Tuesday, December 18, 2012

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது!

  Samjhauta Express blast- NIA makes another hindutva terror arrest   18 Dec 2012
 
    புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு 68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டான்சிங்கை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டான்சிங்கை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
 
    2008-ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் டான்சிங்கிற்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுவாமிஜி என்ற போலி பெயரில் டான்சிங் அப்பகுதியில் தங்கியிருந்துள்ளான்.
 
     சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டுவைத்த முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரியை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கடந்த 15-ஆம் தேதி என்.ஐ.ஏ கைது செய்திருந்தது. இவனுக்கு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ தெரிவித்தது. ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுதரியை என்.ஐ.ஏ 12 தினங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றுள்ளது.
 
     இவ்வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான கமல் சவுகான், சுவாமி அசிமானந்தா, லோகேஷ் சர்மா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் 68 பேர் அநியாயமாக பலியாகினர். நன்றி தூது

முஸ்லிம்கள் ஏன் கம்யூனிஸ்டுகளை விட்டு விலகுகிறார்கள்?

        8th_mar_sun-C.pmd 18 Dec 2012
 
     கட்சி செயல்பாடுகளை குறித்து இதர அரசியல் கட்சிகளில் இருந்து மாறுபட்டு உண்மையான தகவல்களின் அடிப்படையில் மீளாய்வு செய்து தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பண்பு இந்தியாவின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும்.
 
     பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் மாபெரும் மாநாடுகளை நடத்தும் வேளையில், நீண்ட நேர உரைகளை எதுகை, மோனையுடன் ஆற்றி, தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டி அவர்களை ஆவேசப்படுத்தி நாம் செய்வது அனைத்தும் நல்லதே! என்ற திருப்தியுடன் முடித்துக்கொள்வதுதான் வழக்கம். ஆனால், கம்யூனிஸ்டுகள் சற்று வித்தியாசமானவர்கள்.
 
    கடந்த கால கட்சியின் செயல்பாடுகளை மீளாய்வு செய்வார்கள். வரவு, செலவு கணக்குகளையெல்லாம் சரியாக பரிசோதித்து தணிக்கைச் செய்வார்கள். நிகழ்ந்துவிட்ட தவறுகளுக்கு பரிகாரம் காண மாற்று வழிகளை குறித்து ஆராய்வார்கள்.
 
    அவ்வகையில் கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(சி.பி.எம்) 20-வது மாநாடும் அடங்கும். சி.பி.எம்மின் 20-வது கட்சி மாநாட்டில் நடத்தப்பட்ட மீளாய்வுகளில் ஒன்று என்னவெனில், ஏன் இந்திய முஸ்லிம்கள் சி.பி.எம்மில் இருந்து விலகுகிறார்கள்? தேசிய அளவில் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமைக்கு என்ன காரணம்? என்பதாகும்.
 
    கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் செல்வாக்குள்ள மாநிலங்களான கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகியவற்றில் முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இணைவதற்கு தயக்கம் காட்டுவது மட்டுமின்றி, இதர மதத்தினரை விட கட்சியில் இருந்து விலகுவதும் அதிகரித்து வருகிறது.
 
    தேசிய அளவில் 2007-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்(சி.பி.எம்) முஸ்லிம்களின் எண்ணிக்கை 10.35 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. ஆனால், 2012-ஆம் ஆண்டில் அதாவது 5 ஆண்டுகளில் 9.55 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்தம் சி.பி.எம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10, 44, 833 ஆகும். அவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 99,990 ஆகும்.
 
    இறைக்கொள்கை, மரணத்திற்கு பிந்தைய மறுமை வாழ்வு ஆகியவற்றில் தெளிவான உறுதியான கொள்கையை கொண்ட முஸ்லிம்கள் கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தில் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பது புதிய செய்தி அல்ல. ஆனால், நம்பிக்கை ரீதியாக முரண்பாடு நிலவிய பிறகும் ஒரு காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர்கள் தற்பொழுது விலகுவதற்கு என்ன காரணம்? இது நம்பிக்கை மற்றும் தத்துவங்களை ஒதுக்கிவைத்துவிட்டு விவாதிக்க வேண்டிய பிரச்சனையாகும்.
 
    பணக்காரன், ஏழை ஆகிய இரண்டு பிரிவினர் மட்டுமே இப்பூவுலகில் வாழ்கின்றனர் என்பது மார்க்சீய சித்தாந்தத்தின் பார்வையாகும். ஆனால், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்த ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட மத சிறுபான்மையினர் மட்டும் மேலும் மேலும் ஏழைகளாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஏன் மாற்றப்பட்டார்கள்? என்பது குறித்து சி.பி.எம் கட்டாயம் பதில் அளித்தே ஆகவேண்டும்.
 
    பிரிவினை வாதம் மற்றும் வகுப்புவாதத்தின் வைரஸ் கிருமிகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எவ்வாறு ஊடுருவியது? இந்தியாவில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளைப் போல மேல் ஜாதியினர் கட்சியின் தலைமையில் ஆதிக்கம் செலுத்தாமல் இது எவ்வாறு சாத்தியமானது?.
 
    அரசியலில் பலம் பெறுவதற்காக முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்ட இதர சமூகத்தினருடன் இணைந்து புதிய அரசியல் கட்சியை சி.பி.எம் ஆட்சிபுரிந்த ஒரு மாநிலத்தில் துவக்கிய வேளையில் அக்கட்சியை எவ்வாறேனும் அழித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கை வெட்டு சம்பவத்தின் பெயரால் கங்கணம் கட்டி செயல்பட்டது ஏன்?
 
    முஸ்லிம்கள் ஒட்டுண்ணிகளைப் போல தங்களை சார்ந்துதான் வாழவேண்டும், சுயமாக ஒரு அரசியல் முன்னேற்றத்தைக் குறித்து சிந்தித்து விடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் சிந்திப்பது ஏன்?
 
    மேற்கண்ட கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களை அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக வேண்டும். அத்துடன் கட்சிக்குள் ஊடுருவியிருக்கும் வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளை களையெடுக்க முயலவேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு முஸ்லிம் சிறுபான்மையினரின் ஆதரவு கானல் நீராகிவிடும்.
 
அ.செய்யது அலீ.

திரைப்படங்​களில் முஸ்லிம் விரோதப் போக்கு – வாசகர் கட்டுரை

திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப் போக்கு 
 
    “துப்பாக்கி”திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி விவாதங்களும், மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கின்றது. கமலஹாஷனின் முஸ்லிம் விரோதகுணம் ‘விஸ்வரூபம்’ எடுக்கக் காத்துக் கொண்டிருகின்றது. இவைகளுக்கு மத்தியில் அவை தொடர்பாக எனது சில கருத்துக்கள்.
 
     திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வரும் ஒன்று. இது உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி. வெகு அன்மையில் அமெரிக்காவில் நாயகத்தை இழிவுபடுத்தும் ஒரு நாடகம் அரங்கேறியது, நேற்றுவரை இந்தியாவில் நடந்தது இன்றும் நடந்துள்ளது. நாமும் நமது மார்க்கமும் ஊடகங்களில் தாக்கப்படுவது இது புதிதல்ல.
 
     படங்களில் முஸ்லிம்களை தாக்குவதும் தெரியாமல் இடம் பெற்றுவிட்டது மன்னியுங்கள் எனக்கோரி நீக்குவதும் திரையுலகின் வேடிக்கை நிறைந்த வாடிக்கையான நடவடிக்கையாகிவிட்டது. பல ஆயிரம் நுணுக்கங்கள் பார்த்தும், இந்து சாஸ்த்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தும் படம் எடுக்கும்  இவர்கள்,  இஸ்லாம்,  முஸ்லிம்  உலகம்  பற்றிய  எதார்த்தங்களை
மறந்தது ஏன்? அதுபற்றி தெரியாமல் போனது எப்படி? இது அபத்தம், முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் முயற்சி. இவர்களின் திட்டமிட்ட செயல். இழிவான விளம்பர யுக்தி என்பதே உண்மை.
 
     இந்தியாவைப் பொருத்தவரை வேஷம் போடும் கூத்தாட்டம் பிரதான தொழில். நன்றாய் திறந்து, சிறப்பாய் நடித்து, வேஷ நாடகம் போட்டு தங்களை ஏமாற்றி, தங்களையே ஏய்த்துப் பிழைக்கும் கூத்தாடிகளை கடவுளாக்கி, தலைவர்களாக்கி, உலக நாயகர்களாக்கி, கலாநிதிப் பட்டம் கொடுத்துக் கெளரவித்து, அவர்களின் கட்அவுட்டுகளுக்கு தன் சொந்தப் பணத்தில் பாலபிஷேகம் செய்து மகிழும் புத்தி ஜீவிகள் நிறைந்த நாடு இந்தியா.
 
     இந்த மக்களிடத்தில் தன் தொழிலில் இலகுவாக இலாபம் ஈட்ட தன் வேஷ நாடகத்தை இலவசமாக விளம்பரப்படுத்த இழிவான மிகவும் கேவலமான தரங்கெட்ட பல வழிகளை திரையுலகினர் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தினால் மற்ற சமயத்தவர்களிடத்தில் தன் கதைக்கும் சதைக்கும் நல்ல வரவேற்ப்புக் கிடைக்கும் என்பதனாலும் முஸ்லிம்கள் எதிர்த்தால் இலவச விளம்பரமும் கிடைக்கும் என்பதனாலும் இந்த வியாபார யுக்தியை தொடர்ந்து இந்தக் கூத்தாடிக் கூட்டம் செய்துவருகின்றது. குறிப்பாக இதைக் கூத்தாடிகளான கமலஹாஷன், விஜயகாந்த், அர்ஜூன், இயக்குனர் மணிரத்தினம் தொடக்கம் பலர் தொடர்ந்து தன் படங்களில் செய்து வருகின்றனர். இதில் இன்று விஜய், முருகதாஸ் எனும் கூத்தாடிக் கூட்டம் புதிதாக இணைந்துள்ளது. அவ்வளவுதான்.
 
     முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளா? இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றதா? அப்பாவிகளைக் கொல்லுவோர் முஸ்லிம் பெயர் தாங்கினாலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களே இல்லை என்பது இஸ்லாத்தின் ஆணித்தரமான கருத்து. ஆராய்ந்து பாருங்கள் 98 வீதமான முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தை தூண்டும் ஒரு விகிதக் கருத்துக் கூட இஸ்லாத்தில் கிடையவே கிடையாது. முடிந்தால் நிரூபிக்கலாம். இது உலகத்திற்கே நீண்ட நாளாய் இஸ்லாமிய அறிஞர்களால் விடப்படும் சவால். யாரும் இதை இன்றுவரை சரியாய் எதிர்த்து நின்றதும் கிடையாது வென்றதும் கிடையாது.
 
     காஷ்மீரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு இந்திய அரச பயங்கரவாதம் செய்யும் கொடூர கொலை, கொள்ளை,கற்பழிப்புகள் பற்றியோ, குஜராத்தில் நரமாமிசம் திண்ணி நரேந்திர மோடி செய்த மனிதப் படுகொலைகள் பற்றியோ, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத் தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு இந்தியா முழுவதும் செய்து கொண்டிருக்கும் கொடுமைகள் பற்றியோ, இந்து தீவிரவாதிகளால் அயோத்தியா பற்றி எரிந்தது அது பற்றியோ, இலங்கையில் முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகள் பற்றியோ, மியான்மரில் பௌத்த மதகுருக்கள் நேரடியாகக் களத்தில் நின்று பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொளுத்திச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேல் எனும் முறை தவறிப் பிறந்த யூத நாடு மனிதாபிமானமின்றி அப்பாவி ஃபலஸ்தீன் மக்களுக்கு மிகவும் காட்டுமிராண்டிதனமான அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கின்றது இது உலகறிந்த உண்மை இது பற்றியோ, அமெரிக்க தலைமையிலான நாடுகள் உலகம் முழுவதும் செய்யும் அடாவடித்தனங்கள் பற்றியோ எவனாவது படம் எடுத்தானா. அப்படியான உண்மைக் கதைகளை படமாக எடுத்த முதுகெலும்புள்ள எந்த இயக்குனரும், கூத்தாடியும் இந்தியாவில் கிடையாது.
 
     உண்மை இப்படி இருக்கும்போது யதார்த்தங்களுக்கு எதிராக படமெடுக்க முற்படுவது அபத்தமானதும் சமூக அமைதிக்கு ஆபத்தானதுமாகும்.
 
     களைந்து காட்டிப் பிழைப்பு நடத்தும் கூத்தாடிக் கூட்டங்களால் ஒரு போதும் இஸ்லாத்தின் கெளரவத்தை களைய முடியாது. அது எந்தத் தடையையும் தாண்டி மனித மனங்களில் ஊடுரும் வல்லமை படைத்த அல்லாஹ்வின் மார்க்கம். அவனே அதனின் பாதுவாவலன் அதன் வளர்ச்சிக்கு நேரடிப் பொறுப்பாளன். இதை நாம் நிரூபிக்கத் தேவையில்லை,உலக எதார்த்தங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
 
    இவர்களின் செயற்பாட்டின் மறுபகுதியில் சில தெளிவான உண்மைகளும் இஸ்லாதிற்கான பல நன்மைகளும் உள்ளது.
 
    1.முஸ்லிம்களின் பாரிய எந்த முயற்சியும் இல்லாத, இஸ்லாத்தின் இயற்கையான வளர்ச்சி அதன் வேகம் பலரை பயப்படச் செய்துள்ளது. அதனை சிறுபிள்ளைத் தனமான செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்த முற்படுகின்றனர்.
 
     2.அமெரிக்க வர்த்தக மைய்யம் இஸ்லாத்தின் பெயரால் தாக்கப்பட்டு இஸ்லாத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட பின்னும், ஜெர்மனி, பிரான்ஸ்,டென்மார்க் என பல நாடுகளில் இஸ்லாம் தொடர்ந்து இழிவு படுத்தப்பட்ட பின்னும் இஸ்லாம் உலகில் ஒரு துளியும் பின்னகரவில்லை மாறாக முன்னோக்கியே பாய்ந்துள்ளது. தாக்கத் தாக்க வேகமாக வளரும் இஸ்லாத்தைக் கண்டு வாடிகன் தொடக்கம் உலகமே வியந்து வெந்து நொந்து போய் நிற்கின்றது.
 
     இஸ்லாத்தை தாக்குவதாக நினைத்து தூக்கி விட்டுக் கொண்டிருகின்றார்கள்.இவர்களின் முயற்சி இஸ்லாத்தினை மற்றவர் படிக்கத் தூண்டும் இலவச விளம்பரம்.
 
இன்று இந்தக் கூத்தாடிகளுக்கு நான் செய்ய வேண்டியது இதுதான்
 
     1. அவர்களின் தோல்விக்காக நான் உழைக்க வேண்டும்.
 
     2.அவர்கள் சொல்லுவதுபோல் இஸ்லாத்தின் பெயரால் கீழ்த்தரமாக நடக்கும் ஒரு சிலரும் திருந்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
 
     3.கேவலமான கூத்தாடித் தொழில் ஒழியப் பாடுபட வேண்டும்
 
     4.வரம்பு மீறிப்போகும் இக்கூத்தாடிகளின் தொடராட்டத்தை இந்திய அரசும், உலக அரசுகளும் தடுத்து நிறுத்துமாறு ஒருமித்த குரலில் கோரிப் போராட வேண்டும்.
 
     முண்டியடித்து முதல் வரிசையில் நின்று திரையரங்குகளை நிரப்பும் முஸ்லிம்கள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு காத்தாடிகள் போல் செயற்படும் ரசிகர் மன்றங்களில் எம் முஸ்லிம்கள் இருக்கும் வரை அவர்களின் வியாபார வெற்றியில் ஒரு முடியளவு நஷ்டதைக் கூட எம்மால் ஏற்படுத்த முடியாது என்பது மட்டும் உண்மை.
 
நிச்சயம் அசத்தியம் அழிந்தே போகும். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
 
இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி. நன்றி தூது

Monday, December 17, 2012

இர்ஃபான் பத்தான் மோடியின் வலையில் சிக்கியது எப்படி?

modi with irfan pathan  17 Dec 2012       
 
     அஹ்மதாபாத்:ஹிந்துத்துவா வாக்கு வங்கியின் வீழ்ச்சியை தடுக்க முடியாத சூழலில் சிறுபான்மையின முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க பல சூழ்ச்சி வலைகளை பின்னியுள்ளார் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி. ஃபேஸ்புக் புகழ் ஷஹீன் தாதாவை தனது வலையில் சிக்க வைக்க மோடி நடத்திய முயற்சி தோல்வியை தழுவியவுடன் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பத்தானை உபயோகித்து அரசியல் ஆதாயம் தேட மோடி முயற்ச்சி செய்து வருகிறார்.
 
     “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் அந்தரங்க செயலாளர் அஹ்மத் மியான் பட்டேல் குஜராத் முதல்வராவார்” என்று தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கிண்டலடித்து பிரச்சாரம் செய்தார் மோடி. அஹ்மத் பட்டேல் என்ற அழைப்பதற்கு பதிலாக முஸ்லிம்கள் மரியாதையுடன் அழைக்கும் மியான் என்ற வார்த்தையையும் சேர்த்து பிரயோகித்தார் மோடி.
 
     குஜராத்தில் இனப்படுகொலை நடக்கும் பொழுதும், அதற்கு பின்னரும் முஸ்லிம்கள் சந்தித்த நெருக்கடிகளையும், துயரங்களையும் தீர்க்க எவ்வித உதவியும் புரியாமல், சொந்த சமுதாயத்தில் இருந்து இடைவெளியை பேணி வருபவர் அஹ்மத் பட்டேல். இவரைத்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல்வராகிவிடுவார் என்று கிண்டலடித்தார் மோடி.
 
     இதனிடையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங், குஜராத்தில் இப்போதும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறியது, பிரதமர் பதவி கனவில் மூழ்கியுள்ள மோடிக்கு எரிச்சலை ஊட்டியது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தான் தீண்டத்தகாதவன் அல்லன் என்பதை காட்ட, முதலில் மோடி ஷஹீன் தாதாவுக்கு வலை வீசினார்.
 
    மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் மரணத்தை தொடர்ந்து நடந்த முழு அடைப்பிற்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்தை வெளியிட்டவர் ஷஹீன் தாதா. இதன் பெயரால் பின்னர் கைது செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இச்சம்பவத்திற்கு பிறகு ராஜ்கோட்டிற்கு தனது உறவினரை காணச் சென்றார் ஷஹீன் தாதா.
 
     அப்பொழுது அவர், குஜராத் பாதுகாப்பான இடம் என கூறியதாக மோடி பொய்யை அவிழ்த்துவிட்டார். இதனை யாரும் மறுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மோடி தேர்தல் பிரச்சாரங்களில் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். ஆனால், இதனை குறித்து கேள்வி எழுப்பிய ஷஹீன் தாதா, தான் ஒருபோதும் இத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்று மறுத்தார்.
 
      இதனால் மோடியின் மோசடி அம்பலமானது. இதனைத்தொடர்ந்து குஜராத் போலீஸாரால் க்ரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் இயலாமையை பயன்படுத்த மோடி துணிந்தார். தனக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த பெண்மணியை காலிச்செய்ய களமிறங்கியதால் வழக்கில் சிக்கினார் இர்ஃபான் பதான்.
 
     வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு, பலம் பிரயோகித்து வாடகைக்கு இருந்தவரை வெளியேற்ற முயன்றதாக இர்ஃபான்பதான் மீது குஜராத் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தனது இமேஜை பாதிக்கும் க்ரிமினல் வழக்கில் இருந்து விடுபட வழிகளை தேடிய இர்ஃபானுக்கு தனது சொந்த இமேஜை சரிப்படுத்த வழியை தேடிக்கொண்டிருந்த மோடி உதவ தயாரானார்.
 
