8 Dec 2012
டெல்லி:இந்தியாவின் 90 சதவிகித மக்கள் முட்டாள்கள் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ சாடியுள்ளார். மதத்தின் பெயரால் இந்தியர்களை தீய சக்திகள் தவறாக வழிநடத்த முடிவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்களுக்கு தலையில் மூளை என்பது இல்லை என்றார். டெல்லியில் வெறும் 2 ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஒரு மதம் தொடர்பான வன்முறைச் சம்பவத்தை தூண்டி விடலாம் என்ற நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1857 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் மதவாதம் என்பது இல்லை என்று கூறிய கட்ஜூ, ஆனால், தற்போது நிலைமை அப்படி அல்ல என்றார். ஆங்கிலேய ஆட்சியின் போதுதான், இந்தியாவில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினை உருவாக்கப்பட்டதாகவும் கட்ஜூ தெரிவித்தார்.
0 comments:
Post a Comment