Tuesday, April 26, 2011

"கோவை ரெயில் நிலையத்தில் போலி போலீஸ்காரர் கைது “சோதனை செய்வது போல் நடித்து பயணிகள் பொருட்களை அபகரித்தார்"


கோவை ரெயில் நிலையத்தில் போலி போலீஸ்காரர் கைது “சோதனை செய்வது போல் நடித்து பயணிகள் பொருட்களை அபகரித்தார்”கோவை, ஏப். 25-
 
கோவை ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று இரவு பிளாட்பாரங்களில் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருச்சூர் செல்ல பயணிகள் ரெயில் நின்று கொண்டிருந்தது.
 
அந்த ரெயிலில் ஒரு வாலிபர் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்குவதை பார்த்தனர். சந்தேகமடைந்த போலீசார் அருகே சென்று பார்த்த போது அவர் பெண்கள் மற்றும் பயணிகளின் உடமை களை பரிசோதனை செய்வது தெரிய வந்தது.   அவரைப்பிடித்து விசா ரித்த போது புட்செல் பிரிவில் போலீசாக உள்ளேன் என்றார்.
 
நீங்கள் மட்டும் தனியாக வந்து சோதனை நடத்துகிறீர்களே, உங்களுடன் வேறு யாரும் வரவில்லையா என்று கேட்ட போது முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறினார். காக்கி நிற பேண்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்திருந்த அவர் போலீஸ் கெட்டப்பில் முடி வெட்டியிருந்தார். போலீசாரின் அதிரடி விசா ரணையில் அவர் போலி போலீஸ்காரர் என்பது தெரிய வந்தது. வசமாக மாட்டிக் கொண்டதும் நான் எம்.எல்.ஏ.விடம் கார் டிரைவராக இருந்தேன் என்று கூறி நழுவ முயன்றார்.
 
அவர் கூறிய தகவல் அனைத்தும் பொய் என்பதை அறிந்த போலீசார் கைது செய்தனர்.   கைதான அந்த வாலிபர் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த பூபதி (32) என்று தெரியவந்துள்ளது. இவர் போலீஸ் போல் சோதனை நடத்தி பயணிகளின் பொருட்களை பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுள்ளார்.
 
இதற்கு முன்னர் இதே போல் பெண்களிடம் நகை-பணத்தை பறித்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்தது. பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment