ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெர்சியன் வளைகுடாவில் உள்ள ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாக அமெரிக்கா எண்ணை கப்பல்களை செல்லவிடமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
தற்போது அமெரிக்காவை மிரட்டுவதற்காக ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுக பகுதியில் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தியது. குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், நிலத்தில் இருந்து கடலுக்குள் பாய்து சென்று தாக்கும் ஏவுகணைகள், விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் என அனைத்து ரக ஏவுகணைகளையும் சோதனை செய்தது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ஈரான் கப்பற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் முகமது மவுசவி தெரிவித்துள்ளார். ஆனால் இதை அமெரிக்கா பொறுமையுடன் நிதானமாக கவனித்து வருகிறது.
அதே நேரத்தில் ஈரானின் இந்த மிரட்டலை சகித்து கொள்ள முடியாது என தெரிவித் துள்ளது. இதற்கிடையே இந்த பதட்டமான சூழ்நிலையில் ஈரானின் எதிர் நாடான சவுதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து 84 புதிய போர் விமானங்களை வாங்குகிறது. அதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

as
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment