Wednesday, April 27, 2011

வயிற்றில் புண்ணா...?



வயிற்றுப்புண் இருவகையில் ஏற்படுகிறது. அவை உணவு முறை, மன அழுத்தம்: உணவு முறையில் மாறுபாடு கொண்டவர்களில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு வயிறுதான். நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறும் வயிற்றில் உள்ள அபாய வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப்புண்ணை உண்டாக்குகிறது.

* அதுபோல் மனம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகிறது.

* உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

* அதிக சூடான பானங்களை, குடிக்கக்கூடாது. அதுபோல் வேகமாகவும் அருந்தக்கூடாது.

* சூடான உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.

* அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

* புளி, காரம் இவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மது, போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும்.

* எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

* பசித்த பின் உணவு அருந்த வேண்டும். அதிகமாக உணவு அருந்தக்கூடாது.

* அதிகமாக புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர், மோர் கெடுதலை ஏற்படுத்தும்.

* கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்­ணீராவது குடிக்க வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்

இஷ்ராத் ஜஹான் வழக்கு குஜராத்தின் 14 மூத்த காவலதிகாரிகள் கூட்டு


அஹ்மதாபாத்:இஷ்ராத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத்தில் பதினான்கு ஐ.பி.ஸ் அதிகாரிகளுக்குள்  பொறாமை மற்றும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இவ்வழக்கை சி.பி.ஐ அல்லது சிறப்பு புழனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
ஐ.ஜி சதீஸ் வர்மா மற்றும் ஐ.பி.ஸ் அதிகாரி ஜி,எல்.சிங்கால் உள்ளிட்ட பதினான்கு அதிகாரிகள் மூத்த அதிகாரிகளுடன் உள்ள காழ்புணர்ச்சி காரணமாக குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர். இஷ்ராத் ஜஹான் என்கவுன்டரின் போது சதீஸ் வர்மா சிறப்பு  புழனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்தவர்.
குஜராத் உயர்நீதி மன்றம் தற்போது சதீஸ் வர்மாவுக்கு இஷ்ராத் ஜஹான் வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும்  வழங்கியிருந்தது. மேலும் குஜராத் ஐ.பி.ஸ் அதிகாரி மோகன் ஜஹா நிர்வாக பொறுப்பு வகிப்பார் எனவும் கூறியிருந்தது. சிறப்பு  புழனாய்வு குழுவின் தலைவர் கர்னைல் சிங் தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான பயணிகளிடம் கூடுதல் கட்டணம் : சுப்ரீம் கோர்ட் தடை



புதுடில்லி: விமான பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க டில்லி உயர்நீதிமன்றம் விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு: டில்லி சர்வதேச விமான நிலையம் மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையம் போன்றவை விமான பயணிகளிடம் விமான வளர்ச்சி கட்டணமாக வசூலித்து வந்தது. இதன்படி மும்பை சர்வதேச விமான நிலையம் உள்ளூர் பயணிகளிடம் ரூ100, வெளிநாட்டு பயணிகளிடம் ரூ.600-ம், டில்லி சர்வதேச விமான நிலையம் உள்ளூர் பயணிகளிடம் ரூ.200,வெளிநாட்டு பயணிகளிடம் ரூ.ஆயிரத்து 300 என வசூலித்து வந்தது. இது போன்ற கட்டணங்களை வசூலிக்க கூடாது என நுகர்வோர் அமைப்பு ஒன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடுத்திருந்தது. இருப்பினும் இரு விமான நிலையங்களிலும் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ஆர்.வி ரவீந்திரன் மற்றும் ஏ.கே. பட்னாயக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் எந்த ஒரு சட்ட வரைவு இல்லாமல் பணம் பெறுவது கூடாது இந்த வழக்கைபொறுத்தவரையில் ஏர்போர்ட் எக்கனாமிக் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் அனுமதி பெற வில்லை.எனவே விமான பயணிகளிடம் எந்த விதமான கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்றும் இதுகுறித்த டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லுபடியாகும் என அவர்கள் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசத்திற்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த சேவைகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை



APRIL 26 இந்திய திருநாட்டில் மதசார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த தன்னலமற்ற சேவைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டதாக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி நீதியரசர் மார்கண்டேய கட்ஜு வேதனை தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக  மாவீரன் திப்புசுல்தான் இந்த தேசத்திற்காக  தேச மக்களுக்காக சாதி மத இன வேறுபாடு பார்க்காமல் சேவையாற்றியதை வேண்டுமென்றே வரலாற்றுப் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளதாக  வேதனை தெரிவித்த மார்கண்டேய கட்ஜு, கஜனி முகமது பற்றி வெறுப்பூட்டும் கருத்துக்களை பரப்பியவர்கள், திப்பு சுல்தான் 153 ஹிந்து கோயில்களுக்கு நிதி உதவி செய்து ஹிந்து மக்களால் மறக்க முடியாத மாமன்னனாக விளங்கியதை இருட்டடிப்பு செய்தது ஏன்? என்றும் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பினார்.

நாட்டில் தொடர்ந்து சமூக ஆர்வலர்களாலும் சமூக வியல் அறிஞர்களாலும்  மத சார்பற்ற  சரித்திர நிபுணர்களாலும் பல்வேறு தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வந்த இந்த கருத்துக்களை முதல் முதலாக இந்தியாவின் உயர்நீதிபீடமாம்   உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பகிரங்கமாகக்குறிப்பிட்டு  வேதனை தெரிவித்திருப்பது இந்திய சமூக தளத்தில் முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் நீதிபதி மார்கண்டேய கட்ஜு உரையாற்றும் போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவுத் நவாபுகள் ஆட்சி செய்யும்போது உண்மையான மதசார்பற்ற ஆட்சியாளர்களாக விளங்கினார்கள் என்ற உண்மையை மறைத்து விட்டார்கள். அதற்கு காரணம் நம் தேசத்தில் வளர்ந்து வரும் மத வாதத்தை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

விக்கிலீக்ஸ்:நிரபராதிகளை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கும் அமெரிக்கா

1212
வாஷிங்டன்:சிறைக்கைதிகளை சித்தரவதைச் செய்வதில் உலகப் புகழ் பெற்ற குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலோர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கூறுகிறது.
‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா 780 பேரை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கி வருகிறது. இவர்களில் 220 பேரை ஆபத்தானவர்கள் என்ற பட்டியலிலும், 150 பேரை நிரபராதிகள் என்ற பட்டியலிலும் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. 380க்கும் மேற்பட்டவர்கள் குறைந்த அளவு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஏறத்தாழ 759 கம்பிவட ஆவணங்கள் விக்கிலீக்ஸ் மூலம் கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன. ரகசிய ஆவணங்கள் கசிந்தது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்த பெண்டகன் தீவிரவாதத்திற்கு எதிரான முயற்சிகளை இது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக விசாரணை நடத்தும் வேளையில் சிறைக்கைதிகள் கூறியதாக குவாண்டனாமோ ஆவணங்கள் கூறுகின்றன. உஸாமா பின்லேடன் பிடிக்கப்பட்டால் தாக்குதல் நடத்துவதற்காக அல்காயிதா ஐரோப்பாவில் அணு ஆயுதத்தை ஒளித்துவைத்துள்ளதாகவும் சிறைக்கைதிகள் அளித்த தகவல் என அந்த ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை சித்திரவதைச் செய்யும் முறைகளைக் குறித்தும், விசாரணை நடத்தும் வழிமுறைகளைக் குறித்தும் சிறிய விபரங்கள் மட்டுமே அடங்கியுள்ளன.
குவாண்டனாமோவில் நிரபராதிகளை அமெரிக்கா சித்தரவதை செய்கிறது என குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்துள்ளன. ஆனால், முதன் முதலாக இந்த சித்தரவதைகள் குறித்து, நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும் அமெரிக்காவிற்கு நன்றாக தெரியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தானவர்களின் பட்டியலிலிருந்து ஏராளமான நபர்களை விடுதலைச்செய்த பிறகும் பல வருடங்களாக நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த விவசாயிகள், ஓட்டுநர்கள், சமையல்காரர்கள் ஆகியோராவர்.
2009 ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பாரக் ஒபாமா வெளியிட்ட பிரகடனங்களில் ஒன்று ஒரு வருடத்திற்குள் குவாண்டனாமோ சிறை மூடப்படும் என்பதாகும்.
குழந்தைகள், முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என சகல தரப்பினரும் தவறான காரணங்களுக்காக இங்கு அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாகியுள்ளனர். இங்கு அடைக்கப்பட்டவர்களில் 89 வயதான முதியவரும், 14 வயது சிறுவனும் அடங்குவர். முதியவரை சிறையில் அடைத்ததற்கு காரணம் அவரது வீட்டிற்கு முன்பு சந்தேகத்திற்கிடமான சில தொலைபேசி எண்கள் கிடந்தனவாம். 14 வயது சிறுவன் ஒருவர் குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டதற்கான காரணம் உள்ளூர் தாலிபான் தலைவர்கள் பற்றிய தகவல்கள் அவருக்கு தெரியும் என்ற சந்தேகத்திலாகும்.
குவாண்டானாமோ சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உய்கூர் முஸ்லிம்களும் கணிசமான பேர் உள்ளனர். மேலும் அல்காயிதா மற்றும் தாலிபானுடன் எவ்வித தொடர்புமில்லாத இங்கிலாந்து நாட்டு குடிமக்களான முஸ்லிம்களும் குவாண்டனாமோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பல கைதிகளை சித்திரவதைச் செய்து வாக்குமூலம் வாங்கியுள்ளது அமெரிக்கா. சித்தரவதைக்கு உள்ளாகும் 100க்கும் மேற்பட்ட கைதிகள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
பிறநாடுகளில் மனித உரிமைகள் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்கா, மனித உரிமைகளை சற்றும் பேணாமல், சர்வதேச சட்டங்களை காற்றில் பறத்திவிட்டு முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவிகளை கைது செய்து சிறையிலடைத்து சித்தரவதைக்கு உள்ளாக்கி வருகிறது. மனித நேயமோ, நாகரீகமோ கடுகளவும் இல்லாமல் அமெரிக்கா நடத்திவரும் இத்தகைய அக்கிரமங்களுக்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்குமோ?

Tuesday, April 26, 2011

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்துகிறது இந்தியன் ஆயில்!!


Petrol prices


டெல்லி: பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, கடந்த ஜுன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அப்போதிருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. கடைசியாக, ஜனவரி மாதம் விலை உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்கியதால், மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், அதன்பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் மே 10ம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது. எனவே, பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி கேட்டபோது, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் ரன்பீர் சிங் புடோலா கூறுகையில், மக்களும், அரசும் அடங்கிய அமைப்பின் ஒரு அங்கமாகவே நாங்கள் உள்ளோம். குறிப்பிட்ட முடிவை எடுத்தால், எங்களுக்கு எதிராக சூழ்நிலை திரும்பி விடும். எனவே, சிறிது காலத்துக்கு இந்த நஷ்டத்தை தாங்கிக்கொள்ளலாம் என்று விலையை உயர்த்தாமல் இருந்தோம். தற்போது, கூடிய விரைவில் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இன்றைய நிலையில், பெட்ரோலை லிட்டருக்கு ரூ.7.50 நஷ்டத்தில் விற்று வருகிறோம். டீசலை 18 ரூபாய் 11 காசுகளும், மண்ணெண்ணெயை 28 ரூபாய் 33 காசுகளும், கியாஸ் சிலிண்டரை 315 ரூபாய் 86 காசுகளும் நஷ்டத்தில் விற்று வருகிறோம்.

இதனால் தினமும் எங்களுக்கு ரூ.297 கோடி நஷ்டம் ஏற்படுறது. மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடிவரை நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். இதன்மூலம், கடந்த மார்ச் மாதத்துடன், எங்களது கடன் அளவு ரூ.53 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது என்றார்.

லிட்டருக்கு ரூ. 3 உயரும்

வரும் மே 15ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு பற்றி அறிவிக்கப்படும் என்றும், லிட்டருக்கு ரூ. 3 வரை இந்த உயர்வு இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.50க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல்
கடந்தாண்டு தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, ரூ.60யை தாண்டிவிட்டது.

