Wednesday, December 12, 2012

ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் : தொகாடியா கொக்கரிப்பு!


ஹைதராபாத் : ஹைதராபாத்தின் புகழ் பெற்ற சார்மினார் அருகே கோவில் கட்ட வேண்டும் என்று பாஜக கோரியதை தொடர்ந்து சில வாரங்களாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. 

சார்மினார் வளாகத்தினுள் கோவில் கட்ட வேண்டும் என்று பாஜகவின் கோரிக்கையை தொடர்ந்து பாஜகவின் மிரட்டலை காங்கிரஸ் அலட்சியப்படுத்துகிறது என்று கூறி காங்கிரஸுக்கு கொடுத்த வந்த ஆதரவை மஜ்லிஸே இத்திஹாதுன் முஸ்லீமின் அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது.

இச்சூழலில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா சார்மினாரில் பாக்கியலஷ்மி கோவில் அமைப்பது கோடிக்கணக்கான இந்துக்களின் உரிமை பிரச்னை என்றும் கோவில் கட்டுவதை முஸ்லீம்கள் தடுக்க நினைத்தால் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியதை போல் லட்சக்கணக்கான மக்களை திரட்டி கோவில் கட்டுவோம் என்றார்.

மேலும் முஸ்லீம்களின் எதிர்ப்புக்கு பணிந்து கோவில் தரிசனத்தை காவல்துறை தடுப்பதாகவும் முஸ்லீம்கள் கோவில் கட்ட அனுமதிக்கா விட்டால் சார்மினார் தவிடு பொடியாவதுடன் முஸ்லீம்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பிரவீன் தொகாடியா  கொக்கரித்துள்ளார்.

Monday, December 10, 2012

விபத்தில் இறந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு நிதி உதவி!



கடந்த ஜூன் மாதம் மின் பாதையில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக சென்ற ஜாகிர் ஹுசைன்(35 ) என்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்த சகோ.ஜாகிர் உசேன் அவர்களின் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அதிரை நகர பேரூராட்சி தலைவர் அஸ்லாம் அவர்களுடன் இணைந்து  அதிரை நகர சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) தொண்டர்கள் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் நிதி வசூல் செய்தனர்.  வசூல் செய்யப்பட நிதியை ஜாகிர் ஹுசைன் மனைவியின்  இத்தா காலம் முடிந்த பிறகு பெற்று கொள்வதாக அவர் குடும்பத்தினர் கூறியிருந்தனர்.

ஜும்ஆ மற்றும் தனிநபர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ.90,200 (தொன்னுராயிரத்து இருநூறு) ஐ   ஜாகிர் ஹுசைன் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று 10/12/12 மாலை எஸ்.டி.பி.ஐ தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் இல்யாஸ் தலைமையில் நடைப்பெற்றது.நிதியை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் ஜாகிர் ஹுசைனின் மாமனார் சம்சுதீன் அவர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ யின் மாவட்ட பொது செயலாளர் நூருல் இஸ்லாம், அதிரை நகர தலைவர் A.T. அப்துல்லாஹ், நகர செயலாளர் இல்முதீன், துணை செயலாளர் முஹம்மது உள்ளிட்ட நகர நிருவாகிகள் கலந்து கொண்டனர்.

Sunday, December 9, 2012

அணுமின் நிலையம்:ஆந்திராவில் மக்கள் எதிர்ப்பு!

 
    ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அணுமின் நிலைய திட்ட எதிர்ப்பாளர்களில் மத்திய எரிசக்தி துறையின் முன்னாள் செயலர் ஈ.ஏ.எஸ். சர்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரனஸ்தலம் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது.
 
    இதுபற்றி சர்மா அளித்த பேட்டியில், ” ஜெர்மனி போன்ற நாடுகள் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைக்கு மாறியுள்ளன. எனவே,ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய, அணுமின் நிலைய திட்டத்தை முழுவதுமாக மறுஆய்வு செய்ய வேண்டுமென அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
 
    ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், கொவாடா கிராமத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 6 அணு உலைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ராமச்சந்திரபுரம், குடேம், கோட்டப்பாலம், தெக்காலி, கொவாடா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1,983 குடும்பங்களைச் சேர்ந்த 7,960 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மாற்று இடத்தில் குடியமர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

           

இந்தியாவின் 90 சதவிகித மக்கள் முட்டாள்கள்: மார்க்கண்டேய கட்ஜூ வேதனை

        90 percent of Indians were idiots says katju  8 Dec 2012
 
    டெல்லி:இந்தியாவின் 90 சதவிகித மக்கள் முட்டாள்கள் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ சாடியுள்ளார். மதத்தின் பெயரால் இந்தியர்களை தீய சக்திகள் தவறாக வழிநடத்த முடிவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
 
    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்களுக்கு தலையில் மூளை என்பது இல்லை என்றார். டெல்லியில் வெறும் 2 ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஒரு மதம் தொடர்பான வன்முறைச் சம்பவத்தை தூண்டி விடலாம் என்ற நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
    1857 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் மதவாதம் என்பது இல்லை என்று கூறிய கட்ஜூ, ஆனால், தற்போது நிலைமை அப்படி அல்ல என்றார். ஆங்கிலேய ஆட்சியின் போதுதான், இந்தியாவில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினை உருவாக்கப்பட்டதாகவும் கட்ஜூ தெரிவித்தார்.

ஹமாஸுக்கு வயது 25: காஸ்ஸாவில் மக்கள் கடல்!

ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல்
 
    காஸ்ஸா:ஃபலஸ்தீன் மண்ணில் தீரமிக்க சியோனிச எதிர்ப்பு போராட்டத்தின் வீரமிக்க போராளிகளான ஹமாஸின் 25-வது ஆண்டு விழாவில் பங்கேற்க காஸ்ஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பிரம்மாண்டமான பேரணிக்கு பிறகு மக்களிடையே ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் உரை நிகழ்த்தினார்.
 
    காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தனர். 45 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கைக்கு பிறகு ஃபலஸ்தீன் மண்ணிற்கு திரும்பிய காலித் மிஷ்அலின் வருகை ஹமாஸ் உறுப்பினர்களுக்கு உத்வேகத்தை அளித்தது.
 
   ஃபலஸ்தீன் காஸ்ஸாவிற்கு வருகை தந்தது தனது 3-வது பிறவி என்றும், ஃபலஸ்தீனுக்காக உயிரை தியாகம் செய்யவும் தயார் என்று காலித் மிஷ்அல் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.

பாலியல் கொடுமை: 60 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்கு!

9 Dec 2012
 
    பெர்லின்:சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே 60 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவுச்செய்துள்ளதாக ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் கத்தோலிக்க சர்ச் தெரிவித்துள்ளது. சர்ச் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
    10 வருடங்களில் 576 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் ஆவர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. ஜெர்மன் பிஷப் கான்ஃப்ரன்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை இவ்வறிக்கையை வெளியிட்டது.
 
    குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் மனோரீதியாக ஆரோக்கியமாகவே உள்ளனர். இவர்களுக்கு எவ்வித மன நல பிரச்சனைகளும் இருப்பதாக கண்டறிய முடியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
 
    பாதிரியார்கள் சர்ச்சில் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதாக பலரும் குற்றம் சாட்டியதை தொடர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடர்பாக ஆய்வை நடத்த சர்ச் தீர்மானித்திருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை – ஐக்கிய நாடுகள் அவை!

        India don't care about Oppressed people safe - UN  9 Dec 2012
   
    புதுடெல்லி:டிசம்பர் 10-ஆம் தேதி மனித உரிமை தினம் கடைப்பிடிக்கப்படும் இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவையின் வர்கிங் க்ரூப் ஆன் ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது.
 
    மனித உரிமை மீறல்களை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிடவேண்டும் என்று மனித உரிமைகள் தொடர்பான வருடாந்திர அறிக்கையை வெளியிட்ட W.G.H.R கன்வீனர் மிலூன் கோத்தாரி கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் ராணுவம் மயமாக்கல் நடந்துள்ளதாக வருடாந்திர அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர் பிருந்தா க்ரோவர் தெரிவித்தார்.
 
    மேலும் அவர் கூறியது: “இந்தியாவில் பெருமளவில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு கறுப்புச் சட்டங்கள்
    அமல்படுத்தப்பட்டுள்ளன. சமூக-பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும், அரசியல் எதிரிகளையும் அடக்கு ஒடுக்கவும், வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அரசு இவற்றைச் செய்துள்ளது. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பேணுகிறோம் என்ற பெயரில் சட்டத்தின் பாதுகாவலர்கள் அக்கிரமங்களுக்கு தலைமை வகிக்கின்றனர். போலி என்கவுண்டர்களும், அநீதமான சிறைக்காவல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறிவருகிறது. அமைதியான முறையில் போராடுபவர்களை கூட கொடுமைப்படுத்தும் செயல் நடக்கிறது” என்று பிருந்தா க்ரோவர் கூறினார்.
 
    பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேலும் ஏழ்மையையும், மனித உரிமை மீறல்களையுமே உருவாக்குகிறது என்று ஹவுஸிங் அண்ட் லாண்ட் ரைட்ஸ் நெட்வர்கின் நிர்வாகி சிவானி சவுதரி கூறினார். உலகில் அதிகமான மக்கள் பட்டினியில் வாடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வளர்ச்சிக்கு பலியாகி வருடந்தோறும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிபெயர்க்கப்படுகின்றனர். பொருளாதார வளர்ச்சி குறையும் வேளையில் அவசரக் கூட்டங்களை நடத்தி தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, சமூக பிரச்சனைகளை தீவிரவமாக கருதுவதில்லை என்று சிவானி சவுதரி குற்றம் சாட்டினார்.

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய ஹிந்து முன்னணி! :காவல்துறை நடவடிக்கை; TNTJ வேடிக்கை!

    DEC8, சென்னையை அடுத்த ஆவடியில் "டிசம்பர் 6" ந்தேதி "ராமர் கோவில்" கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணியினர் நபிகள் நாயகத்தை மிகவும் கீழ்த்தரமாக ஏசிப்பேசினர்.
ஹிந்து முன்னணி வன்மத்தை கவனித்த காவல்துறையினர்,

     ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், ஹிந்து முன்னணியின் மாநிலப்போதுச்செயலாளர் பரமேஸ்வரன், மாவட்டச்செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மூவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட ( IPC 153) கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு (Crime No.1953) செய்து, "புழல்" சிறையில் அடைத்தனர்.

     குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற நோக்கில், பாப்புலர் பிரண்ட், தமுமுக உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புக்களும், முனைப்புடன் செயல்பட்ட வேளையில், இந்த விஷயத்தில்  பாராமுகமாக இருந்த "ஆவடி TNTJ"யின் செயல் கண்டிக்கத்தக்கது.

     வேடிக்கை என்னவென்றால், பல முஸ்லிம் அமைப்புக்களும் காவல் நிலையத்தில் முற்றுக்கையிட்டு முறையிட்டுக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், TNTJ நிர்வாகிகளும் காவல் நிலையத்துக்கு வந்து, 9/12 அன்று நடத்தப்பட இருக்கும் "ரத்த தான முகாமுக்கு" இன்ஸ்பெக்டரை அழைக்க வந்தனர்.

    ஆனால், நபி பெருமானாரை இழிவுபடுத்திய ஹிந்து முன்னணிக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. இதற்கு இவர்கள் கூறும் காரணம், மிகவும் கேவலமானது.

    டிசம்பர் 6ல், TNTJ போராட்டங்கள் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, டிசம்பர் 6 ல் நடத்தப்பட்ட ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களையும் நபியவர்களையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்த விஷயத்திலும் சொரனையற்று உள்ளது, சோகமானது.
பாபர் மசூதி பிரச்சினை என்பது, இந்திய தேசம் முழுமையிலும் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்சினை.

    நாட்டின் அனைத்துப்பகுதியில் உள்ள முஸ்லிம்களும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் -போராட்டங்களும் வீரியத்துடன் நடத்திவரும் காலத்தில் TNTJ மட்டும், அவைகளை கைவிட்டு விட்டதாக சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

    ஆவடி போலீஸ், ஹிந்து முன்னணியினர் மீது (சுயமொட்டோ) வழக்குப்பதிவு செய்து, தானாக முன்வந்து கைது செய்திருந்தாலும், பாப்புலர் பிரண்ட், தமுமுக போன்ற அமைப்புக்களும் தனித்தனியே புகார் அளித்து CSR பெற்று வைத்துள்ளனர்.

    குற்றவாளிகள் விரைவான ஜாமீன் மூலம் வெளிவராமல் தடுக்கப்படவேண்டுமென்றால், பூந்தமல்லி கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கில் முஸ்லிம்கள் சார்பில், தனியாகவோ-இயக்க ரீதியிலோ, நம்மையும் சேர்த்துக்கொண்டு வாதாட வேண்டிய சூழ்நிலையில், TNTJ வினரின் இந்த அலட்சியப்போக்கு, கண்டித்தக்கதாக, மக்கள் கூறுகின்றனர்.

Thursday, December 6, 2012

TNTJ -விற்கு எஸ்.டி.பி.ஐ மாநில பொதுசெயளாலர் சவால் - காணொளி


அதிரையில் தனிபட்ட பிரச்சனை காரணமாக நடைபெற்ற கொலை சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ-யை சம்மந்தபடுத்தி அவதூறுகளை பரப்பிகொண்டிருக்கும் TNTJ -வை கண்டித்து 05/12/2012 அன்று மாலை 5.00 மணி அளவில் நமதூர் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ யின் மாநில பொது செயலாளர் அவர்கள் தன் உரையில் இந்த கொலையை செய்த காதர் எஸ்.டி.பி.ஐ யில் உறுப்பினர் என்பதர்கு ஆதாரம் (உறுப்பினர் அட்டை) உண்டா? அப்படி இருந்தால் அதனை இரண்டு நாட்களுக்குல்(6/12/2012) நிறுபிக்க தயாரா? என TNTJ பக்கீர் முஹம்மது அல் தாஃபி-க்கு சவால் விட்டார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



Wednesday, December 5, 2012

அதிரையில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம் நேரடி ஒளிப்பரப்பு..


அதிரையில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம் நேரடி ஒளிப்பரப்பை காண பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.
http://www.ustream.tv/channel/yasirz