Friday, February 3, 2012

செருப்படி வாங்கியும் திருந்தாத இந்து முன்னனியினர்


சென்னை: 
சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூட பாராமால் தாக்கி பின்னர் பெண்களிடம் செருப்படி வாங்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சில இந்து முன்னனி நிர்வாகிகள்.





தற்போது இது தொடர்பாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கும் இந்து முன்னனி கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கலவரக்காரர்கள் என்றும் தங்களை அப்பாவிகள் என்று கூறியுள்ளது. மத்திய மாநில குழுவிடம் ஆதரவு கடிதத்தை கொடுக்க வந்த‌ இந்து முன்னனியினரிடம் வேண்டுமென்றே அணு உலை எதிர்ப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார்கள் என்றும் கூறுகிறது. காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு இந்து முன்னனியினரை கைது செய்துவிட்டதாகவும், உடனே முதலைமைச்சர் இதில் தலையிட்டு இதனை தீர்த்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

செருப்படி பட்டும் திருந்தாத இந்து முன்னனியினர் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

1. அணு உலையை உருவாக்குவதற்கு இந்து முன்னனியும் ஆதரவு அளிக்கிறது என்ற செய்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்த போதும் பேச்சு வார்த்தை நடக்க இருந்த நாளில் அதுவும் அதே இடத்தில் சென்று ஆதரவு கடிதம் அளிப்பதற்கான காரணம் என்ன?

2. பேச்சுவார்த்தைக்கு வந்த அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு நீங்கள் இந்து முன்னனி இயக்கத்தினர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக ஆதரவு அளிக்க வந்தவர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியாத நிலையில் எப்படி அவர்களாகவே வந்து உங்களிடம் வாக்குவாதம் செய்தார்கள்?

3. அணு உலையால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று நிரூபித்தால் கோடி ரூபாய் பரிசு என்று மக்கள் ஜனனாயகக் கட்சி அறிவித்திருந்ததே! அப்படியானால் அணு உலையை ஆதரிக்கும் இந்து முன்னனியினர் ஏன் அதனை நிரூபிக்க முன் வரவில்லை?

4. அணு உலையை ஏற்படுத்தாவிட்டால் தமிழகமே இருளில் மூழ்கி விடும் அபாயம் இருப்பதாக கூறும் இந்து முன்னனியினரே அணு உலை மூலம் சொற்ப சதவிகிதமே மின்சாரம் தயாரிக்க இயலும் என்றும் முழுக்க முழுக்க மனித இனத்தையே அழிக்கக்கூடிய வெடி பொருட்களைத்தான் தயாரிக்க முடியும் என வல்லுனர்கள் கூறியது தெரியாதோ?

5. காங்கிரஸ் அரசாங்கம் எந்த ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்த நினைத்தாலும் அதற்கு முதல் முட்டுகட்டையாய் இருப்பது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி போன்றவர்கள் தான். அப்படி இருக்க அணு உலை விசயத்தில் மட்டும் காங்கிரஸ் அரசாங்கத்திற்காக பரிந்து பேசுவது ஏன்?

6. அணு உலை எதிர்ப்பாளர்கள் இதுவரை எந்த ஒரு வன்முறை சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை. மாறாக ஜனநாயக முறையிலும் அமைதியான முறையிலும் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர்களை கலவரக்காரர்கள் என்றும் வன்முறையை மட்டுமே நம்பிக்கொண்டு தேசத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் உங்களைப் போன்றவர்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள நினைப்பது ஏன்?

7. இந்துக்களுக்காக போராட, வாதாட, பரிந்து பேசவே இந்து முன்னனி இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக விவரிக்கும் இந்து முன்னனியினரே உங்களது பார்வையில் அணு உலை எதிர்ப்பாளர்கல் இந்துக்கள் இல்லையா?  இதே போராட்டத்தை பிராமணர்கள் செய்திருந்தால் ஆதரித்திருப்பீர்கள்தானே?

Thursday, February 2, 2012

இந்தியா: பெண் குழந்தைகளுக்கு மிக ஆபத்தான இடம் – ஐ.நா !


புதுடெல்லி:பெண் குழந்தைகளுக்கு உலகிலேயே அபாயகரமான இடம் எது? என்று கேள்வி எழுப்பினால் இனி உறுதியாக பதில் கூறமுடியும். ஐ.நா புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஒரு வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட பெண் குழந்தைகள் வேதனைகளையும், துயரத்தையும் அனுபவிப்பதில் நமது இந்திய
தேசம் முன்னணியில் உள்ளது.
ஆண் குழந்தைகளை விட ஒரு வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் 75 சதவீதம் மரணிப்பதாகவும், ஆண்-பெண் மரண சதவீதத்தில் மிக அதிகமான வித்தியாசம் காணப்படும் ஒரே தேசம் இந்தியா என்றும் ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.
பெண் குழந்தைகளுக்கு பாரபட்சம் இழைக்கப்படுவதற்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக இந்த அறிக்கையை ஐ.நா குறிப்பிடுகிறது.
உலகம் முழுவதும் பெண் சிசு கொலைகள் குறைந்தே வருகின்றன. ஆனால், உலகில் பிரசித்திப் பெற்ற நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் இதர நாடுகளை விட பெண் சிசு கொலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதுமானது அல்ல. 2000-ம் ஆண்டு காலக்கட்டங்களில் 56 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா அறிக்கை கூறுகிறது.
thanks to asiananban.blogspot.com

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி !


ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்குப்பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும்" என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கேட்கப்பட்ட போது நேட்டோவின் செய்தி தொடர்பாளர் ஜிம்மி கம்மிங்ஸ் அமெரிக்க ராணுவ தகவலை உறுதி செய்தார். "ஆனால் அது நேட்டோ படைகள் வெளியேற்றத்தின் பிறகு ஆப்கனில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த பல்வேறு வாய்ப்புகள் குறித்த
அறிக்கையே" என்று கூறினார்.

அதை "முழுமையான ஆய்வறிக்கை அல்ல" என்று ஜிம்மி கூறினாலும் இவ்வறிக்கை அமெரிக்காவின் தோல்வியை காட்டுவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். "ஹமீது கர்சாயின் அரசு மற்றும் அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ள கூடாது" என்ற தாலிபானின் வாதத்துக்கு வலு சேர்ப்பதாக இவ்வறிக்கை உள்ளது.

நேட்டோவின் கடைசி படைகள் 2014ம் ஆண்டு வெளியேற முடிவெடுத்துள்ள நிலையில் இவ்வறிக்கை அமெரிக்காவுக்கு மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது. இவ்வறிக்கை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், தாம் ஆப்கனின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று தெரிவித்துள்ளது.

thanks to asiananban.blogspot.com

விஜயகாந்த் பற்றி ரொம்பச் சரியா சொல்லிட்டீங்கம்மா.. பாஜக 'ஜிங் சக்' !


 சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து முதல்வர் ஜெயலலிதா சொல்லியுள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மையாகும். இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி போட காத்திருக்கும் பாஜகவின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,விஜயகாந்த் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.

கூட்டணி இல்லை என்றால் தேமுதிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டப் பேரவைக்குள் போயிருக்க முடியாது. இப்போதுதான் ஒரு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கூட்டணி சம்பந்தமாக கருத்து சொல்கிறேன்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கண்டிப்பாக பாஜக போட்டியிடும் என்றார் அவர்.

thanks to asiananban.blogspot.com

Wednesday, February 1, 2012

எறிபுரகரை ஊராட்சி -2 வது வார்டில் SDPI யின் களப்பணி .



எறிபுரகரை  ஊராட்சி -2 வது வார்டில் SDPI யின்  வேட்ப்பாளர் P.S.நூர்ஜஹான் அவர்கள் தலைமையில் 28 .1 .2012 அன்று M .S .M நகர் மற்றும் பிலால் நகரில் மக்களின் கோரிக்கையை ஏற்று தெருவை தூய்மைபடுத்தும் பனி நடைபெற்றது .மேலும் அப்பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விண்ணப்பத்தினை பூர்த்தி செயித்து கொடுத்து ,பிறகு அடையாள அட்டை பெற்று வீடுவீடாக சென்று கொடுக்கப்பட்டது .







                                                                                           இப்படிக்கு 
                                                       M .S .M . நகர் மற்றும் பிலால் நகர் கிளை SDPI

அமெரிக்கா தடை விதித்தாலும், ஈரானிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வோம். பிரணாப் முகர்ஜி



ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்த வாய்ப்பே இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பா குற்றம் சாட்டி வருகின்றன. ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி தொடர்பாக அந்நாட்டு மத்திய வங்கியுடன் பணப் பரிமாற்றம் செய்ய அமெரிக்காவும், பெட்ரோல் இறக்குமதிக்கு ஐரோப் பாவும் அண்மையில் தடை விதித்தன. அதனால், பெட்ரோல் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் இந்தியாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள நிதியமைச்சர் பிரணாப் கூறியதாவது: 

உலக அளவில் பெட்ரோல் பயன்பாட்டில் 4வது இடத்தில் உள்ள இந்தியா, பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. அதிலும், ஈரானில் இருந்துதான் அதிக அளவில் பெட்ரோல் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை குறைக்க வாய்ப்பே இல்லை. ஐரோப்பாவின் கடன் நெருக்கடி, வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி குறைவால் இந்தியாவின் வளர்ச்சி பாதித்தது. அதனால், 2011,12ல் நாட்டின் வளர்ச்சி 6.5,7 சதவீதமாக இருக்கும். இருப்பினும், அடுத்த அல்லது 2 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.

