Tuesday, April 26, 2011

குஜராத் இனப்படுகொலை:நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு புறக்கணித்தது – சஞ்சீவ் பட்


புதுடெல்லி:”குஜராத் இனப் படுகொலையில் பெரும் புள்ளிகளின் பங்கினைக் குறித்து நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு அலட்சியம் செய்தது” என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
15472014-8467-43fc-a484-8a0a9bb083a9MediumRes“நான் அளித்த ஆதாரங்களை பரிசோதிக்கக்கூட ஆர்.கே.ராகவன் தலைமையிலான புலனாய்வுக்குழு தயாராகவில்லை” என உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
“2002 பிப்ரவரி 26-27 தேதிகளில் கோத்ராவில் நடந்த முக்கிய தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள் அடங்கிய ஒரிஜினல் ப்ளாப்பி டிஸ்க்குகளும், பிரிண்டவுட்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்தேன். இனப் படுகொலையில் மேல்மட்டத்தின் சதித்திட்டம் குறித்து விபரங்கள் அதிலிருந்து கிடைத்திருக்கும். ஆனால், 2009 நவம்பர் மாதம் வரை இந்த ஆவணங்கள் பரிசோதிக்கப்படவில்லை. இந்த தொலைபேசி ஆவணங்களில் அரசு உயர் அதிகாரிகளின் முக்கியத்துவம் வாய்ந்த அழைப்புகளும் அடங்கியுள்ளன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியைக் குறித்தும் அந்த ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருக்கும்” என சஞ்சீவ் பட் கூறுகிறார்.
முஸ்லிம் இனப் படுகொலையில் குஜராத் அரசின் பங்கினைக் குறித்து சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய் 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவைக் குறித்தும் சஞ்சீவ் பட்டின் பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் அளித்ததாக சஞ்சீவ்பட் கூறுகிறார்.

0 comments:

Post a Comment