     விளைவு, தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மோடியுடன் கலந்துகொண்டார். ஆனால், இந்திய வரலாறு காணாத இனப்படுகொலையை சந்தித்த குஜராத் முஸ்லிம்கள் இந்த இர்ஃபான் பதான் போன்ற மோசடிகார்களின் வலையில் சிக்கிவிடமாட்டார்கள். நன்றி தூது

நான் தோல்வியடைந்தால் அது சத்தியத்தின் தோல்வி!-சுவேதா பட்!

swetha pat    17 Dec 2012       
    
    அஹ்மதாபாத்:’நான் சத்தியத்திற்காக போராடுகிறேன்! ஆகையால் நான் தோல்வியுறுவது சத்தியத்தின் தோல்வியாக மாறும்!’- இந்த வார்த்தைகளைகூறும் பொழுது சுவேதா பட்டின் கண்களில் தன்னம்பிக்கையின் ஒளி தென்படுகிறது.
 
    குஜராத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய்பட்டின் மனைவியும், மணிநகர் தொகுதியில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுபவருமான சுவேதா பட் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு தேஜஸ் பிரதிநிதிக்கு பேட்டி அளித்தார்.
 
    சுவேதா பட் கூறியது: குஜராத் இனப்படுகொலை தொடர்பான உண்மையை வெளிக்கொணர்ந்ததால் எனது கணவர் மோடியால் அவதிக்கு உள்ளானார். குஜராத்தில் அனைவரும் பயந்து வாழுகின்றனர். மக்கள் சத்தியத்தை கூற அஞ்சுகின்றார்கள். அவர்களால் சுதந்திரமாக சிந்திக்க கூட முடியவில்லை. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. குண்டர்களின் ராஜ்ஜியம்தான் குஜராத்தில் நடக்கிறது.
 
    மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் குண்டர்கள் இரவு நேரங்களில் சுதந்திரமாக பைக்குகளில் சுற்றுவதை காணலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி தனது சொந்த தொகுதிக்கு வந்ததில்லை. அவருக்கு அவரது சொந்த காரியங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளது. எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடியும், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குர்தாவையும் மோடி அணிகிறார்.
 
    தனிப்பட்ட காரியங்களுக்காக பொதுமக்களின் பணத்தை வீணடிக்கிறார். ஒருமுறை அணிந்த ஆடையை மீண்டும் அணியாத மோடிதான் தான் ஒரு சாதாரண மனிதன் என்று கூறுகிறார். ஏன் மோடிக்கு எதிராக போட்டியிடுகின்றீர்கள்? என்ற கேள்விக்கு சுவேதா பட் அளித்த பதில்: வெறும் ஒரு இல்லத்தரசியான எனக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என்ற மோகம் ஒன்றும் இல்லை.
 
    ஆனால், மோடி விரும்பாத சத்தியத்தின் பக்கம் எனது கணவர் நின்றதற்காக எனது குடும்பம் துயரங்களை அனுபவிக்கும் சூழல் உருவானது. கடந்த 3 ஆண்டுகளாக சஞ்சீவ், அரசுக்கு எதிராக போராடி வருகிறார். ஆகையால்தான் மோடியும், அவரது ஆட்களும் எனது குடும்பத்தை வேட்டையாடுகின்றார்கள். அடிக்கடி, மோடி 40 அல்லது 50 பேரைக் கொண்ட கும்பலை எனது வீட்டை சோதனையிட அனுப்புவார்.
 
    இது ஐந்து அல்லது ஆறு மணிநேரங்கள் நீடிக்கும். எனது கணவரின் தாயாரின் வீட்டில் கூட அவர்கள் புகுந்துள்ளனர். எங்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. எங்களது குடும்பம் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளது. மோடியின் நடவடிக்கைகள் சட்டத்தின் அனைத்து வரம்புகளையும் மீறியதாகும். இதனை நான் உணர்ந்த பொழுது எதிர்த்துப் போராட தீர்மானித்தேன்.
 
    தேர்தலில் சந்தித்த நெருக்கடிகளை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுவேதா பட் கூறியது: நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் போது எதுவுமே கிடைக்காது. மேட், டெண்ட், மைக், நாற்காலி போன்ற பொருட்களை வாங்க மார்க்கெட் சென்றால் எதுவுமே இருப்பு இல்லை என்று வியாபாரிகள் கூறுவார்கள்.
 
    தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான பொருட்களை எனக்கு விற்பனை செய்ய எந்த வியாபாரிக்கும் தைரியம் இல்லை. கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மோடிக்காக அனைத்து அரசு இயந்திரங்களும் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்று சுவேதா பட் குற்றம் சாட்டினார்.
 
     வெற்றியைக் குறித்து கேள்வி எழுப்பியபோது சுவேதா பட் அளித்த பதில்: என்னை ஆதரிக்கும் ஏராளமானோரை நான் சந்தித்தேன். 24 ஆண்டுகள் குடும்பத்தலைவியாக இருந்த நான் வெளியே இறங்கி மோடிக்கு எதிராக போராட முடியுமென்றால், மக்களாலும் பயமில்லாமல் சத்தியத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும். எனக்கு பெரிய விருப்பங்கள் எதுவும் இல்லை. ஆனால், சத்தியம் வெற்றிப் பெறவேண்டும். மோடி தெய்வத்தின் அவதாரம் ஒன்றுமில்லை. அவர் ஒரு அரசியல்வாதி. ஆகையால் அவரை அரசியல்ரீதியாக மட்டுமே தகர்க்க முடியும். அதற்காகவே எனது போராட்டம் என்று சுவேதா பட் கூறினார். துவக்கத்தில் சுவேதா பட் சுயேட்சையாக போட்டியிடவே விரும்பியுள்ளார்.
 
    ஆனால், காங்கிரஸ் கட்சி சீட் வழங்க வாக்குறுதி அளித்த போது, பிரச்சாரம் மற்றும் இதர வாய்ப்புகளுக்காக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நன்றி தூது

இந்த டிசம்பரில் இன்னுமொரு அநியாயம் : "கௌசியா பள்ளிவாசல்" தரைமட்டம்!

     DEC13, டெல்லியின் "மெஹர் வலி" பகுதியில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவந்த "கௌசியா பள்ளிவாசல்" நேற்று (12/12) இடித்து தள்ளப்பட்டுள்ளது.

    DDA (Delhi Development Authority) நிர்வாகத்தினர், ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம், மேற்கண்ட பள்ளிவாசல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட வீடுகளை தரைமட்டமாக்கினர்.
 
     சர்வே எண் "217" ல் அமைந்துள்ள 3.2 ஏக்கர் இடம் முழுவதும், வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது.
 
     முஸ்லிம் கப்ருஸ்தான் - தர்கா, என "வக்ப்" கெசட்டில் பதிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், இந்த பள்ளிவாசலின் இமாமையும் வக்ப் வாரியமே நியமித்து, மவுலானா ஷாகிர் என்பவருக்கு மாதா மாதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    நேற்றைய "ஸுபுஹ்" தொழுகையை மவுலானா ஹிஷ்மத் என்பவர் தொழவைத்துள்ளார்.
    
    நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் படையுடன் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிவாசலை இடிக்க வந்தபோது, 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டு போராடியும் பலனில்லை.
    போலீஸ் "பலப்பிரயோகம்" செய்து அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்வேறு காவல் நிலையங்களில் வைத்திருந்து விட்டு, மாலையில் விடுவித்துள்ளனர்.
 
    டெல்லியில், தற்போது "கடுங்குளிர் காலம்" என்பதையும் பொருட்படுத்தாமல் ஏழை மக்களின் வீடுகளையும் இடித்து தள்ளியுள்ளது,DDA. இதுகுறித்து டெல்லி வக்ப் வாரியத்தலைவர், சௌத்ரி மதீன் அஹ்மதிடம் கேட்டபோது, இந்த இடம் வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது தான்.

    கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தை டெல்லி மாநகராட்சி (DDA) கையகப்படுத்தி "அறிவிப்பாணை" வெளியிட்ட சமயத்தில், அது குறித்து யாரும் ஆட்சேபிக்காத நிலையில், இந்த நிலம் மாநகராட்சி சொத்து பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
    ஒரு "நிலத்துண்டு" மட்டும் பள்ளிவாசலாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள "காவி பயங்கரவாதி" குறித்த திடுக்கிடும் தகவல்!

    DEC16, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்த வழக்கில், ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த "தலைமறைவு தீவிரவாதி" ராஜேந்தர் சௌத்ரி, உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
    68 பேர் உயிரிழந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த வழக்கில், ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ராஜேந்தர் சௌத்ரி, நேற்று முன்தினம் (15/12) மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள நாக்தா என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டான்.
 
    தனது தலைக்கு பரிசு அறிவித்து போலீஸ் தேடிவருவதை அறிந்த "ராஜேந்தர் சௌத்ரி" தனது பெயரை "சமந்தர் சிங்" என்று மாற்றிக்கொண்டான்.
 
     முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா, தேவேந்தர் சிங் ஆகிய மூவர் ஜெயிலில் உள்ள நிலையில், ராம்சந்தர் என்ற "ராம்ஜி" மற்றும் "சந்தீப் டாங்கே" ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

     தற்போது, ராஜேந்தர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த அதே குழு தான், "மக்கா மசூதியிலும்" குண்டு வைத்ததாக கூறுகிறான்.

     2007 பிப்ரவரி 18,ல் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்த இவர்கள், 2007 மே மாதம் 18 ந்தேதி, மக்கா மசூதியில் குண்டு வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ராஜேந்தர் என்ற சமந்தர் சிங்கிடம் நடத்தப்பட்டுவரும் விசாரணையில், மேலும் பல முக்கியத்தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர், NIA (National Investigation Agency) அதிகாரிகள்.

மத்திய பிரதேச அரசு "காவி" பயங்கரவாதிகளுக்கு "புகலிடம்" தருகிறது : திக் விஜய் சிங் குற்றச்சாட்டு!