அவுட்சோர்சிங் நிறுத்த கூடாது: அமெரிக்காவில் இந்தியாவுக்கான அவுட்சோர்சிங் பணிகளை தடை செய்தால், இருநாட்டு பொருளாதாரமும் பாதிக்கும் என்பதால், தடை விதிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். அவுட்சோர்சிங் பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீது மறுஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.  
as
thanks to thedipaar.com

இந்தியா: பிரபாஹர் பட்டின் பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்


பந்தவால்: இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பேசிய பா.ஜ.க தலைவர் கல்லடக்கா பிரபாஹர் பட்டினை வன்மையாக கண்டிப்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே தெரிவித்துள்ளார்.கடந்த 30ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் உப்பினங்காடியில் ஹிந்து சமஜோத்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர் பிரபாஹர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாத்திற்கு எதிராகவும் விஷமத்தனமான கருத்துக்களை பேசியுள்ளார்.


பிரபாஹரின் இந்த பேச்சை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக‌ மாநிலம் சார்பாக பந்தவாலில் கண்டனப்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. "முஸ்லிம் பெண்களைப்பற்றி இழிவாக பேசியதன் மூலம் பிரபாஹர் தன்னுடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். என இல்யாஸ் முஹம்மது தும்பே கூறினார். பிரபாஹர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவரை தாலுகாவில் நுழையவிடமால் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



லவ் ஜிஹாத் என்ற போர்வையில் மக்களிடையே இனவாதத்தை தூண்டி வருகிறார். அத்தோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் ஒரு கோயிலில் இவரது சகாக்களே பன்றியின் மண்டை ஓட்டை வைத்து விட்டு பதட்டத்தை ஏற்படுத்தினார்கள். மதக்கலவரத்தை இது போன்ற செயலகளை இவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து செய்து வருவதாக் இல்யாஸ் முஹம்மது தும்பே குற்றம் சாட்டினார்.


B.C.Road protestஇந்திய நாடு இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, மாறாக 20 கோடி முஸ்லிம்களுக்கும் 6 கோடி கிறிஸ்தவர்களுக்கும், 20% வாழும் தலித் சமுதாயத்தினருக்கும் சொந்தமானது. இவர்கள் அனைவருமே பல நூற்றாண்டுகளாக இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து வருகின்றனர் என மேலும் அவர் கூறினார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில செயற்குழு உறுப்பினர் ரஜாக் கெம்மார் கூறும்போது ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக இந்தியாவில் மதக்கலவரங்கள் நடைபெற்றதாக வரலாறுகளே இல்லை. என்று இந்த சங்கப்பரிவார கூட்டங்கள் உருவானதோ அன்றிலிருந்து தான் இந்தியாவில் மதக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது எனக்கூறினார்.


Elyas Thumbeஎஸ்.டி.பி.ஐயின் பந்தவால் தொகுதி தலைவர் சாகுல் ஹமீது உரையாற்றும்போது "சிந்தகி மாவட்டத்தில் அரசாங்க அலுவலகம் முன்பாக பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றியவர்கள் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் அவர்களை விட்டு விட்டு முஸ்லிம்களை பாகிஸ்தானிற்கு போகச்சொல்வது வேடிக்கையாக இருக்கிறது" என்று கூறினார்.



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புத்தூர் மண்டல உறுப்பினர் ஷாஃபி, மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஜ் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள். கைகம்பா என்னுமிடத்திலிருந்து தாலுக அலுவலகம் வரை கண்டனப்பேரணி நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்காதான்: ஒபாமா


வாஷிங்டன்:அல்காயிதா-தாலிபான் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்காதான் என அந்நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். சோசியல் நெட்வர்க் இணையதளமான கூகிள் ப்ளஸ் மூலமாக நடத்திய ஒரு மணிநேரம் நீண்ட வீடியோ உரையில் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்குலைந்ததன்
பின்னணியில் உள்ள ஆளில்லா விமானத் தாக்குதல்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஒபாமா.
முதன் முறையாக ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதற்கான பொறுப்பை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் அப்பாவிகள் ஆவர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான கேள்விகள் ஒபாமாவின் உரைக்கு முன்பு அவரிடம் அளிக்கப்பட்டது. அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போராளி இயக்கங்களின் ரகசிய தளங்களை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஒபாமா அமெரிக்காவின் அநியாயமான செயலை நியாயப்படுத்தினார்.
அமெரிக்கா ராணுவத்தால் செல்ல முடியாத தூர பகுதிகளில் போர் விமானங்களின் உதவியுடன் ஏராளமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா தயார் செய்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்துகிறது. அமெரிக்க மக்களையும், அரசையும் எதிரிகளாக பார்க்கும் அல்காயிதாவை துடைத்தெறிவோம் என ஒபாமா கூறினார்.
பாகிஸ்தானில் பகுதி அளவிலான சுயாட்சி பிரதேசமாக கருதப்படும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த ஆண்டு மட்டும் 64 ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளது. 2010-ஆம் ஆண்டு 101 தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்..
thanks to asiananban.blogspot.com

காந்தி தலையை வெட்டிய இந்து முன்னணி பயங்கரவாதிகள் !


கோயம்புத்தூர் : ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலையை ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவை சேர்ந்த பயங்கரவாதிகள் உடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவின் பொதுச்செயலாளர் சுரேஷ்ராஜன் (வயது 37) இன்னொரு தலைவரான மின்னல் நாகராஜ் (வயது 47) , ஆகியோரை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் கைது செய்தது. பாபா ராம்தேவை கைது செய்த சம்பவத்தை கண்டித்து காந்திசிலையை உடைத்ததாக சிலையை உடைத்த பிறகு குற்றவாளிகள் சம்பவ இடத்தில் வீசிச்சென்ற துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காந்திஜி சுதந்திரம் கேட்டு போராட்டம் நடத்தும் போது இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெள்ளையர்களோடு சேர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தார்கள். முஸ்லிம்கள் தங்களது இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக வேண்டி தங்களது விகிதாச்சரத்துக்கும் அதிகமாக போராடி உயிர்நீத்தனர், சிறை சென்றனர். அது மட்டும் அல்லாமல் வெள்ளையர்கள் மீது கொண்ட வெறுப்பினால் ஆங்கிலம் வெள்ளையர்களின் பாஷை அதை கற்றுக்கொள்வது ஹராம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்று கூறி ஆங்கிலம் கற்றுக் கொள்ளாததனால் ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கி போனார்கள்.

ஆனால் இந்த பார்பன ஹிந்துத்துவாவோ வெள்ளையர்களுக்கு சாமரம் வீசி தங்களை வளர்த்து கொண்டார்கள். கடைசியாக காந்திஜியை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டு கொன்றான். பாவம் அந்த நல்லவரும் ராம் ராம் என்று சொல்லி மரணித்து போனார். காந்திஜியை கொன்றதற்காக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் மீண்டும் ஹிந்துத்துவா ஆதரவு படைத்த சில அரசியல், மற்றும் நீதி துறை கயவர்களால் அவர்கள் தடை நீக்கப்பட்டு மீண்டும் இந்தியாவில் கலவரங்களை நடத்தி வருகிறார்கள். 
thanks to asiananban.blogspot.com

கர்நாடகாவில் எஸ்.டி.பி.ஐ சார்பாக துப்புறவு பணி நடைபெற்றது



மந்தியா: கர்நாடக மந்தியாவிலுள்ள பி.டி. காலணியில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் கடந்த 24ஆம் தேதி அன்று துப்புறவு பணியில் ஈடுபட்டனர். 

SDPI Mandya

சுற்றுப்புர சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் தாம் வாழ்கின்ற இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியில் துப்புறவு பணிகளை எஸ்.டி.பி.ஐயினர் மேற்கொண்டனர்.

மந்தியா மாவட்ட தலைவர் தாஹிர், பொருளாளர் அஸ்கர் அஹமது, பி.டி. காலணியின் தலைவர் நவீத் அஹமது, பொதுச்செயலாலர் செய்யது அஜார், பொருளாளர் செய்யது அஃப்சல், ஜாவித், ஜாபிர், நஷாத், அஃப்ரோஸ், முஹம்மது, இர்ஃபான், அஹமது தஸ்தகீர் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

SDPI Mandya

SDPI Mandya 

SDPI Mandya