Monday, January 9, 2012

சோமாலியாவில் விமானத் தாக்குதல் - 60 அல் ஸபாப் போராளிகள் வீரமரணமாம்



தெற்கு சோமாலியாவில் கென்யா விமானப்படை நடத்திய தாக்குதலில் 60 அல் ஸபாப் போராளிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒன்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

ராணுவத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே கென்யாவுக்கு போராளிகளின் மிரட்டல் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் ரகசிய ஏஜன்சிகள் கூறியுள்ளன. கென்யாவில் ஆடம்பர ரிஸாட்டில் வைத்து பிரிட்டன் சுற்றுலா பயணி கொல்லப்பட்டார். இதற்கு காரணம் அல் ஸபாப் போராளிகள் என கென்யா அரசு குற்றம் சாட்டியது. இச்சம்பவத்திற்கு பிறகு அல் ஸபாபிற்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
thanks to yarlmuslim

ஜனவரி 4-ஆம்தேதி கென்யா ராணுவத்திற்கும், அல் ஸபாப் போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 12 போராளிகள் கொல்லப்பட்டனர். ஒருநாளுக்குப் பிறகு நடந்த தாக்குதலில் 13க்கும் மேற்பட்ட அல் ஸபாப் போராளிகள் கொல்லப்பட்னர். கென்யா தாக்குதலை தொடர்ந்து மோதல் பகுதியில் இருந்து அல் ஸபாப் போராளிகள் திரும்பிவிட்டதாக சோமாலிய ஊடகங்கள் கூறுகின்றன.

Sunday, January 8, 2012

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை.


சீன கம்யூ., கட்சியின் "சைனா டெய்லி' நாளிதழில் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் அளவைக் குறைப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, மறுபக்கம், ஆசிய பசிபிக் மண்டலத்தில் ஒபாமா ராணுவத்தைக் குவிக்கிறார்.
அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இருதரப்பிற்கிடையில் ராணுவப் பதட்டத்தையே உருவாக்கும்.

உலகின் பிற பகுதிகளை விட ஆசிய பசிபிக் மண்டலத்தில் அதிகளவிலான அமைதி நிலவுகிறது. அங்கு ஏன் அமெரிக்கா தனது படைகளைக் குவிக்க வேண்டும்?.இவ்வாறு அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


as
thanks to thedipaar.com

கருணாநிதி,ஸ்டாலின் மீது ரூ.150 கோடி நில அபகரிப்பு புகார் கொடுத்த 70 வயது நபர்.


சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த எஸ்.என்.ஆறுமுகம் என்பவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது நில அபகரிப்புப் புகார் ஒன்றைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். எழுபது வயதான அவருக்கு, சொந்த ஊர் மயிலாடுதுறை.
அங்கு லாரி, பஸ் டிரான்ஸ்ஃபோர்ட் மற்றும் அசிரி ஆலை நடத்தி வருகிறார். நிறுவனங்கள், காபி எஸ்டேட் என கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் அளவுக்கு  சொத்துக்கள் உள்ளதாம். அந்த சொத்துக்களை வளைக்க முயன்ற சிலர் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தினார்களாம்.
இதுகுறித்து கோர்ட்டுக்குப் போய் பாதுகாப்பு கேட்டாராம். 2009ல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க கோர்ட் உத்தரவிட்டும், எந்தப் பலனும் இல்லையாம். இவ்விவகாரம் குறித்துதான் தற்போது கமிஷனரிடம் மனு கொடுத்திருக்கிறார். அதுவும் 81 பேர் மீது! கருணாநிதி, ஸ்டாலின், கே.சி.பழனிச்சாமி, சேகர்பாபு உள்பட பலர் மீது புகார் கூறியுள்ளார். மிரட்டல் புகாரே மிரட்டலாக இருக்கிறது

as
thanks to thedipaar.com

இஸ்ரேலுடன் நட்பு கொள்ளுங்கள் - பர்வேஸ் முஷரப் கூறுகிறார்


எப்போதும் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாடு எடுக்கும் இஸ்ரேல் அந்நிலைப்பாடை மாற்றி கொள்ள பாகிஸ்தான் அந்நாட்டுடன் நட்பு வைத்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார்.

இஸ்ரேலுடன் நெருக்காமாவதன் மூலம் அமெரிக்க அரசில் செல்வாக்கான யூத லாபியுடன் பாகிஸ்தான் நட்பாக முடியும் என்றும் இஸ்ரேலை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைக்க முடியும் என்றும் முஷரப் கூறினார்.
பாகிஸ்தான் மக்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவானவர்கள் என்பது பாகிஸ்தான் தன் கொள்கைகளை தளர்த்தி இஸ்ரேலுடன் உறவு வைத்து கொள்வதை தடுக்க கூடாது என்று கூறிய முஷரப் நிறைய முஸ்லீம் நாடுகளே மறைமுகமாக இஸ்ரேலுடன் தொடர்பை வைத்துள்ளன என்றார்.

தான் ஆட்சியில் இருந்த போது இஸ்ரேலுடன் தொடர்பு வைக்க முயற்சித்ததாகவும் முஷரப் கூறினார். முஷரப் ஆட்சியின் போது ஐநா சபையில் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனுடன் கைகுலுக்கியதும், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் சில்வன் சலோமுடன் பேச் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூதை அனுப்பியதும் குறிப்பிடத்தகுந்தது.
thanks to inneram.com

மனித மூளையின் ஆற்றல் எப்போது குறையும்..?


மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் ஒருவருக்கு ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பே குறைய துவங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டன் யூனிவர்ஸிடி காலேஜின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் மனித மூளையின் முக்கிய ஆற்றல் 45 வயது முதல் குறையத் துவங்குவதாக தெரியவந்தது. பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ மாத இதழ் இந்த ஆய்வு முடிவுகளை பிரசுரித்துள்ளது.

45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு நடத்தப்பட்ட பத்து வருடங்களில் இவர்களில் எல்லா வயதுக்காரர்களுக்குமே நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன், விளங்கிக்கொள்ளும் ஆற்றல் போன்றவை குறைந்து போயிருந்தன.

அதிக வயது உடையவர்களிடையே இவ்வகையான திறன்கள் குறையும் வேகம் அதிகமாக இருந்தது.

ஆனால் இந்த ஆய்வில் தெரியவந்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 45 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் கூட மூளையின் திறன்கள் குறைந்துபோவது கண்டுபிடிக்கப்பட்டது தான்.

மூன்று சதவீதத்துக்கும் அதிகமான ஒரு திறன் இழப்பு இந்த வயதுக்காரர்களிடம் கூட காணப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

மூளையின் திறன்கள் குறைந்து போவது என்பது அறுபது வயதில்தான் ஆரம்பிகிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்டிருந்த சின்ன அளவிலான ஆய்வுகள் காட்டியிருந்தன.

ஆனால் அந்த முடிவுகளை பிழையாகக் காட்டுவதாக தற்போதைய ஆய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.

முந்தைய ஆய்வுகளும் தற்போதைய ஆய்வும் உடன்படுகிற ஒரு விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் கொண்ட வாழ்க்கை முறைக்கும் டிமென்ஷியா எனப்படும் மூளை அழுகலுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.
thanks to yarlmuslim

Thursday, January 5, 2012

பலஸ்தீன், இஸ்ரேல் பேச்சு - இணக்கமின்றி முடிந்தது.


இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் ஜோர்தானில் நடைபெற்ற சந்திப்பு எந்தவித  முன்னேற்றமும் இன்றி முடிவடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தின் பின்னர் பலஸ்தீன் இஸ்ரேல் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பாக இது கருதப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாடு ஒன்றின் மத்தியஸ்தத்துடன் நடத்துவது குறித்து நேற்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. ஜோர்தானில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு திருப்தி அளித்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் இடம்பெறும் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்களை அடுத்து பலஸ்தீனுடனான பேச்சுவார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.
thanks to yarlmuslim

அட பாவி..!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த 1ம் தேதி ஐந்து இடங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், ஒவ்வொரு இடத்தின் மீதும் குண்டு வீசியதற்கு ஒவ்வொரு காரணங்களை அவர் கூறியுள்ளார்.

நியூயார்க்கில் கடந்த 1ம் தேதி ஒரு கடை, இரு வீடுகள், இந்து, இஸ்லாமிய வழிபாட்டிடங்கள் என ஐந்து இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது, அந்நகரில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இச்சம்பவத்தோடு தொடர்புடையவராக, ரே லென்ஜெண்ட், 40, கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். தற்போது எவ்வித வேலையும் இல்லாமல் இருக்கிறார். போலீசார் இவரிடம் நடத்திய விசாரணையில், ஐந்து விதமான காரணங்களைக் கூறியுள்ளார். 

முதலில் தாக்கிய கடையில் இவர், ஒரு நாள் சில பொருட்களைத் திருடியுள்ளார். இதைப் பார்த்த ஊழியர்கள் இவரை அடித்து வெளியே துரத்தியுள்ளனர். இதனால், அந்தக் கடை மீது குண்டு வீசியுள்ளார். மற்றொரு வீட்டில் இவர் ஒருநாள் போதை மருந்து வாங்கியதாக தவறாக அடையாளம் கருதி, குண்டு வீசியுள்ளார். இஸ்லாமிய வழிபாட்டிடத்திற்கு இவர் சென்று, அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்த முயன்ற போது அங்கிருந்தவர்கள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அதனால், அங்கும் ஒரு குண்டைப் போட்டுள்ளார். எல்மான்ட் பகுதியில் இவரது உறவினர் வீடு உள்ளது. அவர்களுடனான பிரச்னையால், அங்கு மற்றொரு பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்து வழிபாட்டிடத்தில், இவரோடு ஒரு முறை தகராறில் ஈடுபட்டவர் வசித்து வருவதால், அதற்கும் ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
inneram.com

சவூதி அரேபியாவின் உத்தரவு


பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனிமேல் ஆண் பணியாளர்களை அமர்த்தக்கூடாது என்றும் பெண்கள் மட்டுமே அங்கு பணிபுரிய அமர்த்தப்படவேண்டும் என சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என தனிப்பட்ட பல சட்டங்கள் உண்டு. எம்மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அங்கு பர்தா அணிந்தே வெளியே நடமாடவேண்டும். பெண்கள் தனியாக கார் ஓட்ட அனுமதியில்லை. இதுபோன்ற பெண்களுக்கான தனிப்பட்ட சட்டங்கள் உண்டு.

இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் பெண் பணியாளர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சவூதி அரேபிய அரசின் இந்த உத்தரவுக்குப் பின்னர் சுமார் 30,000 பெண்களிடமிருந்து பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை நிலையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சவூதி அரேபிய அரசின் இப்புதிய உத்தரவு பலதரப்பு மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 4, 2012

இஸ்ரேலின் சுரண்டலை தடுப்போம் - துருக்கி, நன்றி சொல்கிறது ஹமாஸ்


துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் ஆட்சிபுரியும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா 2010இல் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட மாவி மர்மரா கப்பலை பார்வையிட்டார். தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது துருக்கி தன்னார்வ தொண்டர்களுக்காக இஸ்தான்புல்லிற்கு சென்ற ஹானிய்யா பிரார்த்தனை புரிந்தார்.

2007-ஆம் ஆண்டு காஸ்ஸாவில் ஆட்சிப்பொறுப்பை ஹமாஸ் ஏற்றபிறகு முதன் முறையாக ஹானிய்யா வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். மாவி மர்மரா கப்பல் மீது நடந்த தாக்குதலுக்கு பிறகு துருக்கி-இஸ்ரேல் இடையேயான உறவு சீர்குலைந்தது. இச்சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரவேண்டும் என துருக்கி கோரிக்கை விடுத்தது. ஆனால், தற்காப்பிற்காக தாக்குதல் நடத்தியதாக கூறி மன்னிப்புக்கோர இஸ்ரேல் திமிர்த்தனமாக மறுத்துவிட்டது. எதிர்காலத்தில் காஸ்ஸாவிற்கு செல்லும் நிவாரண உதவி கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயார் என எர்துகான் ஹானிய்யாவிற்கு உறுதி அளித்துள்ளார்.

கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் இயற்கை வளங்களை இஸ்ரேல் சுரண்டுவதை தடுப்போம் என துருக்கி அறிவித்துள்ளது. பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு அளித்துள்ள துருக்கிக்கு நன்றி தெரிவிப்பதாக ஹானிய்யா தெரிவித்தார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது துருக்கி தன்னார்வ தொண்டர்கள் சுதந்திரத்திற்காக இரத்த சாட்சியாக மாறியவர்கள் என ஹானிய்யா நினைவுக் கூர்ந்தார்.
thanks to yarlmuslim

தென் சூடான் இனக்கலவரத்திற்கு ஆடு, மாடுகள்தான் காரணம் - BBC

தெற்கு சூடானின் கிழக்குப் பகுதி மாநிலமான ஜாங்லெயில் போட்டி பழங்குடி இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பெருமளவிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களில் லூ நூர் பழங்குடி இன மக்களால் பல்லாயிரக்கணக்கான முர்லி இனப் பழங்குஇடி இனத்தவர்கள் தமது இருப்பிடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். "மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்றவை கிடைக்கவில்லை"

பிஃபோர் நகரிலிருந்து தப்பியோடி கெஞ்சன் நதிப் பகுதிக்கு போன முர்லி இனப் பெண்மணி ஒருவர் தாங்கள் அந்நகரிலிருந்து வெளியேறிய பிறகு, தமது உறவினர்கள் இருபது பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டோ அல்லது தப்பிக்கும் போது அந்த நதியிலோ மூழ்கி இறந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. அப்படி இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் அல்லது சிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

"கால்நடைகள் பெருஞ்செல்வம்"
ஆடுமாடுகளை பிடித்துச் செல்வது தொடர்பிலான சர்ச்சைகள் இந்தப் பழங்குடி இனங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வருகின்றது என்றும் அதன் காரணமாகவே தற்போதைய மோதல்கள் பெரிதாக வெடித்துள்ளன என்று, எல்லைகளில்லா மருத்துவர்கள் அமைப்பின் தெற்கு சூடான் நாட்டுக்கான இயக்குநர் பார்த்தசாரதி ராஜேந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தெற்கு சூடானிலுள்ள பழங்குடி மக்களிடையே ஆடுமாடுகள் பெரும் செல்வமாக கருதப்படுவதால், அவற்றை அபகரிக்கும் போதோ அல்லை கொலை செய்யும் போது அது பெரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தி மோதல்களுக்கு வழி வகுக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஜாங்லெய் மாநிலத்தில் நடைபெற்ற மோதல்கள் காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, புதர்களில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறுகிறார். அப்படியான மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்றவை கூட கிடைக்காத நிலை உள்ளது என்றும் பார்த்தசாரதி தெரிவித்தார்.

ஜாங்லெய் மாநிலத்தின் பிஃபோர் பகுதியில் பல ஆண்டுகளாக எல்லைகளில்லா மருத்துவர்கள் அமைப்பே அங்கு செயல்படும் ஒரே மருத்துவமனையை நடத்தி வந்தது என்றும் , அந்த மருத்துவமனையும் தற்போதைய மோதல்களில் சேதமடைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

thanks to yarlmuslim