    DEC17, மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு "குண்டுவெடிப்பு" குற்றவாளிகளை பாதுகாக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான, திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
 
    குற்றவாளிகளை மறைத்து வைப்பதும் - பாதுகாப்பு வழங்குவதும், சட்டப்படி குற்றம் என்றார் அவர். நேற்று முன்தினம் இரவு, உஜ்ஜைனை அடுத்த "நாக்தா"வில் வைத்து "காவி பயங்கரவாதி" ராஜேந்தர் சௌத்ரி கைது செய்யப்பட்டுள்ளதால், பா.ஜ.க. அரசு அவர்களை பாதுகாப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்கிறார், திக்விஜய் சிங்.
 
    ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த குற்றவாளியை மத்திய போலீஸ் படையினரால் பிடிக்க முடியும்போது, மாநில அரசால் ஏன் அவர்களை கைது செய்ய முடியவில்லை? எனக்கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங், குற்றவாளிகளை பாதுகாத்த மாநில போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.
 
    மேலும், தேடப்படும் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ராம்சந்தர் என்ற "ராம்ஜி" மற்றும் "சந்தீப் டாங்கே" ஆகியோரும், மத்திய பிரதேசத்தில் தான் ஒளிந்துக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் எங்கு உள்ளனர் என்ற முழு விவரங்களும், மத்திய பிரதேச போலீசுக்கு நன்கு தெரியும் என்று அடித்துக்கூறும் திக் விஜய் சிங், பயங்கரவாதிகளுக்கு மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, ஆதரவளிப்பதாகவும் கூறுகிறார்.
    இந்திய தேசத்தில், ஒரு புறம் "காவி பயங்கரவாதம்" மறுபுறம் முஸ்லிம்களை மூர்ச்சையாக்கும் "அரச பயங்கரவாதம்" இவர்களுக்கு மத்தியில் கையாலாகாத காங்கிரஸ். விரக்தியின் விளிம்பில் நிற்கும் முஸ்லிம்கள், வீடுகளில் முடங்கி விடப்போகிறார்களா? வீறுகொண்டு எழுந்து நாட்டை மீட்கப்போகிறார்களா? இது தான் நாளைய உலகம் காணவிருக்கும் சரித்திரம்.

டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து


மாயன் காலண்டரில் 21,டிசம்பர்,2012 அன்று உலகம் அழியும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் உலக தலைவர்கள் இன்றுமுதல் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து உலகம் அமைதியாக அழிவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால? அடிப்படையில் முடுக்கிவிட்டு, அறிக்கை விட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை. உண்மையாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒபாமா: அமெரிக்காவின் அனைத்து அணுகுண்டுகளையும் செயலிழக்கச்செய்து விட்டோம்.ஈரானுடனான 30 ஆண்டு பகைமை முடிவுக்கு வந்தது.இந்தியாவில் சில்லரை வணிகத்தினால் கிடைக்கும் லாபம் ஏழைகளின் கல்விக்காகச் செலவிடப்படும். குவாண்டனாமோ கைதிகள் விடுதலை செய்யப்பட்டு,  இழப்பீட்டுடன் அமெரிக்க குடியுரிமையும் வழங்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் அதிபர் சகோதரர் அஹமதி நிஜாத்துக்குப் பரிந்துரைக்கப்பகிறது.

நேதன்யஹு: பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் இழைத்த கொடுமைகளுக்குப் பகரமாக இஸ்ரேல் கலைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பலஸ்தீனமாகச் செயல்படும். டெல் அவிவ் மக்களை காஸாவுக்கும் காஸாவிலிருப்பவர்களை டெல் அவிவுக்கும் பரஸ்பரம் இடம்பெயரச்செய்து ஹமாஸுடன் இணைந்து மத்திய கிழக்கில் முழு அமைதிக்குப் பாடுபடுவோம்.

சீன அதிபர் ஹூ ஜிண்டோ: அனைத்து பொருட்களின் காப்புரிமை மீறல்களும் ரத்துசெய்யப்பட்டு இதுவரை காப்பியடிக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒன்று வாங்கினால் அதேபொருள் மூன்று இலவசம். அருணாசலப்பிரதேசத்தில் ஊடுறுவியுள்ள சீன ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டு, சுதந்திர திபேத்தை புனர் நிர்மானம் செய்ய அனுப்பப்படுவார்கள். MADE IN CHINA என்பதை COPIED IN CHINA என்று மாற்றுவோம்.

மன்மோகன் சிங்: அமெரிக்கா திருந்திவிட்டதால் இனிமேல் அதனிடமிருந்து மறைமுக நெருக்குதல் இருக்காது என்பதால் சுதந்திரமாகச் செயல்படுவோம். மீதமுள்ள நாட்களில் பிரதமர் நாட்காலியில் முறையே முலாயம் சிங், சரத் பவார், லாலு பிரசாத், நரேந்திர மோடி, ஜெயலலிதா, கனிமொழி, அன்புமணி, ராகுல்காந்தி ஆகியோருக்கு தலா ஒருநாள் அமர வாய்ப்பளிக்கப்படும்.

