வியாழக்கிழமைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தானே வரும், வரவேண்டும். ஆனால் இரண்டு பசிஃபிக் தீவு நாடுகளில் மட்டும் வியாழக்கிழமைக்குப் பின்னர் சனிக்கிழமை வந்திருக்கிறது. ஆச்சரியப்படாமல் தொடர்ந்து படியுங்கள்.
சமோவா, டொகிலாவ் ஆகிய இரண்டு பசிஃபிக் தீவு நாடுகளில் சுமார் 182,000 மக்கள் வசிக்கிறார்கள். இந்த இரு நாடுகளும் கடந்த வியாழக்கிழமையன்று தங்கள் கால மண்டலத்தை (Time Zone) மாற்றி அமைத்துக்கொண்டன. இதனால் ஏற்பட்ட பாரிய விளைவாக, வியாழன் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு சனிக்கிழமை வந்துவிட்டது. இதன்மூலம் இத்தீவு வாசிகள் அருகிலுள்ள நியூசிலாந்து நாட்டின் நேரத்துடன் ஒத்துப்போவதுடன், ஒரே நேரத்தில் இத்தீவு வாசிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்க முடியுமாம். இத்தகவலை சமோவா பிரதமர் டுய்லாயிப்பா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு நூறாண்டாக, இந்த இரு தீவுகளும், அருகிலிருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒருநாள் பிந்தங்கியிருந்தன. இதற்குக்காரணம் 1892லிருந்து இருதீவுகளும் இதுவரை, அமெரிக்கத் தேதிக்கோட்டை பின்பற்றிவந்ததுதான். (தேதிக்கோடு பசிஃபிக் பெருங்கடலை இரண்டாகப் பிரிக்கிறது). அருகிலிருக்கும் வளர்ந்த நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுடனான வியாபாரத் தொடர்புகளுக்கு இந்த மாற்றம் பெரிதும் துணைபுரியும் என்று சொல்லப்படுகிறது. சமோவாவின் தலைநகரான ஏபியாவிலேயே தனது பிரதான அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதால் டொகிலாவ் தீவும் சமோவாவைப் பின்பற்றி, கடந்த 'வெள்ளிக்கிழமையை' இழந்துள்ளது.
thanks to yarlmuslim
0 comments:
Post a Comment