Thursday, July 12, 2012

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரி நாடுதழுவிய பிரச்சாரம்


campaign for the release innocent detainees
புதுடெல்லி:எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட‌ வேண்டுமென்பதை வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ள இருக்கின்றது. கடந்த ஜூன் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உற்று நோக்கும் போது இந்தியாவில் பல சிறைச்சாலைகளில் பல முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவே இருந்து
வருகின்றனர். மேலும் அவர்களது வழக்குகள் தொடர்பான் விசாரணைகள் காலம் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் முஸ்லிம்களின் சதவிகிதத்தை விட அம்மாநில சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை ஒரு கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதிருந்தும் யு.ஏ.பி.ஏ விதியை காரணம் காட்டி இன்றுவரை அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட அப்பாவி இளைஞர்கள் சிறையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சமூக ஆர்வலர்களும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதற்காக முன்வர வேண்டும்.
நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை நடத்த இருக்கின்றது. துண்டு பிரசுரங்கள் வழங்குவது மூலமாகவும், பொதுக்கூட்டங்கள் மற்றும் இன்ன பிற நிகழ்ச்சிகள் வாயிலாகவும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் இருந்து துவங்க இருக்கும் இப்பிரச்சாரம் செப்டம்பர் 15 வரை நடைபெறும். சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் அப்பாவி இளைஞர்களுக்கு தேவையான அளவு சட்ட உதவிகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும் எனவும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
thanks to asiananban

பலஸ்தீன் சிறுவன்மீது காரை ஏற்றிய யூத ஆக்கிரமிப்பாளர் !




அல் ஹலீல்: கடந்த செவ்வாய்க்கிழமை (10/07/2012) பலஸ்தீன் சிறுவன் மீது தனது காரை ஏற்றிப் படுகாயப்படுத்திவிட்டு யூத ஆக்கிரமிப்பாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
அல் ஹலீல் பிராந்தியத்தின் சூஸியா பகுதியில் இக்கொடுமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமுற்ற 13 வயதான பலஸ்தீன் சிறுவன் முஹம்மத் மஹாரிக்கின் ஒரு கால் முறிந்துள்ள நிலையில் அருகில் உள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பலஸ்தீன் சிறுவன் மீது காரை ஏற்றிய யூத ஆக்கிரமிப்பாளர், சிறுவனின் கதறலையோ சுற்றியிருந்த மக்களின் கூச்சலையோ பொருட்படுத்தவில்லை என்றும், தனது காரை நிறுத்தாமல் விரைவாக ஓட்டிச் சென்றுவிட்டார் என்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை தற்போது ஓரளவு தேறிவருவதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
thanks to asiananban

எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்திற்கு அல்ல! இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு! – ஈரான் !


Jaliliடெஹ்ரான்:எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்தை கண்டு அல்ல என்றும் இஸ்லாத்தின் வளர்ச்சியே அவர்களின் அச்சத்திற்கு காரணம் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஸஈத் ஜலீலி கூறியுள்ளார்.மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்திய இஸ்லாமிய எழுச்சிக்கு துனீசியாவின் புரட்சியே வழி காட்டியது. இஸ்லாமிய நம்பிக்கையின்
அடிப்படையில் முஸ்லிம் சமூகம் முன்னேறுமானால் சுதந்திர ஃபலஸ்தீன், அல்குத்ஸ் உள்ளிட்ட தங்களது அனைத்து லட்சியங்களையும் அவர்களால் அடைய முடியும் என்று அவர் கூறினார்.
துனீசியன் ஆளுங்கட்சியான அந்நஹ்ழாவின் பாராளுமன்ற ப்ளாக் தலைவர் அல் ஸஹ்பி ஆதிக்குடன் நடத்திய சந்திப்பில் ஜலீலி இதனை தெரிவித்தார்.
இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் நடத்தும் மனித உரிமை மீறல்களும், ஆக்கிரமிப்புகளும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்பின் மூலம் இஸ்லாமிய நாடுகளால் முறியடிக்க இயலும் என்பதை அண்மையில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நிரூபித்துள்ளதாக ஜலீலி கூறினார்.
thanks to asiananban

உறங்கும் அதிரை மின்வாரியம்! நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...

