கடந்த ஜூன் மாதம் மின் பாதையில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக சென்ற ஜாகிர் ஹுசைன்(35 ) என்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்த சகோ.ஜாகிர் உசேன் அவர்களின் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அதிரை நகர பேரூராட்சி தலைவர் அஸ்லாம் அவர்களுடன் இணைந்து அதிரை நகர சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) தொண்டர்கள் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் நிதி வசூல் செய்தனர். வசூல் செய்யப்பட நிதியை ஜாகிர் ஹுசைன் மனைவியின் இத்தா காலம் முடிந்த பிறகு பெற்று கொள்வதாக அவர் குடும்பத்தினர் கூறியிருந்தனர்.
ஜும்ஆ மற்றும் தனிநபர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ.90,200 (தொன்னுராயிரத்து இருநூறு) ஐ ஜாகிர் ஹுசைன் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று 10/12/12 மாலை எஸ்.டி.பி.ஐ தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் இல்யாஸ் தலைமையில் நடைப்பெற்றது.நிதியை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் ஜாகிர் ஹுசைனின் மாமனார் சம்சுதீன் அவர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ யின் மாவட்ட பொது செயலாளர் நூருல் இஸ்லாம், அதிரை நகர தலைவர் A.T. அப்துல்லாஹ், நகர செயலாளர் இல்முதீன், துணை செயலாளர் முஹம்மது உள்ளிட்ட நகர நிருவாகிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment