Showing posts with label SDPI. Show all posts
Showing posts with label SDPI. Show all posts

Monday, January 28, 2013

அதிரையில் ஷஹீத் பழனிபாபா நினைவு அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்!

வருகின்ற 31.01.2013 அன்று மாலை 6.45 மணியளவில் அதிரை SDPI கட்சி சார்பில் ஷஹீத் பழனிபாபா நினைவு அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகில் ஷஹீத் பழனிபாபா அரங்கில் நடைப்பெற உள்ளது.

Tuesday, January 8, 2013

தஞ்சையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்!

தொடரும் விவசாயிகள் தற்கொலை, தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும். SDPI கட்சி-யின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் தஞ்சையில் 09/01/2013 அன்று காலை 11.00 மணி அளவில் நடைபெரும் மாபெரும் இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறது.

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)
தஞ்சை தெற்கு மாவட்டம்.

Sunday, December 23, 2012

ஏரிபுறக்கரை MSM நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி!




அதிரை அருகில் உள்ள ஏரிபுறக்கரை 2வது வார்டு MSM நகரில் நேற்று சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 54 மீட்டர் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை தஞ்சை மாவட்ட கலக்டரின் நேர்முக ஆய்வாளர் நேரில் பார்வையிட்டார். அப்போது SDPI கட்சியின் 2வது வார்டு கவுன்சிலர் மற்றும் நிர்வாகிகள் உடன்யிருந்தனர்.

Thursday, December 6, 2012

TNTJ -விற்கு எஸ்.டி.பி.ஐ மாநில பொதுசெயளாலர் சவால் - காணொளி


அதிரையில் தனிபட்ட பிரச்சனை காரணமாக நடைபெற்ற கொலை சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ-யை சம்மந்தபடுத்தி அவதூறுகளை பரப்பிகொண்டிருக்கும் TNTJ -வை கண்டித்து 05/12/2012 அன்று மாலை 5.00 மணி அளவில் நமதூர் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ யின் மாநில பொது செயலாளர் அவர்கள் தன் உரையில் இந்த கொலையை செய்த காதர் எஸ்.டி.பி.ஐ யில் உறுப்பினர் என்பதர்கு ஆதாரம் (உறுப்பினர் அட்டை) உண்டா? அப்படி இருந்தால் அதனை இரண்டு நாட்களுக்குல்(6/12/2012) நிறுபிக்க தயாரா? என TNTJ பக்கீர் முஹம்மது அல் தாஃபி-க்கு சவால் விட்டார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



Friday, November 2, 2012

அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்!


முத்துப்பேட்டையில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து இன்று முத்துப்பேட்டை SDPI கட்சி சார்பில் மின்சார வாரியம்  முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர். இதனை தொடர்ந்து அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.

Saturday, October 27, 2012

அதிரை அருகே ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பிஜேபி யினர் தடை

அதிரை அருகில் உள்ள வெட்டிகாடு என்ற கிராமத்தில் பல இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள்.  இன்று ஹஜ் பெருநாள் என்பதால் அவர்கள் பள்ளிவாசலில்  தக்பீர்  முழங்கி கொண்டு இருந்த போது அந்த  ஊரில் உள்ள பாரதிய ஜனதா  கட்சியினர் பள்ளிவாசல் அருகில் கோயில் இருப்பதால் தக்பீர் மற்றும் தொழுவதற்கு தடை போட்டுள்ளனர்.இதனால் அங்கு  இருவர்களுக்கு இடையே    வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இதனை தகவல் அறிந்த  20 க்கு மேற்பட்ட நமதூர் SDPI சகோதரர்கள், பட்டுகோட்டை SDPI  மற்றும் கரம்பக்குடி SDPI யினரும்  காவல்துறை துணையோடு அங்கு சென்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பிறகு காவல்துறை பாதுகாப்புடன் ஹஜ் பெருநாள் தொழுகை நடை பெற்றுள்ளது.  

Friday, October 26, 2012

பாமனில் SDPI கட்சி மற்றும் கில்கால் ட்ரஸ்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்.

     இராமநாதபுரம் மாவட்டம் பாமனில் SDPI கட்சி மற்றும் கில்கால் ட்ரஸ்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்.
மக்கள் இன்று டென்கு மற்றும் பல்வேறு மர்ம காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர் ,இதனால் மக்களின் அச்சத்தை போக்கவும் மக்கள் இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதனை தெளிவு படுத்தி கொள்ளவும் SDPI மற்றும் கில்கால் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
இதில் பாமனை சேர்ந்த மக்கள் அதிகமாக கலந்து கொண்டு பயனடைந்தனர்

Wednesday, October 17, 2012

பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் முற்றுகை!






மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி  பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பெண்கள், சிறுவர் உள்பட 200க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மது விலக்கை அமல் படுத்தவேண்டும். மதுக்கடைகளை மூடவேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஆசாத் அவர்கள் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டச்செயலாளர் Z. முஹம்மது இல்யாஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.கே, ஷாகுல் ஹமீது, மதுக்கூர் நகர தலைவர் செய்யது முஹம்மது , அதிரை நகர செயலாளர் இல்முதீன், நகர அமைப்பாளர் அமானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
எஸ்டிபிஐ கட்சியைசேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Wednesday, October 3, 2012

பட்டுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்! (வீடியோ)





மதுவிலக்கை அமல்படுத்து! டாஸ்மாக்கை இழுத்து மூடு!! என்ற உயரிய நோக்கத்தில் SDPI கட்சி அக்டோபர் 2 முதல் 17 வரை போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று பட்டுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டதில் SDPIன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப் Z.முஹமது இலியாஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் திரு.சதா சிவக்குமார் மற்றும் அதிரை நகர SDPI கட்சியின் தலைவர் ஜனாப் A.T.அப்துல்லாஹ் ஆகிவோர் சிறப்புரையாற்றினர். இதில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மாநில அரசுக்கு ஏதிராக கண்டன கோசங்கள் எழுப்பபட்டது. இறுதியாக SDPIன் பட்டுக்கோட்டை நகர அமைப்பாளர் ஜனாப். அமானுல்லாஹ் அவர்கள் நன்றியுரையாற்றினார். மேலும் இப்போராட்டடில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டனர்.

Monday, September 24, 2012

தாலுக்கா அலுவலகம் முற்றுகை! அழைக்கிறது SDPI கட்சி!!


தமிழகத்தில் அரசே மதுக்கடைகளை நடத்தும் காரணத்தாலும் மது விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை அரசே எடுப்பதாலும் மதுகுடிக்கும் பழக்கம் மக்களிடையே மிக வேகமாக பரவிவருகிறது. இது பற்றி SDPIன் மாநில செயற்குழுவில் மிகுந்த கவலையுடன் விவாதிக்கப்பட்டது.

மக்களை சீரழித்து பல்வேறு கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் மதுவை தடை செய்ய வலியுறுத்தியும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை நடைபெற உள்ளது. 

தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக பட்டுக்கோட்டையில் அக்டோபர் 2 அன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டமும் அக்டோபர் 17 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் மக்கள் நலனில்  அக்கரையுள்ள ஜனநாயக சக்திகளும் பொதுமக்களும் கலந்துக் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டுமென SDPIன் அதிரை நகர கிளை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 5, 2012

மது விலக்கு:எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெக்லான் பாகவி பேட்டி!

மது விலக்கு:எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெக்லான் பாகவி பேட்டி!

Saturday, August 25, 2012

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் எஸ்.டி.பி.ஐ – மு.க.ஸ்டாலின் பாராட்டு!


சென்னை:ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.  மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், துணைத் தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.செய்யது இப்ராஹீம், ஜி.அப்துல் ஸத்தார், வி.எம்.அபூதாஹிர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது:
தி.மு.கவுக்கும், முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையே உறவு தேர்தலுக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்திற்காகவோ அல்ல. இந்த உறவு தொன்றுதொட்டு இருந்து வரும் உறவு. ஒடுக்கப்பட்ட மக்களின், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த முஸ்லிம் சமுதாயத்தோடு நீண்டகாலமாக தொடர்பு வைத்திருக்கும் இயக்கம் தி.மு.க.நீண்டகாலமாக தொடர்பு வைத்திருக்கும் தலைவர் கருணாநிதி ஆவார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ இருந்து வருவது பாராட்டுக்குரியது. இன்று மத்திய-மாநில அளவில் எத்தனையோ பிரச்சனைகள், இலங்கை தமிழர் பிரச்சனை, சேது சமுத்திர திட்ட பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, எல்லாவற்றிற்கும் மேலாக விலைவாசி உயர்வு பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து அதற்காக ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ திகழ்கிறது.
தமிழகம் எத்தனையோ தேர்தல்களை பார்த்தது உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் கட்சி கூட்டணி முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது தி.மு.கவும், முஸ்லிம் லீக்கும்தான். 1962-ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிட்டன. 1967-ஆம் ஆண்டு தொடர்ந்து கூட்டணி நீடித்து அதன் காரணமாக தி.மு.க ஆட்சியையும் பிடித்தது. இப்படி முஸ்லிம் சமுதாயத்துடன் தி.மு.க தொடர்ந்து உறவு வைத்து வருகிறது. அந்த உறவு எஸ்.டி.பி.ஐ மூலமாக மேலும் வளரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் மெளலவி ஏ.இ.அப்துல் ரஹ்மான், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களை எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது வரவேற்றார். இறுதியில் எஸ்.டி.பி.ஐயின் இன்னொரு மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் நன்றி நவின்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

