Saturday, April 2, 2011

சாதிக் பாட்சா மரணம் குறித்து சிபிஐ விசாரணை

புதுடெல்லி : சாதிக் பாட்சா மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ தயாராக இருப்பதாகவும், அவருடைய மரணத்தை சிபிஐ விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா, மார்ச் 16ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையை சென்னை போலீசார் முடித்துவிட்டனர்.

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்திய மக்கள் தொகை; சனத்தொகைக் கணக்கெடுப்பு விபரம் வெளியீடு! ஆண்கள்-62 கோடி பெண்கள்-58 கோடி

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த தடவை 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது. இந்த தடவை கடந்த ஆண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 25 லட்சம் பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 5 ஆயிரம் நகரம், 6 லட்சத்து 30 ஆயிரம் கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் சந்திர மவுலி டெல்லியில் புதிய மக்கள் தொகை பட்டியலை வெளியிட்டார்.

அதில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம்.

பெண்களின் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது மொத்த மக்கள் தொகை 102 கோடி ஆக இருந்தது. அதில் இருந்து இப்போது 18 கோடியே 10 லட்சம் அதிகரித்து உள்ளது. அதாவது 10 ஆண்டில் 17.64 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.

அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஜப்பான் ஆகிய 6 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட இந்திய மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

அங்கு மொத்த மக்கள் தொகை 19 கோடியே 90 லட்சம். குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் லட்சத்தீவு. அங்கு 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர். உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய இரு மாநிலங்களை சேர்த்தால் அமெரிக்கா மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.

இந்திய மக்கள் தொகை உலகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதமாக இருக்கிறது. குழந்தைகள் எண்ணிக் கையை கணக்கிடும் போது 1000 ஆண்களுக்கு 914 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்தியாவிலேயே வட கிழக்கு டெல்லியில் தான் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 37 ஆயிரத்து 346 பேர் வசிக் கின்றனர். நாட்டிலேயே குறைந்த மக்கள் அடர்த்தி அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது.

அங்குள்ள திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒருவர் மட்டும் வசிக்கிறார். 74 சதவீதம் பேர் கல்வி அறிவு உள்ளவர்களாக உள்ளனர். 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் கல்வி அறிவு 64.83 சதவீதமாக இருந்தது.

இப்போது 9.21 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பை முந்தைய 10 ஆண்டோடு ஒப்பிடும் போது மக்கள் தொகை அதிகரிப்பு 21.15 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது அதிகரிப்பு வீதம் 17.64 சத வீதமாக உள்ளது. இது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்து இருப்பதை காட்டுகிறது.

சீனாவில் இப்படியும் ஓர் கொடூரம்: (மனிதர்கள் பார்க்க தடை!)


வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உங்கள் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதே நேரம் இப்படியும் சில மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருப்பதும் அவசியம் ஆகையால் ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை அப்படியே நாம் பிரசுரிக்கிறோம்.

பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்களே இவர்கள். ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்களோ தெரியாது அவர்கள். பிறந்த பச்சைக்குழந்தையை விலை கூடிய பல்வேறு மூலிகைகள் கொண்டு அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த நரமாமிச உண்ணிகளை உங்கள் உணர்வுகளை அடக்கி வைத்துவிட்டு நீங்களும் பாருங்கள்…!!








கிட்லரின் முகத் தோற்றத்தில் வீட்டின்முகப்பு

பிரித்தானியாவின் வோல்ஸ் நகரத்தில்புதிதாக அமைக்கப்பட்ட வீடு ஒன்று இன்றைய இணைய உலகில் திடீர் பிரபலம் பெற்று விட்ட்து.


காரணம் இவ்வீட்டின் முகப்புத்தோற்றம் அடல்ப் ஹிட்லரின் முகத்தைப் போல காட்சி தருகின்றது.

இவ்வீட்டின் முகப்புத் தோற்றம்,ஹிட்லரின் முகம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்.

Friday, April 1, 2011

குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுவே காரணம் : விக்டர் சாய் இருதய ஆராய்ச்சி நிறுவனம்



மெல்போர்ன் : தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் உள்ள விக்டர் சாய் இருதய ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 
அப்போது, தாயின் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருதயம் உருவாகும் போது ஏற்படும் சில மரபணு கோளாறே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இது நன்கு வளர்ச்சி அடையாத மரபணு அல்லது அதிரடி மாற்றங்களால் தான் புதுவிதமான இருதய நோய்கள் ஏற்படுகின்றன.
 
இந்த நோய்கள் கருவில் வளரும் குழந்தையின் இருதயம் உருவாகும்போது ஏற்படுவது இல்லை. மாறாக அவை இருதயத்தின் வெளிப்புறத்தில் ஏற்படுகிறது. இது குறித்த விரிவான ஆய்வை நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த ஆய்வுக்காக எலிகள் பயன்படுத்தப்பட்டன. அதில் “சிடெடு 2” என்ற மரபணு வினால்தான் இருதய நோய் ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த மரபணு இல்லாத குழந்தைக்கு எந்தவித இருதய நோயும் ஏற்படுவதில்லை.
 
இதன் மூலம் இருதய நோய் ஏற்பட மரபணுவே காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு லண்டனில் 5 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்!

லண்டன் : தெற்கு லண்டனில் 5 வயதுச் சிறுமியை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்ற நபரைத் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் 35 வயதான ஒரு நபரும் சுடப்பட்டுள்ளார். இது தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம், வேறு யாருக்கோ வைத்த குறி இவர்களைத் தாக்கியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இதனையடுத்து மர்ம நபரை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சுனாமி காரணமாக எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியில் பாதிப்பு



ஜப்பானில் கடந்த 11 ம் தேதி ஏற்பட்ட சுனாமி காரணமாக எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள், வீடியோ கேமராக்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகர விற்பனையாளர் பிலிப்பி டாவின் தெரிவித்துள்ளார். வீடியோ கேம்ஸ் சாதனங்கள், வீடியோ கேமராக்கள் மற்றும் ஸ்டில் கேமராக்கள், டிவி தயாரிப்பு என ஜப்பான் நிறுவனங்கள் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்கள் வரும் மே மாதத்தில் மீண்டும் செயல்பட துவங்கும். முழு உற்பத்தியை அடைய ஆண்டு இறுதியாகி விடும் என்பதால் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து அதன் விலை உயரும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு நேரம் குறைப்பு : தேர்தல் கமிஷன்


சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, தங்கள் பொன்னான ஒட்டுகளை தங்களுக்கு பி‌டித்த வேட்பாளர்களுக்கு பதிவு செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல்களில் ஒட்டுப்பதிவு நேரம் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கமுடியாது : சென்னை ஐகோர்ட்



சென்னை : சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், திறம்படவும் நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பணம், பொருள் பறிமுதல் தொடர்பாக பல பொதுநல வழக்குகள் இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், ‌பணம், பொருட்கள் பறிமுதல் செய்யக்கூடாது என்று கண்டிப்பாக தாங்கள் தெரிவித்துள்ளோம். தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.