அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த 1ம் தேதி ஐந்து இடங்களில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், ஒவ்வொரு இடத்தின் மீதும் குண்டு வீசியதற்கு ஒவ்வொரு காரணங்களை அவர் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் கடந்த 1ம் தேதி ஒரு கடை, இரு வீடுகள், இந்து, இஸ்லாமிய வழிபாட்டிடங்கள் என ஐந்து இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது, அந்நகரில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இச்சம்பவத்தோடு தொடர்புடையவராக, ரே லென்ஜெண்ட், 40, கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். தற்போது எவ்வித வேலையும் இல்லாமல் இருக்கிறார். போலீசார் இவரிடம் நடத்திய விசாரணையில், ஐந்து விதமான காரணங்களைக் கூறியுள்ளார்.
முதலில் தாக்கிய கடையில் இவர், ஒரு நாள் சில பொருட்களைத் திருடியுள்ளார். இதைப் பார்த்த ஊழியர்கள் இவரை அடித்து வெளியே துரத்தியுள்ளனர். இதனால், அந்தக் கடை மீது குண்டு வீசியுள்ளார். மற்றொரு வீட்டில் இவர் ஒருநாள் போதை மருந்து வாங்கியதாக தவறாக அடையாளம் கருதி, குண்டு வீசியுள்ளார். இஸ்லாமிய வழிபாட்டிடத்திற்கு இவர் சென்று, அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்த முயன்ற போது அங்கிருந்தவர்கள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அதனால், அங்கும் ஒரு குண்டைப் போட்டுள்ளார். எல்மான்ட் பகுதியில் இவரது உறவினர் வீடு உள்ளது. அவர்களுடனான பிரச்னையால், அங்கு மற்றொரு பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்து வழிபாட்டிடத்தில், இவரோடு ஒரு முறை தகராறில் ஈடுபட்டவர் வசித்து வருவதால், அதற்கும் ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
inneram.com
0 comments:
Post a Comment