கடந்த மூன்று தினங்களுக்கு முன் அதிரையின் சில பகுதிகளில் உயர்மின்னழுத்தம் வந்துள்ளது. குறிப்பாக  செக்கடி மேட்டில் உள்ள டிரான்ஸ் பார்மரில் இணைப்பு பெற்ற பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் செக்கடிப்பள்ளியில் வந்த உயர் மின்னழுத்தம் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனால், அவ்வீடுகளில் இருந்த மின் விளக்கு, தண்ணீர் மோட்டார்,குளிர்சாதப்பெட்டி இன்னும் இதுபோன்று மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் அதிக அளவில் சேதம் அடைந்தது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருகும் என்கிறார் அதிரை சேர்மன் எஸ்.ஹெ.அஸ்லம்.


பாதிக்கப்பட்ட மக்களும் சேர்மனும்  பலமுறை அதிரை மின்சாரவாரியத்தில் புகார் அளித்தும். இதுவரை உருப்படியான நடவடிக்கை இல்லை;ஆள்ந்த  உறக்கத்தில் மின்சாரவாரியம் உள்ளது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.


இந்த உறக்கத்தை தட்டியெழுப்ப அதிரை மின்சார வாரியம் செல்ல அதிரை மக்களால் முடிவு செய்யப்படுள்ளது.


கிளம்பும் இடம்: செக்கடி பள்ளிவாசல் வளாகம்
thanks to adiraipost

அதிரை நகர பாப்புலர் ஃப்ரண்ட்-சமூக மேம்பாடு துறை சார்பாக ஐந்து நாள் கல்வி உதவி பெறுவதற்கான முகாம் இன்றுடன் நிறைவாக முடிந்தது .



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கடந்த
(07-07-2012) சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதர்க்கான விண்ணப்ப படிவங்கள் புர்த்தி செய்வதற்க்கான முகாம் துவங்கியது. இம்முகாம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பெற்றது. இம்முகாமில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது.(xerox,printer,genrator,laptops and others).





 இதன் மூலம் ஆயிரத்திற்க்கும் மேரற்பட்ட மக்கள் பயனனடைந்தனர். மேலும் இந்த முகாம் பொது மக்கள் மற்றும் ஆசியர்களின் வேண்டுகோலுக்கு இனங்க (10/7/2012) அன்றும் கடைசி நாளாக அறிவிக்கபட்டு மக்களின் வருகை அதிகமாக இருந்ததால் இரவு 10.30 மனிவரை முகாம் நடைபெற்றது. இன்றுடன் முகாம் முடிவடைந்ததாக பாப்புலர் ஃப்ரண்டின்  நகர செயற்குழு அறிவித்தது.


ஆனால் அடுத்த நாளாகிய  (11-07-2012) இன்றும் மக்களின் வருகை தொடர்ந்ததால் மக்களின் நலன் கருதி முகாம்     . ஐந்தாவது நாளாக தொடர்ந்தது. ஐந்து நாட்களாக நடந்த இம்முகாமில் சுமார் இரண்டாயிரதிற்க்கும் மேற்ப்பட்ட மக்கள் பயனடைந்தனர். இன்றுடன் இம்முகாம் முடிவடைந்தது என  பாப்புலர் ஃப்ரண்டின்  நகர செயற்குழு அறிவித்துள்ளது...... . 



ஆனால் மேலும் அதிகமான மக்கள் படிவம் பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் மக்கள் நலன் கருதி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதலுக்கு மட்டும் செக்கடி மேட்டில் உள்ள sdpi அலுவலகத்தை தொடர்புகொள்ள நிர்வாகிகள் அனுமதித்துள்ளனர். தொடர்புக்கு 9842716214, 9629566235

Tuesday, July 10, 2012

PFI சார்பாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை புர்த்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது!




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்களை புர்த்தி செய்து கொடுத்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக நெல்லை மேற்கு மாவட்டம் முழுவதும் நேற்று முஸ்லிம்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்களை புர்த்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக 07.07.2012ஞாயிற்றுக்கிழமை) அன்று கடையநல்ல்லுரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்திலும்,அல்லிமூப்பன் தெருவில் உள்ள பிலால் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்தும் காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்பு கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் அதை புதுப்பிக்குவர்க்கும், இதுவரை கல்வி உதவித் தொகை வாங்காமல் இருப்பவர்களும் திரளாக வந்து விண்ணப்ப்ப்படிவங்களை புர்த்தி செய்து அப்படிவங்களை வாங்கிச்சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம B.A,BL மேற்பார்வையிட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் யாரிடமும் முகம் சுளிக்காமல் மிகச் சிறப்பாக தங்களது பணிகளை செய்தார்கள்.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்கள் 700க்கும் மேலான படிவங்களை புர்த்தி செய்து கொடுத்தார்கள்.

Monday, July 9, 2012

4வது நாளாக நாளையும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளை கடந்த மூன்று நாட்களாக செக்கடி மேட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமை நடத்தி வருகிறது. இன்றுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டது.


மூன்று நாட்களும் ஆண்களும் பெண்களும் கட்டுகடங்காத கூட்டமாக வந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேவைகளை பெற்றனர்.






பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்களும் பொருமையாகவும் நிதானமாகவும் அதே நேரத்தில் துரிதமாகவும் சேவைகளை செய்தனர். என்றபோதும், இன்னும் அதிரையின் பலப்பகுதியிலிருந்து மக்கள் வரவேண்டியுள்ளது. 


என்பதை கருத்தில் கொண்டு, 4வது நாளாக நாளையும்(10/07/12 செவ்வாய்கிழமை) கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் நீட்டிகப்பட்டு நடைபெற இருக்கிறது.என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகரத் தலைவர் சலீம் அதிரை போஸ்ட்டிடம் தெரிவித்தார்.


கல்வி உதவித்தொகை பெறத் தகுதிகள்
1. மாணவ /மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  
2. மாணவ /மாணவியரின் முந்தைய மதிப்பெண் 50% சதவிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில்  இரண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவைகள்:
1. முகவரிச் சான்றிதழ் நகல் (ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை)
2. மாணவ /மாணவியரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு 
3. சாதிச் சான்றிதழ் நகல்
4. வருமானவரிச் சான்று அல்லது ரூ.10 மதிப்புள்ள நிதிமன்ற சாரா முத்திரை தாளில்  மாணவ /மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறுதி பிரமாண பத்திரம்.
5. மாணவ /மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி சேமிப்பு  கணக்கின் நகல்.
தொடர்புக்கு: 9842716214,9042455496. 
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
SDPI  அலுவலகம் அருகில்,
செக்கடிமேடு, நடுத்தெரு 
அதிரை 
thanks to adirapost for news .

Saturday, July 7, 2012

பள்ளி மாணவிகளை ஏமாற்றும் சில இளைஞர்கள்!




காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.]
நள்ளிரவு வரை படிப்பு, மீண்டும் அதிகாலையில் எழுந்து படிப்பு, அவசர கதியில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் அவலநிலையில் தான் இன்றைய மாணவ செல்வங்கள் உள்ளனர்.
நம்மை விட உயர்ந்த பதவிக்கு வரவேண்டும், நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அனைத்து பெற்றோரையும் தற்போது ஆட்டி படைக்கிறது. பெற்றோரின் வேகத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா?
இதனால் மாணவ- மாணவிகள் எப்போதும் டென்ஷன், பரபரப்பு என ஒரு விதபதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். அவர்கள் நாளைக்கு என்ன படிக்க வேண்டும், வீட்டில் என்ன சொல்வார்கள் என்று பயந்து கொண்டே அடுத்த அடுத்த பிரச்சினையை நினைத்து கொண்டே ஒரு வித அச்சத்தில் உறைந்து போய் விடுகின்றனர்.
விடுமுறை நாட்கள் என்றாலும் விடாதகறுப்பு போல சிறப்பு வகுப்புகள், டியூஷன் என்று பாடாய் படும் இவர்களை குறிவைத்து தற்போது சேலத்தில் வாலிபபட்டாளம் ஆதரவு அலை என்ற பெயரில் காதல் ரசத்தை சொட்ட விடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு தங்களது மகளை கொண்டு வந்து விடும் பெற்றோர்கள் பஸ் வந்ததும் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு அத்தோடு சென்று விடுகிறார்கள். அப்போது பஸ்சில் இருக்கும் கூட்டத்தின் போது புத்தக பை மூட்டைகளை தூக்கி கொண்டு பயணிக்கும் சில மாணவிகளுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களின் புத்தகபையை வாங்கி கொள்கிறார்கள். தினமும் இது தொடரவே நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு மொபைல் எண்கள் மாற்றி கொள்கிறார்கள். பின்னர் இரவில் மெசேஜ், சாட்டிங் என்று இவர்களின் பழக்கம் விரிவடைந்து முடிவில் காதல் என்ற குண்டை தூக்கி போடுகிறார்கள்.
பொறுப்பை உணர்ந்த சில மாணவிகள் இதை வேண்டாம் என்கிறார்கள். ஆனால் எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, நிம்மதியே இல்லை என்று இருக்கும் மாணவிகள் இந்த காதல் வலையில் எளிதில் சிக்கி கொள்கிறார்கள். விளைவு அந்த மாணவி மூலம் மேலும் பல மாணவிகள் பழக்கம் ஆகிறார்கள்.
அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி கொண்டு அவர்களும் மெசேஜ் அனுப்பி கொள்கிறார்கள். காதலில் விழுந்த மாணவி படிப்பா…? பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டு காதலனின் போலியான ஆசைவார்த்தைக்கு தங்களை பலிகொடுக்கிறார்கள்.
காலையில் பெற்றோர் வந்து பஸ் அனுப்பி வைக்க வந்தால் மாணவிகள் சிலர் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், நான் பஸ் ஏறி செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றதும் அருகில் இருக்கும் 1 ரூபாய் நாணயம் போட்டு காதலனிடம் நீண்ட நேரம் பேசுகிறார்கள். இதே போல் மாலை நேரத்திலும் பேசுகிறார்கள்.
உதாரணமாக சேலம், பழைய பஸ்நிலையத்தில் தினமும் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. காலையில் அவதிஅவதியாக பள்ளிக்கு வரும் மாணவிகள் கை நிறைய 1 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து காதலர்களிடம் பேசிசெல்வதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.
பின்னர் படிபடியாக காதல் மோகத்தில் மாணவிகள் வகுப்பை கட்அடித்து விட்டு காதலனுடன் பைக்கில் முகத்தில் ஷாலை மறைத்துக் கொண்டு ஏற்காடு, மற்றும் நகரில் உள்ள கோவில்களில் ஊர் சுற்றுகிறார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஏற்காடுக்கு அழைத்து சென்று வாலிபர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களுக்கு குழந்தைகள் உருவாகாமல் தடுக்க அதற்கான மாத்திரைகளையும் கொடுப் பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படிப்பு டென்சனில் இருந்து விடு பட காதலித்து காமத்தில் விழுந்த பள்ளி மாணவிகள் ஏராளமான பேர் உள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் சில வக்ககிர புத்தி கொண்ட வாலிபர்கள் அதை தங்களது செல்போனில் படம் பிடித்து, அதை தங்கள் நண்பர்களிடம் காட்டி அவர்களையும், அந்த பெண்ணுடன் சேர வைக்கும் ஒரு மோசமான சீரழிவும் தற்போது அரங்கேறி வருகிறது. இதைப்பற்றி வெளியில் சொன்னால் அவமானம் என்றும் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்றும் பயந்து பெண்கள் மிரட்சியில் உள்ளனர். இதனால் பள்ளி செல்லும் வயதிலே மாணவிகள் சோர்வுடன், காணப்படுகிறார்கள்.
படிப்பு சுமையே மாணவிகளை இந்த பாதைக்கு அழைத்து செல்கிறது என்று சொல்ல முடியாது. காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கி தற்போது காமத்தில் மூழ்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.
அது போல் பள்ளி மாணவிகளும் நம் பெற்றோர் நம்பிக்கையின் பேரில் நம்மை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்களே, அவர்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்ககூடாது என்று செயல்படவேண்டும் . இவ்வாறு பெற்றோர், மற்றும் மாணவிகள் செயல்பட்டால் காதல் என்ற வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.


thanks to facebook நண்பர்கள் .