கர்நாடக முதல்வர் ஷெட்டர்: காவிரி நீர் தடையின்றி தமிழகத்திற்கு அனுமதிக்கப்படும். காவிரி நீர் சம்பந்தப்பட்ட வழக்குகள் இருக்காது என்பதால் அனைத்து நீதிபதிகளுக்கும் பெங்களூருவில் ஓய்வு இல்லம் வழங்கப்படும். எடியூரப்பாவிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்து ஊழலற்ற ஆட்சி நடக்கும்.

கருணாநிதி: திராவிட கட்சிகள் அனைத்தும் கலைக்கப்பட்டதை வரவேற்கிறேன். தமிழினத்தங்கச்செல்வி ஜெயலலிதா அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் தலைநகராக மதுரை மாற்றப்பட்டு ஸ்டாலினும் அழகிரியும் ஒருநாள்விட்டு ஒருநாள் முதல்வர்களாக இருப்பார்கள். வைகோவுக்கு ஈழத்துக்கான இந்திய தூதர் பதவி வழங்க பரிந்துரைக்கப்படும். சிறப்பு 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் காஞ்சி பெரியவருடன் தம்பி வீரமணியும் கலந்து கொண்டு சிறப்பிப்பார். ஜெயா,சன்,கலைஞர் தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டு 'ஜெகசன்' என்ற பெயரில் தரமான நிகழ்ச்சிகள் வழங்கப்படும். கே டிவியில் உலகம் அழிவு தின சிறப்பு நிகழ்சிகள் அனைத்தையும்  மாயா அண்ட் மாயாகாலண்டர் கம்பெனி வழங்கவுள்ளது.

ஜெயலலிதா : அன்பு சகோதரர் விஜயகாந்தின் கோரிக்கையை ஏற்று மின்வெட்டு ரத்து செய்யப்படுகிறது. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு காலில் விழுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அங்கு இலவச மருந்துகள் வழங்கப்படும்.

ராமதாஸ்: தம்பி திருமாவளவனின் காதல் திருமணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.  வன்னியர் தலித் நல்லுறவு ஏற்பட காதல் திருமணங்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். ஒருநாள் பிரதமர் அன்புமணிக்கு ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டுவிழா எடுக்கப்படும். பாண்டிச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள காடுவெட்டி குருவின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்வர்.

விஜய டி.ராஜேந்தர்: மினி சூப்பர் ஸ்டார் குறளரசன் மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இணைந்து தஞ்சைசினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் "காதல் கத்தரிக்கா" படத்தை உலகம் முழுவதும் மட்டுமின்றி நிலவிலும் திரையிடப்படும். லதிமுக தொடங்கியதுமுதல் உறுப்பினராக இருக்கும் 30 பேருக்கும் 'போடாபோடி' படத்தின் டிவிடி இலவசமாக வழங்கப்படும்.

கமலஹாசன் : பகுத்தறிவு பேசுபவன் என்பதால் விஸ்வரூபத்தை 23-12-2012 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்பதால் தேசிய லீக் சகோதரர்கள் வழங்கவுள்ள 10,000 அண்டா பிரியாணியை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு சகோதரர்களுடனும் இணைந்து சாப்பிடுவேன்.

இராம.கோபாலன்: இஸ்லாமியர்களுடனான வெறுப்புணர்வு நீங்கும்வகையில் இந்து முன்னணியை அல்-இந்து முன்னணி என்று பெயர் மாற்றுவோம். வினாயகர் ஊர்வலத்தில் சிலைகளுக்குப் பதிலாக சட்டையில் பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலமாகச் செல்வோம். பாபர் மசூதியை விரைந்து கட்டக்கோரி இஸ்லாமிய அமைப்புகளுடன் சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.

அமைச்சர் நாராயணசாமி : இன்னும் ஒரு வாரத்தில் உலகம் அழியவிருப்பதால் இன்னும் ஆறு நாட்களில் துவங்கவிருந்த  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் சகோதரர் தேசபக்தர் போராளி உதயகுமார அவர்களால் நிறுத்தி வைக்கப்படுகிறது. இத்தனை வருடங்கல்போராடிய தியாகிகளுக்கு அரசின் சார்பில் இழப்பீடுகளுடன் கூடிய தியாகிகள் பட்டம் வழங்கும் விழா விரைவில் நடக்கவுள்ளது

மின்சாரத்துறை :   21.12.2012 அன்று 18 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

- அதிரைக்காரன்


நன்றி: இந்நேரம்.காம்

Friday, December 14, 2012

அப்சல் குருவை தூக்கிலிடக் கூடாது! – மத்திய அமைச்சர்

Don't hang Afzal Guru- Beni Prasad Verma
டெல்லி:நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பெரும்பான்மை மனசாட்சிபடி தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட  அப்சல் குருவை தூக்கில் போடக்கூடாது  என்று மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கூறியுள்ளார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு எதிராக எவ்வித ஆதாரம் இல்லாதபோதும் பெரும்பான்மை மனசாட்சிபடி  தூக்கு தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதலின்  11 வது நினைவு நாளில் கொல்லப்பட்ட 9 பாதுகாப்பு வீரர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில்  நேற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை அளிக்கக் கூடாது என்றும், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதா, மக்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பியது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உறுப்பினர்களின் அமளியால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது