Sunday, April 10, 2011

இஸ்ரேலியப் படைகள் புதிய நரபலி ஆட்டம்.


இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனம் காஸா வட்டகையில் புதிய நரபலிகளை எடுக்க ஆசைகொண்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கமைவாக கடந்த மூன்று தினங்களாக இஸ்ரேலின் புதிய தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. நேற்று  நடைபெற்ற தாக்குதலில் நான்குபேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 18 பாலஸ்தீனர்கள் மரணமடைந்து 65 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2008 – 2009 ற்குப் பின்னர் இடம் பெற்றுள்ள இஸ்ரேலின் மோசமான தாக்குதல்கள் இவை என்று பாலஸ்தீன தரப்பு தெரிவித்தது. அதேநேரத்தில் ஹமாஸ் அமைப்பினர் 15 ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவியுள்ளார்கள். பாஸ்தீன – இஸ்ரேல் மோதல்களுக்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கிய புதிய ஆயுதங்களும் காரணமாக உள்ளது. இந்த மோசமான ஆயுதங்களின் பரிசோதனையையும் இஸ்ரேல் நடாத்திவருகிறது. கடந்த வாரம் இஸ்ரேலிய அதிபர் சீமன் பரஸ்சை சந்தித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறும்போது, இரு தரப்பும் விரைவாக ஒரு சமாதானத்திற்கு வரவேண்டும் என்று கேட்டிருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருவதால் ஒபாமா பாலஸ்தீன பிரச்சனையை ஒரு கருவியாக எடுக்க இருக்கிறார். அப்படியாக பாலஸ்தீன பிரச்சனைத் தீர்வுக்குள் ஒபாமா வருவதானால் முதலில் ஒரு பாரிய தாக்குதல் அவசியம். அப்பொழுதுதான் அவரால் தாக்குதலை நிறுத்தி நல்ல பெயர் எடுக்க முடியும். ஒவ்வொரு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் பாலஸ்தீனம் எரிகிறது.

0 comments:

Post a Comment