இக்குடியேற்றவாசிகள் தம்முடைய அடாவடித்தனங்களை நிறுத்தவில்லை என்றும், ஜோர்தான் ஆற்றுக்கருகே அமைந்திருந்த ஆர்தடொக்ஸ் சர்ச் மற்றும் தேவாலயங்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதல்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பண்பாடற்ற செயற்பாடுகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
thanks to yarlmuslim

எமிரேட்ஸ் நாட்டுக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள்


அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் சிக்கியுள்ள அரபு வளைகுடா பகுதியில் ஈரான் மட்டுமே அமெரிக்காவுக்கு சவால்விட்டு எரிச்சல் ஏற்படுத்தி வருகிறது. ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் வகைவகையான பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்த போதிலும் ஈரான் அசரவில்லை என்பதால் இறுதி முயற்சியாக ஈரானிலிருந்து எண்ணை ஏற்றுமதியைட் தடுக்க அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது.

இந்நிலையில் தங்கள் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் பெட்ரோல் ஏற்றுமதியை தடைசெய்தால் வளைகுடாவில் இருந்து எந்தநாடும் தங்கள் நாட்டுவழியாக பெட்ரோல் எடுத்துச் செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து ஈரான் அதற்கான முன்னேற்பாடு முயற்சியாக இன்று பல்வேறு வகையான ஏவுகணைகளைச் சோதித்துப் பார்த்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் எழுந்துள்ள பதட்டமான சூழலை சாதகமாக வைத்து அரபு நாடுகளில் ஆயுத விற்பனையை அமெரிக்கா துரிதப்படுத்தியுள்ளது.

அவ்வகையில் ஐக்கிய அரபு அமீராகத்துடன், 34 லட்சம் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை, அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதன்படி, மொத்தம் 34 லட்சம் டாலர் மதிப்பிலான பல்வேறு ராணுவத் தளவாடங்களை, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு விற்கிறது. முன்னாதாக சவுதி அரேபியாவுடன், 3 கோடி டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை சவூதி அரேபியாவுடன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
thanks to yarlmuslim

ஈராக்கில் முஸ்லிம் உறவுகள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்புகோரும் அமெரிக்கன்



இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது. அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தனர். மேலும் அந்த நகரில் வாழும் மக்களை கேன்சர் நோய்க்கு ஆளாக்கியதுடன் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறையுடனேயே பிறக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

‘இது நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் எந்த காரணத்தை சொல்லி நாங்கள் தாக்குதலை மேற்கொண்டோமோ அது வெறும் பொய்யான நம்பிக்கை மட்டுமே. மேலும் அமெரிக்க வீரர்கள் இதுவரை தாம் எதற்க்காக பேர் செய்கிறோம் என்றும் யாரை எதிர்த்து போர் செய்கிறோம் என்றும் இன்னும் புரியாமல்தான் உள்ளனர்’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தானும் அந்த படையில் இருந்ததால் தனுக்கு அது நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தான் சேவை புரிந்த அமெரிக்கர்களுக்கு ஃபலுஜாவின் மக்கள் மனிததன்மை அற்றவர்களாகவும் அமெரிக்க படைகளை எதிர்த்து போராடுபவர்கள், தீவிரவாதிகள் என்றே நம்பி வருகின்றனர். ஆனால் தாம் மற்றவர்கள் போல் அல்லாமல் தாங்கள்தான் போர் தொடுப்பவர்கள் என்றும் தங்களின் நாடு ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து ஃபலுஜா மக்கள் சண்டையிடுகின்றனர் என்றும் தாம் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு ஃபலுஜா வாசியாக இருந்திருந்தால் தன்னுடைய நகரத்தையும் குடும்பத்தையும் காப்பதற்காக வெளிநாட்டு படையினரில் ஒருவரையாவது கொன்று இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான ட்ராவிஸ் மற்றும் பிராட்லி ஆகியோரையும் தாம் ஃபலுஜாவில் இழந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர் அவர்களின் மரணம் வீரமானது இல்லை என்றும் அது துன்பம் நிறைந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் பிறரை கொன்றதும் கொல்லப்பட்டதும் அரசியல் காரணங்களை முன்னிறுத்தியாகும் மேலும் இருவரும் அதற்கு பலியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்கள் மரணம் குறித்து வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில் ஃபலுஜாவில் போராடி உயிர் துறந்த ஈராக் வாசிகளுக்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க படைகளை சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று கூறுவதில் தாம் முரண்பாடு கொள்வதாகவும் மேலும் தங்களை ஹீரோக்கள் என்று கூறுவதிலும் தாம் முரண்பாடு கொள்வதாகவும் தாங்கள் ஃபலுஜாவில் செய்தது ஹீரோ என்ற சொல்லிற்கே பொருந்தாத செயல் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

மேலும் ஃபலுஜாவில் தாங்கள் தாக்குதல் நடத்தி அங்கு வசித்த மக்களின் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்றும் மேலும் போர் தொடுத்தவர்கள் பலியானவர்களின் மீது தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக போராடுவதை குற்றம் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று தான் வியட்நாமிலும், ஆஃப்கானிலும் மற்றும் அமெரிக்காவின் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணம் சொல்லப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே கதைகளைத் தான் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்கும் போது கூறி தங்களுடைய தாக்குதலை நியாப்படுத்துகின்றன என்றும் ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யார்? தங்களுடைய பாதுகாப்பிற்காக போராடுபவர்கள் யார்? என்பதை புரிந்துகொள்வதே இன்றைய நிலையில் மிகவும் முக்கியமானதொரு தேவையாகும் என்றும் மேலும் தாம் ஃபலுஜா நகரை இரண்டாவது முறை முற்றுகையிட்டதில் தானும் பங்கு கொண்டதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருநாள் ஃபலுஜா வாசிகள் மட்டுமல்லாது முழு ஈராக் மக்களும் தங்களின் போராட்டத்தில் வெற்றி பெறு
thanks to yarlmuslim

காணாமல்போன வெள்ளிக்கிழமை - பசுபிக் தீவில் அதிசயம்


வியாழக்கிழமைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தானே வரும், வரவேண்டும். ஆனால் இரண்டு பசிஃபிக் தீவு நாடுகளில் மட்டும் வியாழக்கிழமைக்குப் பின்னர் சனிக்கிழமை வந்திருக்கிறது. ஆச்சரியப்படாமல் தொடர்ந்து படியுங்கள்.

