Wednesday, August 8, 2012

இப்போது நீங்கள் ஜக்காத் சம்மந்தமான கேள்வி கேக்க ..........



இன்று(08/08/2012) இரவு தக்வா பள்ளியில் நடைப்பெறும்  சிறப்பு பயானில் ஜக்காத் குறித்த சந்தேகங்களுக்கு மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சியில் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் நமது அதிரை தண்டர் சார்பாக சிறப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் சந்தேகங்களை பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் adiraithunderlive@gmail.com.


குறிப்பு: மின் அஞ்சல் அனுப்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் கேள்வியினை தெளிவாக குறிப்பிடவும்.

FLASH NEWS நாளை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும்  பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுக் காலண்டரில் செப்டம்பர் 8ம் தேதி, என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணஜெயந்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஓங்கட்டும் இஸ்லாமியர்களின் குரல்! அதிரட்டும் மூன்று நகரங்களின் திடல்!!


ஆக்ஸ்ட் 15-ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது இது குறித்து அதன் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும். அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.
இந்த தேசத்தை அன்னியர்கள் அடிமைப் படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்ட போதும் நமது முன்னோர்கள் ""என்ன நடந்தால் நமக்கென்ன'' என்று இருந்திடாமல் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடி மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் விதத்திலும், சுதந்திர உணர்வையும், கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் முக்கிய நகரங்களில் ""சுதந்திர தின அணி வகுப்பையும்'' பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.

இந்த அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் மதுரை, நாகை, இளையான் குடி ஆகிய நகரங்களில் ""சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி'' நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்: மாட்டிய(மத்திய) அரசு கூறுகிறது!


புதுடெல்லி:ஏராளமானோர் பலியான அஸ்ஸாம் வகுப்பு கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என மத்திய அரசு கூறுகிறது. போடோ பிரிவினை பயங்கரவாதிகளுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே அஸ்ஸாமில் நடந்த வகுப்பு கலவரத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் தற்பொழுது கட்டுக்குள் இருப்பதாகவும், புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அஸ்ஸாமில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மீண்டும் அஸ்ஸாமில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐந்து இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிராங் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்ராஜரில் இரவு கால ஊரடங்கு உத்தரவு மட்டுமே தொடர்கின்றது. இங்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பஸ்கா மற்றும் துப்ரி மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு நீடிக்கிறது. நேற்றும் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. துணை ராணுவமும், போலீஸும் ரோந்து பணியை தொடர்கின்றன. அஸ்ஸாம் கலவரத்தில் இதுவரை 61 பேர் கொல்லப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரமாகும்

மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி!


காஸ்ஸா:மஸ்ஜிதுல் அக்ஸா என்றழைக்கப்படும் பைத்துல் முகத்தஸை பாதுகாக்க கோரி காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஃபலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் இப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
பைத்துல் முக்கத்தஸின் தற்போதைய முற்றத்தை பூந்தோட்டமாக மாற்ற யூத சியோனிச அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கினர். பல்வேறு மஸ்ஜிதுகளில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டம் ஜபலிய்யா சாலையில் நிரம்பி வழிந்தது.
யூதர்களின் சதித்திட்டத்திற்கு எதிராகவும், யூத தலைவர்களுக்கு எதிராகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க முஸ்லிம்களை ஊக்கப்படுத்தும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
யூதர்களின் சதித்திட்டங்கள் மற்றும் தாக்குதல்களில் இருந்து அக்ஸாவை பாதுகாக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்பதை பேரணியில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் திரள் நிரூபிப்பதாக போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முஹம்மது அபூ அஸ்கர் தெரிவித்தார்.

ஜக்காத் பற்றி ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விளக்கம் Mp3 பிறை-19

ஜக்காத் பற்றி ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விளக்கம் Mp3 பிறை-19

Tuesday, August 7, 2012

இன்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயானில் கேள்வி-பதில் நிகழ்ச்சி

இன்று(07/08/2012) இரவு தக்வா பள்ளியில் நடைப்பெறும்  சிறப்பு பயானில் ஜக்காத் குறித்த சந்தேகங்களுக்கு மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பதில் அளிக்கும்  நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்  இந்நிகழ்ச்சியில் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் நமது அதிரை தண்டர் சார்பாக சிறப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் சந்தேகங்களை பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் adiraithunderlive@gmail.com.

குறிப்பு: மின் அஞ்சல் அனுப்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் கேள்வியினை தெளிவாக குறிப்பிடவும்.

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் Mp3 - பிறை 18

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் Mp3 - பிறை 18

Monday, August 6, 2012

மாத தவணையில் வட்டியில்லாமல் வீட்டு மனை விற்பனை திட்டம்!

மாத தவணையில் வட்டியில்லாமல் வீட்டு மனை விற்பனை திட்டம்!

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் Mp3 - பிறை 17

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் Mp3 - பிறை 17