துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் ஆட்சிபுரியும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா 2010இல் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட மாவி மர்மரா கப்பலை பார்வையிட்டார். தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது துருக்கி தன்னார்வ தொண்டர்களுக்காக இஸ்தான்புல்லிற்கு சென்ற ஹானிய்யா பிரார்த்தனை புரிந்தார்.
2007-ஆம் ஆண்டு காஸ்ஸாவில் ஆட்சிப்பொறுப்பை ஹமாஸ் ஏற்றபிறகு முதன் முறையாக ஹானிய்யா வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். மாவி மர்மரா கப்பல் மீது நடந்த தாக்குதலுக்கு பிறகு துருக்கி-இஸ்ரேல் இடையேயான உறவு சீர்குலைந்தது. இச்சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரவேண்டும் என துருக்கி கோரிக்கை விடுத்தது. ஆனால், தற்காப்பிற்காக தாக்குதல் நடத்தியதாக கூறி மன்னிப்புக்கோர இஸ்ரேல் திமிர்த்தனமாக மறுத்துவிட்டது. எதிர்காலத்தில் காஸ்ஸாவிற்கு செல்லும் நிவாரண உதவி கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயார் என எர்துகான் ஹானிய்யாவிற்கு உறுதி அளித்துள்ளார்.
கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் இயற்கை வளங்களை இஸ்ரேல் சுரண்டுவதை தடுப்போம் என துருக்கி அறிவித்துள்ளது. பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு அளித்துள்ள துருக்கிக்கு நன்றி தெரிவிப்பதாக ஹானிய்யா தெரிவித்தார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது துருக்கி தன்னார்வ தொண்டர்கள் சுதந்திரத்திற்காக இரத்த சாட்சியாக மாறியவர்கள் என ஹானிய்யா நினைவுக் கூர்ந்தார்.
thanks to yarlmuslim
0 comments:
Post a Comment