சமோவா, டொகிலாவ் ஆகிய இரண்டு பசிஃபிக் தீவு நாடுகளில் சுமார் 182,000 மக்கள் வசிக்கிறார்கள். இந்த இரு நாடுகளும் கடந்த வியாழக்கிழமையன்று தங்கள் கால மண்டலத்தை (Time Zone) மாற்றி அமைத்துக்கொண்டன. இதனால் ஏற்பட்ட பாரிய விளைவாக, வியாழன் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு சனிக்கிழமை வந்துவிட்டது. இதன்மூலம் இத்தீவு வாசிகள் அருகிலுள்ள நியூசிலாந்து நாட்டின் நேரத்துடன் ஒத்துப்போவதுடன், ஒரே நேரத்தில் இத்தீவு வாசிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்க முடியுமாம். இத்தகவலை சமோவா பிரதமர் டுய்லாயிப்பா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு நூறாண்டாக, இந்த இரு தீவுகளும், அருகிலிருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒருநாள் பிந்தங்கியிருந்தன. இதற்குக்காரணம் 1892லிருந்து  இருதீவுகளும்  இதுவரை, அமெரிக்கத் தேதிக்கோட்டை பின்பற்றிவந்ததுதான். (தேதிக்கோடு பசிஃபிக் பெருங்கடலை இரண்டாகப் பிரிக்கிறது). அருகிலிருக்கும் வளர்ந்த நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுடனான வியாபாரத் தொடர்புகளுக்கு இந்த மாற்றம் பெரிதும் துணைபுரியும் என்று சொல்லப்படுகிறது. சமோவாவின் தலைநகரான ஏபியாவிலேயே தனது பிரதான அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதால் டொகிலாவ் தீவும் சமோவாவைப் பின்பற்றி, கடந்த 'வெள்ளிக்கிழமையை' இழந்துள்ளது.
thanks to yarlmuslim

காஸாவை தாக்க இஸ்ரேல் தயார் - முறியடிக்க முஸ்லிம் போராளிகளுக்கு அழைப்பு


வெகுவிரைவில் காஸா மீண்டும் தாக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைத் தம்முடைய படையணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை உயரதிகாரி பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமது தரைப்படையினருக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதால், மூன்று வருடங்களுக்கு முன்னர் காஸா மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போரை விட இந்தப் போர் மிக வித்தியாசமானதாகவும் உக்கிரமானதாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு இரவு நேரத் தாக்குதல் நடவடிக்கைகளில் இம்முறை அபரிமிதமான தேர்ச்சி அளிக்கப்பட்டிருக்கின்றது எனவும், அதிசக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்திப் பாதைத் தடைகளைத் துரிதமாகத் தகர்த்துக்கொண்டு காஸாவை நோக்கி அவர்கள் மிக வேகமாக முன்னேறிச் செல்வார்கள் எனவும் கான்ட்ஸ் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியான இந்த முன்னறிவிப்புச் செய்தி குறித்துக் கருத்துரைத்த பலஸ்தீன் பாராளுமன்றப் பேச்சாளர் கலாநிதி அஹ்மத் பஹ்ஹார், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா மீது மற்றுமோர் ஆக்கிரமிப்புப் போரை நடத்துமாயின், அது ஒரு 'சுற்றுலா' போல் இன்பகரமானதாக இருக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். 

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் காட்டப்படும் இந்தப் 'பம்மாத்து', வெறுமனே ஓர் உளவியல் ரீதியான போர்த் தந்திரமே தவிர வேறில்லை. அவர்கள் இவ்வாறான 'அச்சுறுத்தல்' அறிக்கைகளின் மூலம் பலஸ்தீன் சுதந்திரப் போராளிகளின் மனோதிடத்தை அசைத்துப் பார்க்கலாம் என மனப்பால் குடிக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை வேறு. ஆனால், தற்போதுள்ள உலக அரசியல் நிலைவரம் முற்றிலும் வித்தியாசமானது. இஸ்ரேல் காஸா மீது முன்னர் மேற்கொண்டதைப் போன்ற சட்டவிரோதமான காட்டுமிராண்டி யுத்தம் ஒன்றை மீண்டும் முன்னெடுக்குமாயின், அதை எந்த ஒரு நாடும் அங்கீகரிக்கப் போவதில்லை. அவ்வாறு அங்கீகரிக்கும் பட்சத்தில், அது நிச்சயம் ஜனநாயக விரோதப் போக்குடைய ஓர் அடக்குமுறை அரசாகவே இருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலாநிதி அஹ்மத் பஹ்ஹார் பலஸ்தீன் விடுதலைப் போராளிகளுக்கு விடுத்துள்ள செய்தியில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கீழ்த்தரமானதும் கோழைத்தனமானதுமான சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடும் போதிய முன்னேற்பாடுகளுடனும் இருந்து, எஞ்சியிருக்கும் பலஸ்தீன் பிராந்தியங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து பாதுகாக்கும் வகையில் பரிபூரண அர்ப்பணிப்புடனும் மனோதிடத்துடனும் பணியாற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
thanks to yarlmuslim