Thursday, July 26, 2012

50 செயல் வீரர்கள் ம ம க கட்சியில் இருந்து விலகி SDPI கட்சியில் இணைந்தனர்




கடந்த 22.07.2012 அன்று மாலை 5.00 மணியளவில் திருவாரூர் மாவட்டம் கொரடசேரியில் SDPI கட்சியின் புதிய கிளையின் சார்பாக கட்சிக் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றிவைத்தார்.
பிறகு மாலை 5.30 மணியளவில் ம ம கவில் இருந்த ம ம க நகர பொறுப்பாளர் ஹாஜி தலைமையில் 50 செயல் வீரர்கள் ம ம கவை விட்டு  விலகி  SDPI கட்சியில் புதிதாக இணைந்த போது அவர்களுக்கு அறிமுக உரையை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு  திருவாரூர் மாவட்ட தலைவர் M.தப்ரே ஆலம் பாதுஷா தலைமை வகித்தார்.  மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் A.முகமது பைசல் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.லத்திப்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  
                இறுதியாக மாலை 6.40 மணியளவில் SDPI கட்சியின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி   நடைபெற்றது. இதில் அத்திக்கடை, பொதக்குடி & பூதமங்கலம் ஆகிய கிளை நிர்வாகிகள் கொரடசேரி ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஆகியோர் 70 க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

Thursday, June 9, 2011

எஸ்.டி.பி.ஐ ஆதரவுடன் பா.ஜ.க பஞ்.துணைத்தலைவரை தோற்கடித்த காங்.-முஸ்லிம் லீக்


கேரள மாநிலம் காஸர்கோடு மாவட்டத்தில் மஞ்சேஷ்வரம் கிராம பஞ்சாயத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 
நடந்த துணை தலைவர் தேர்தலில்  பா.ஜ.கவை சார்ந்த ஹரிச்சந்திரனுக்கு மு.லீக் உறுப்பினர் ஒருவர் கட்சி மாறி வாக்களித்தார். மேலும் காங்கிரஸ் உறுப்பினரின் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹரிச்சந்திரன் பஞ்.துணை தலைவரானார்.
இதனை தொடர்ந்து கட்சி மாறி வாக்களித்த மு.லீக் உறுப்பினரிடம் பதவியை ராஜினாமா செய்ய மு.லீக் கட்சி வலியுறுத்தியது. இதனை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த வார்டில் நடந்த மறு தேர்தலில் மு.லீக் வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்நிலையில் காங். கட்சி பா.ஜ.க பஞ்.துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது. இதில் எஸ்.டி.பி.ஐயின் ஒரே உறுப்பினரான மைமூனா அபூபக்கர் காங்.-மு.லீக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனை தொடர்ந்து ஹரிச்சந்திரன் பதவி விலகினார்.
பஞ்சாயத்து கவுன்சிலில் மொத்த உறுப்பினர்கள் 21 ஆவர்.எஸ்.டி.பி.ஐ-1,மு.லீக்-9, காங்.-1, சி.பி.எம்-1, சி.பி.ஐ-1 , பா.ஜ.க-8.

Thursday, April 28, 2011

எண்டோஸல்ஃபான்:தடை செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ டெல்லியில் தர்ணா


217367_1347563864485_1692987272_590557_5120674_n
புதுடெல்லி:எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கேரளாவிலும்,கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றஞ்சாட்டினர்.
எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர்.
74 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் என்ற கொடூரமான பூச்சிக்கொல்லி மருந்தினால் இந்தியாவில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதனை தடைச்செய்ய மத்திய அரசு தயங்குகிறது. எண்டோஸல்ஃபானை தடைச்செய்ய பிரதமர் முன்வரவேண்டும். தடைக்கான வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்களின் உயிர்களைவிட எண்டோஸல்ஃபான் நிறுவனத்திற்கும், விவசாயிகளுக்கும் கிடைக்கும் லாபத்திற்கு மேற்கண்ட அமைச்சகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமருக்கு மனு அளித்தனர்.
இப்போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ டெல்லி கன்வீனர் அப்துற்றஷீத் அக்வான் துவக்கிவைத்தார். இப்போராட்டத்தில் அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ்சிங், எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில கன்வீனர் அன்ஸான் இந்தோரி, எஸ்.டி.பி.ஐ டெல்லி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அஸ்லம்,கேரள மாநில பொதுச்செயலாளர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், இமாம்ஸ் கவுன்சில் உத்தரபிரதேச கன்வீனர் மெளலானா ஷஹ்தாஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்