இந் நிலையில் மே 10ம் தேதி இரவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம். இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 70 ஆக உயர வாய்ப்புள்ளது

குஜராத் இனப்படுகொலை:நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு புறக்கணித்தது – சஞ்சீவ் பட்


புதுடெல்லி:”குஜராத் இனப் படுகொலையில் பெரும் புள்ளிகளின் பங்கினைக் குறித்து நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு அலட்சியம் செய்தது” என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
15472014-8467-43fc-a484-8a0a9bb083a9MediumRes“நான் அளித்த ஆதாரங்களை பரிசோதிக்கக்கூட ஆர்.கே.ராகவன் தலைமையிலான புலனாய்வுக்குழு தயாராகவில்லை” என உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
“2002 பிப்ரவரி 26-27 தேதிகளில் கோத்ராவில் நடந்த முக்கிய தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள் அடங்கிய ஒரிஜினல் ப்ளாப்பி டிஸ்க்குகளும், பிரிண்டவுட்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்தேன். இனப் படுகொலையில் மேல்மட்டத்தின் சதித்திட்டம் குறித்து விபரங்கள் அதிலிருந்து கிடைத்திருக்கும். ஆனால், 2009 நவம்பர் மாதம் வரை இந்த ஆவணங்கள் பரிசோதிக்கப்படவில்லை. இந்த தொலைபேசி ஆவணங்களில் அரசு உயர் அதிகாரிகளின் முக்கியத்துவம் வாய்ந்த அழைப்புகளும் அடங்கியுள்ளன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியைக் குறித்தும் அந்த ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருக்கும்” என சஞ்சீவ் பட் கூறுகிறார்.
முஸ்லிம் இனப் படுகொலையில் குஜராத் அரசின் பங்கினைக் குறித்து சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய் 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவைக் குறித்தும் சஞ்சீவ் பட்டின் பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் அளித்ததாக சஞ்சீவ்பட் கூறுகிறார்.

கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!

சென்னை:ஏப்ரல் 26, வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது. இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது: தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும். ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது. நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்

மோடியுடன் நடந்த சந்திப்பில் பட் கலந்துகொள்ளவில்லை – முன்னால் டிஜிபி

modi_meeting_chakravatiphono1a_271x181
அஹ்மதாபாத்:குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள குஜராத் காவல்துறையின் மூத்த அதிகாரி பட் கலவரத்திற்கு முன் 2002 பிப்ரவரி 27  ஆம் தேதி மோடியுடன் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என முன்னால் டி ஜி பி தெரிவித்துள்ளார்.
மோடியுடன் நடந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஹிந்துக்கள் தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ள உதவ வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியதாக பட் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குழப்பம் விளைவிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ் பட் அந்த கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை எனவும் இதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் தான் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மோடி ஆட்சியில் இருக்கும் வரை பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என காங்கிரஸ் தில்லியில் தெரிவித்துள்ளது.
2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் கூறியுள்ளது. கலவரம் நடக்கும் சமயம் முஸ்லிம்களை பாதுகாக்கும் செயலில் ஈடுபட கூடாது என காவல்துறை அதிகாரிகளிடம் மோடி தெரிவித்துள்ளது தவறு என்றும் இது பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.

எல்லோரும் அறிந்தது போல பிஜேபி மோடியை பாதுகாக்கும் வேலையில் இறங்கியுள்ளது. மோடி கலவரத்தை ஆதரித்து இருப்பார் என்று கூறுவதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என பிஜேபி முன்னால் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பட் தன்னுடைய பிரமாண பத்திரத்தில் டிஜிபி அழைப்பினைத் தொடர்ந்து தான் மோடியுடன் கூடிய சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பட் கலவரம் நடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் உளவுத்துறையின் காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்தவர். எனினும் மோடி சிறப்பு புலனாய்வு குழுவில் பட் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார். ஆனால் பட்டின் டிரைவர் தாரா சந்த் யாதவ்  டிஜிபியுடன் பட் முதலமைச்சர் வீட்டிற்கு சந்திப்பு நடந்த நாளில் சென்றதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

தொ(ல்)லைகாட்சியால் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு-அதிர்ச்சி தகவல்

26 APR 2011
child with tv
தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம் பெறும் சாதனம் தொலைக்காட்சி தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசி, வி‌ளையாடுவதை விட தொலைக்காட்சி முன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
ஓர் இடத்தில் அமராமல் ஓடி ஆடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சிரமப்படும் தாய்மார்களோ, குழந்தைகயை ஓர் இடத்தில் அமர வைக்க தொலைக்காட்சியில் ஏதாவது கார்டூன் சேனலை போட்டு விட்டு உணவு கொடுக்கின்றனர்.
இதன் விளைவு இன்றைய இளம் தலைமுறையினர் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை தொலைக்காட்சி பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த ஆய்வில் இறங்கியது சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு.
3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சி தரும் ‌தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடி, ஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது.
இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது.
அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து விட்டு அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது