அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் சிக்கியுள்ள அரபு வளைகுடா பகுதியில் ஈரான் மட்டுமே அமெரிக்காவுக்கு சவால்விட்டு எரிச்சல் ஏற்படுத்தி வருகிறது. ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் வகைவகையான பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்த போதிலும் ஈரான் அசரவில்லை என்பதால் இறுதி முயற்சியாக ஈரானிலிருந்து எண்ணை ஏற்றுமதியைட் தடுக்க அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது.
இந்நிலையில் தங்கள் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் பெட்ரோல் ஏற்றுமதியை தடைசெய்தால் வளைகுடாவில் இருந்து எந்தநாடும் தங்கள் நாட்டுவழியாக பெட்ரோல் எடுத்துச் செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து ஈரான் அதற்கான முன்னேற்பாடு முயற்சியாக இன்று பல்வேறு வகையான ஏவுகணைகளைச் சோதித்துப் பார்த்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் எழுந்துள்ள பதட்டமான சூழலை சாதகமாக வைத்து அரபு நாடுகளில் ஆயுத விற்பனையை அமெரிக்கா துரிதப்படுத்தியுள்ளது.
அவ்வகையில் ஐக்கிய அரபு அமீராகத்துடன், 34 லட்சம் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை, அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதன்படி, மொத்தம் 34 லட்சம் டாலர் மதிப்பிலான பல்வேறு ராணுவத் தளவாடங்களை, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு விற்கிறது. முன்னாதாக சவுதி அரேபியாவுடன், 3 கோடி டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை சவூதி அரேபியாவுடன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

thanks to yarlmuslim
0 comments:
Post a Comment